Wednesday, December 27, 2006

ஐஸ்வர்யா ராயின் முதல் கணவர்...

முன்னால் உலக அழகி ஐஸ்வர்யா ராய் சல்மான் கான், விவேக் ஓப்ராய், அபிஷேக் பச்சன் என்று பலருடன் இணைத்து பேசப்பட்டாலும், அவருடைய முதல் கணவர் யார் என்பதை அறிந்து திடுக்கிட்டேன்.

வாரனாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர்/ சங்கட் மோச்சன் (Sankat Mochan) கோவிலில் மாங்கல்ய தோஷத்துக்கு பரிகார பூஜை நடத்தி, யாகம் வளர்த்து (யாஷ் -கிர்த்தியானா) வாழை மரத்தை திருமணம் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

மங்களூர் அருகில் உள்ள மங்கல்பாடியை சேர்ந்த ஜோதிடர் சந்திரசேகர் சுவாமியின் அறிவுரையின் பேரில்தான் இந்தக் கல்யாணம் நடந்ததாம். ஹரிவன்ஷ்ராய் பச்சனின் 99-ம் பிறந்தநாளையொட்டி வாரனாசியில் நடந்த பூஜையின் போது ஐஸ்- அபிஷேக்கின் இடது புறம் இருந்ததை வைத்துத்தான் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து விட்டது என்று புரளிகள் கிளம்பியது. ஆனால் ஐஸ்வர்யாவின் மாங்கல்ய தோஷம் காரணமாகவும், பிற தோஷங்களின் ஆதிக்கம் இருந்ததாலும் அவர்களது திருமணம் இந்த ஆண்டின் (2006) கூட்டுத்தொகை 8 என்பதாலும் அவர்களது திருமணம் 2007-ல் மகர சங்கராந்திக்குப் பிறகு ஜனவரி 14-க்கும் பிப்ரவரி 27-ம் தேதிக்கும் இடையில் நடைபெறலாம் என்று அந்த ஜோசியரே சொல்லியிருக்கிறார்.

இவரது அறிவுரையின் பேரில்தான் தோஷம் நீங்க ஐஸ்வர்யா ராயுக்கும் வாழை மரத்திற்கும் திருமணம் நடந்ததாம்.

எனது கேள்வியெல்லாம்:

1) இந்த 21-ம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு மூடப்பழக்கத்திற்கு எப்படி துணைப் போக முடிந்தது ஐஸ்வர்யாவினால்?

2) அப்படியானால் அழகிப் போட்டிகளில் அறிவுக்கும் வேலை உண்டு என்பது வெறும் கண்துடைப்புதானா?

எப்படியோ அந்த வாழை மரம் அதிர்ஷ்டசாலி என்று பல ஆண்கள் வெதும்பினாலும் ஒரு முட்டாள் பெண்ணை மணந்த துயரமே மிஞ்சும் அந்த வாழை மரத்திற்கு என்பது என் கணிப்பு.

34 comments:

Santhosh said...

அறிவுக்கும் நம்பிக்கைக்கும் பெரிய உறவு எதுவும் இல்லை. எனக்கு தெரிந்து மிகப்பெரிய அறிஞர்களுக்கு கூட சின்ன சின்ன மூட நம்பிக்கைகள், வழக்கங்கள் இருக்கும் (இங்க NBAவில் யாரோ ஒரு வீரர் பெயர் ஞாபகம் இல்லை ஒவ்வொரு முக்கியமான ஆட்டத்திற்கும் ஒவ்வொரு காலுக்கும் இரண்டு காலுறைகளை அணிவாராம்.) ஏன் இந்த மெயிலை 20 பேருக்கு அனுப்பாவிட்டால் அப்படி என்று முடியும் மெயில்கள் எவ்வுளவு வருகின்றன. இதை வேண்டுமானால் இப்படி சொல்லலாம் அறிவு வேண்டாம் என்று சொன்னாலும் மனசு கேட்பதில்லை.

Jazeela said...

//அறிவுக்கும் நம்பிக்கைக்கும் பெரிய உறவு எதுவும் இல்லை.// அப்ப சின்ன உறவு இருக்குங்களா?
//மிகப்பெரிய அறிஞர்களுக்கு கூட சின்ன சின்ன மூட நம்பிக்கைகள், வழக்கங்கள் இருக்கும// மூட நம்பிக்கைகள் இருந்தால் அவர்கள் பெரிய அறிஞர்களாக ஒப்புக்கொள்ளவே கூடாது.
//ஏன் இந்த மெயிலை 20 பேருக்கு அனுப்பாவிட்டால் அப்படி என்று முடியும் மெயில்கள் எவ்வுளவு வருகின்றன. // அப்படி வந்தால் ஒரே சுடக்கில் அழித்து விடுங்கள். அந்த மூடநம்பிக்கையை அங்கேயே அறுத்துவிடாமல் அதையும் நம்பி மற்றவர்களுக்கு அனுப்புபவர்களை மூடன் என்பேன்.

Santhosh said...

//அப்ப சின்ன உறவு இருக்குங்களா?//
:))

//மூட நம்பிக்கைகள் இருந்தால் அவர்கள் பெரிய அறிஞர்களாக ஒப்புக்கொள்ளவே கூடாது.//
மனிதர்களிடம் இருக்கும் சிறு குறைகளை பெருசு படுத்தக்கூடாது :)).

//அப்படி வந்தால் ஒரே சுடக்கில் அழித்து விடுங்கள். அந்த மூடநம்பிக்கையை அங்கேயே அறுத்துவிடாமல் அதையும் நம்பி மற்றவர்களுக்கு அனுப்புபவர்களை மூடன் என்பேன்.//
இதை நானும் ஒத்துக்கொள்வேன்/செய்கிறேன்.

மாசிலா said...

சீ! பாவம் அந்த வாழமரம்!
வருடத்தை நல்லபடியா முடிக்கறதுக்கு இந்த அருமையான 'சிரிப்புக்கு' ரொம்ப நன்றி.

Jazeela said...

//இதை நானும் ஒத்துக்கொள்வேன்/செய்கிறேன்// சந்தோஷம் சந்தோஷ் ;-)

//இந்த அருமையான 'சிரிப்புக்கு' ரொம்ப நன்றி.// மூடநம்பிக்கை ஒழிகன்னு சொன்னது சிரிப்பாதான் இருக்கும். ஓ! வாழைமர சிரிப்பா ;-)

சிநேகிதன் said...

முட்டளுக்கு வாழ்க்கைப்பட்ட மறுநிமிடமே பாவம் முட்டாள்களின் கைகளால் வெட்டப்பட்டு உயரிழந்த வாழை மரத்தின் நிலைதான் ஓட்டுப்போட்டு ஏமாந்த பகுத்தறிவு பேசும் நம்மக்களின் நிலை!

Jazeela said...

பரவாயில்லையே சிநேகிதா எல்லாம் நம்ப கட்சியாவே இருக்கீங்களே. என்ன ஜாதகமோ, என்ன ஐதீகமோ, நீங்க சொன்னா மாதிரி சாஞ்சது நம்ம வாழைமரம்தான்.

Anonymous said...

Is there any connection between beauty & brain ?

Anonymous said...

ஜெசிலா,
இதற்கு வேறு காரணம் சொல்கிறார்கள்.. சமீபத்தில் வெளிவந்த தூம்-2 படத்தில் ஐஸ் நடித்த சில காட்சிகள் சர்ச்சைக்குரியனவாக இருந்ததாகவும், அவரையும் ஹிரித்திக் ரோஷனையும் சேர்த்து பத்திரிக்கைகள் ஏதும் கதை கட்டி விடுவதைத் தவிர்க்கவே, இது போன்ற ஒரு சம்பவத்தை ஐஸ் மற்றும் அமிதாப் குடும்பத்தினர் திட்டமிட்டிருப்பதாகவும், எங்கோ படித்தேன்.

இப்போ பாருங்க, இந்த மூட நம்பிக்கை, ஐஸுக்கும் அபிஷேக்குக்கும் கல்யாணம் ஆகிடுச்சா என்று பேசிக் கொண்டே மீடியாவின் கவனம் நன்றாக திசைதிரும்பி விட்டது..

எனக்கென்னவோ நமது மீடியாக்கள் மக்கள் மீது வைத்திருக்கும் "மூட" நம்பிக்கைகளை ஐஸ் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது :)))))

Jazeela said...

இல்ல பொன்ஸ் நீங்க சொல்வது அரைகுறையா சரி. ஹிரித்திக்குடன் நெருங்கி நடித்த காட்சிகள் அபிக்கு பிடிக்காமல் போக சில பிளவுகள் நடுவில் வந்தாலும் இருவருக்குமே ஒருவரை ஒருவர் மறக்கவோ பேசாமலிருக்கவோ முடியாமல் போய் மீண்டும் இணைந்து, ஜாதகத்தை வெகுவாக நம்பும் அமீதாப்பை ஒருவழியாக தோஷம் நிவர்த்திக்கு ஒப்புதல் வாங்கி, இப்ப பிப் 19 தேதியும் குறித்து, விசேஷ முகூர்த்த ஆடைகளை நம்ம பிரபல ஆடை வடிவர்கள் தாலுல்லா & அன்னசிங் அவர்களது கைகரியத்தைக் காட்ட தயாராகுகிறார்கள்.

ஊடகங்கள் மக்களை ஏமாற்றும் ஆனால் மற்றவர்கள் ஊடகங்களை ஏமாற்ற முடியாது ;-)

Anonymous said...

ஆகா. அப்போ ஐஸுக்குக் கல்யாணமா??
ஜோவுக்குப் பின் எனக்குப் பிடித்த நடிகை ஐஸ்.. ஐஸுக்கும் கல்யாணம்.. ரொம்ப மகிழ்ச்சி :))))

Anonymous said...

//முட்டளுக்கு வாழ்க்கைப்பட்ட மறுநிமிடமே பாவம் முட்டாள்களின் கைகளால் வெட்டப்பட்டு உயரிழந்த வாழை மரத்தின் ...//

அப்ப ஒட்டகம் வெட்டுவது ரொம்ப புத்திசாலித்தனம் இல்லையா? பகுத்தறிவு சிங்கக்குட்டிகளுக்கு தைரியம் இருந்தால் அதை தட்டி கேட்பதுதானே!

Jazeela said...

//அப்ப ஒட்டகம் வெட்டுவது ரொம்ப புத்திசாலித்தனம் இல்லையா? பகுத்தறிவு சிங்கக்குட்டிகளுக்கு தைரியம் இருந்தால் அதை தட்டி கேட்பதுதானே!// பகுத்தறிவு நிறைந்த நீங்கள் பெயரில்லாமல் அனானியாக எழுதுவது மட்டும் சரியா?

Anonymous said...

//பகுத்தறிவு நிறைந்த நீங்கள் பெயரில்லாமல் அனானியாக எழுதுவது மட்டும் சரியா? //

அதுக்கும் பகுத்தறிவுக்கும் என்னய்யா சம்பந்தம்? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு! ஊர்ல இருக்குற சைட்ல எல்லாம் ரெஜிஸ்டர் பண்ணி பொய்பேர் வச்சுக்குறது தான் பகுத்தறிவா?

Anonymous said...

சரி, வாழமரத்துக்கு திருமணம் மட்டும்தானா அல்லது முதலிரவும் உண்டா :) ?

Jazeela said...

//ஊர்ல இருக்குற சைட்ல எல்லாம் ரெஜிஸ்டர் பண்ணி பொய்பேர் வச்சுக்குறது தான் பகுத்தறிவா?// அப்படி பதிக்கிற ஆளுங்க கிட்ட போய் கேளு, இங்க வந்து கேட்டா?

Jazeela said...

////அப்ப ஒட்டகம் வெட்டுவது ரொம்ப புத்திசாலித்தனம் இல்லையா? பகுத்தறிவு சிங்கக்குட்டிகளுக்கு தைரியம் இருந்தால் அதை தட்டி கேட்பதுதானே!// என் பதிவில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவோ மற்ற மதத்தினருக்கு எதிராகவோ ஒரு வார்த்தைக்கூட இல்லாதபட்சத்திலும் நீங்கள் சம்பந்தமேயில்லாமல் 'ஒட்டகத்தைப்' பற்றி கேட்கிறீர்களே இதுதான் பகுத்தறிவா? அறிவேயில்லாதவரிடம் பகுத்தறிவைப் பற்றி பேசுவது நேர விரயம்.

Anonymous said...

//அறிவேயில்லாதவரிடம் பகுத்தறிவைப் பற்றி பேசுவது நேர விரயம். //
நன்றி. அதனால் தான் நானும் அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் இந்த பாழாய்ப்போன பகுத்தறிவுக்கு இன்னொரு செய்தி வந்துதொலைத்தது :(

உ.பியில் ஒரு முல்லா தன் கழுத்தை தானே அறுத்து குர்பானி கொடுத்திருக்கிறார்.

அந்த மூடத்தனத்தையும் கண்டித்து ஒரு பதிவிட்டு உங்கள் பகுத்தறிவையும் நடுநிலைமையையும் காட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.

வாசகன் said...

Anony,
இப்பதிவு மூடத்தனத்தை கண்டிப்பதற்காகவே ஜெஸிலா அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இதில் 'நீ மட்டும் யோக்கியமா?' என்கிற விதண்டாவாதம் ஏன்?

ஜெஸிலா எழுதியதாகப் பார்க்காமல் ஜெகதாம்பிகா எழுதியதாக நினைத்து யோசித்துப்பாருங்கள். ஆஃப்டர் ஆல், பெயர் தானா உங்கள் பிரச்னை?

BTW, நீங்கள் சொன்ன முல்லா செய்திக்கு லிங்க் கொடுங்கள். தற்கொலை இஸ்லாமில் ஹராம் (கூடாதது) என்பதால் நிச்சயம் முஸ்லிம்கள் கண்டிப்பார்கள். நீங்கள் கவலைப்படவேண்டாம்.

Anonymous said...

According to you only the fish bearing the Name of ALLAH is pakutharivu.. All others are foolish.. Right Madame

╬அதி. அழகு╬ said...

I wonder why the author allows useless anonymous' comment and explains for the same.

Anonymous said...

அன்பின் ஜெஸீலா,

//வாரனாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர்/ சங்கட் மோச்சன் (Sankat Mochan) கோவிலில் மாங்கல்ய தோஷத்துக்கு பரிகார பூஜை நடத்தி, யாகம் வளர்த்து (யாஷ் -கிர்த்தியானா) வாழை மரத்தை திருமணம் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.//

ஐஸ்வர்யா ராய் அவர் சார்ந்திருக்கும் மதத்தின்/நம்பிக்கையின் படி, அவரின் நல்வாழ்வுக்கென அவர் ஏற்றுகொண்ட வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒரு பூஜை/யாகம் செய்திருக்கிறார். நீங்கள் பொதுவாய் மூடநம்பிக்கையைச் சாடியிருந்தாலும், இன்னொரு மதத்தினரின் நம்பிக்கை சார்ந்த ஒன்றின் மீதுதான் விமர்சனத்தை வைத்து இருக்கிறீர்கள். ஒட்டகம் வெட்டுவது தொடர்பான அனானியின் கேள்விக்குண்டான பதிலை/கருத்தை/விமர்சனத்தைத் தராமல் அவரின் பெயரற்ற நிலையை பதட்டப்பட்டு ஏன் விமர்சிக்கிறீர்கள். நீங்கள் நடுநிலையாகத்தான் எழுதுகிறீர்கள் என்றால் உரிய பதிலை அல்லது விளக்கத்தை அல்லவா தரவேண்டும்??

மேலும்,
//என் பதிவில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவோ மற்ற மதத்தினருக்கு எதிராகவோ ஒரு வார்த்தைக்கூட இல்லாதபட்சத்திலும் நீங்கள் சம்பந்தமேயில்லாமல் 'ஒட்டகத்தைப்' பற்றி கேட்கிறீர்களே இதுதான் பகுத்தறிவா? //

மற்ற மதத்தினருக்கு எதிராக இல்லாதது ஏன் விவாதத்தை திசை திருப்புகிறீர்கள்?

வாழைமரத்தை திருமணம் செய்தது உங்களின் பகுத்தறிவின்/நம்பிக்கையின் படி மூடநம்பிக்கை என்றால் அதை நம்பும் கோடிக்கணக்கானவர்களின் மனதை புண்படுத்துகிறீர்கள்தானே? சிந்திக்கவும்

உங்களின் மத நம்பிக்கையின் படி நீங்கள் மூடநம்பிக்கைகளை பின்பற்றாதவராயிருக்கலாம். ஆயினும், உங்கள் மதத்தின் அடிப்படை நம்பிக்கைகளான 6 விடயங்களும் பகுத்தறிவின் அடிப்படையில் நம்பப்படுவதா, நம்பவேண்டும் (ஈமான்) என்பதற்காக நம்பப்படுவதா?

நியாயமாக இருந்தால் பதில் இடுங்கள்

நட்புடன்,
அசரீரி
அந்த அனானி அல்ல :)

Anonymous said...

//According to you only the fish bearing the Name of ALLAH is pakutharivu.. All others are foolish.. Right Madame//

:))

நெத்தியடி. ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம்ல சொல்லிப்போட்டான் அனானி!

Anonymous said...

மூடத்தனத்தை கண்டிப்பதை நான் கண்டிப்பாக வரவேற்குறேங்கண்ணா! அதே சமயம் எல்லா மூடத்தனங்களையும் சமமாக கண்டிக்கவேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.

Anonymous said...

//BTW, நீங்கள் சொன்ன முல்லா செய்திக்கு லிங்க் கொடுங்கள். தற்கொலை இஸ்லாமில் ஹராம் (கூடாதது) என்பதால் நிச்சயம் முஸ்லிம்கள் கண்டிப்பார்கள். நீங்கள் கவலைப்படவேண்டாம். //

லிங்க் - இந்த வார ஜீனியர் விகடனில் முழு செய்தியும் வந்திருக்கிறது. தற்கொலை மட்டுமல்ல, அடுத்தவர்களை கொலை செய்வதும் இஸ்லாத்தில் ஹராமே. அதனால் தீவிரவாதிகள் ஹராமிகள், உண்மையான இஸ்லாமியர்கள் இல்லையென்று இஸ்லாமிய சகோதர/சகோதரிகள் மற்றவர்களுக்கு புரியவைக்க வேண்டும். ஒரு முல்லா இவர்களுக்கு பத்துவா போட்டு மதத்தை விட்டே விலக்கிவிட்டால், இஸ்லாத்தின் மகிமை உலகுக்கு புரியும். ஆனால் நடக்குமா?

Anonymous said...

என்னங்க என்னோட பின்னூட்டம் வரவே இல்ல. பயந்துட்டீங்களா? விளக்கம் தெரிஞ்சுக்கனும்னு கேட்டேன், பதிவுல இடாட்டியும் asariiri@gmail.com இந்த மெயிலுக்கு அனுப்புங்க பதில.

அன்புடன், அசரீரி

Jazeela said...

அசரீரி,

நான் எவருடைய மத நம்பிக்கையையும் புண்படுத்துவதற்காக எழுதவில்லை என்பதை ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன். வாழை மரத்திற்குத் தாலி கட்டுவது கோடிக்கணக்கானவர்களின் நம்பிக்கை என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. ஒருவரின் நம்பிக்கக இன்னொருவருக்கு மூட நம்பிக்கையாக இருக்கலாம் என்றுநீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால், இந்த யுகத்திலும் வாழைமரத்திற்கு
தாலிகட்டியது ஐஸ்வர்யா என்பதால்தான் அப்படி எழுதினேன்.

இந்த விவாதம் வேறு திசையில் பயணிக்கத் துவங்குவதால் மேற்கொண்டு இதுகுறித்து நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை

வாசகன் said...

//மூடத்தனத்தை கண்டிப்பதை நான் கண்டிப்பாக வரவேற்குறேங்கண்ணா! அதே சமயம் எல்லா மூடத்தனங்களையும் சமமாக கண்டிக்கவேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.//

உங்கள் "தாழ்மையான வேண்டுகோளை" இந்தப்பதிவில் வந்து சொல்லும் 'நோக்கம்' தான் விளங்கவில்லை.

//தற்கொலை மட்டுமல்ல, அடுத்தவர்களை கொலை செய்வதும் இஸ்லாத்தில் ஹராமே. //

ம்..தற்கொலை, கொலை ஆகிய விடயங்களில் இஸ்லாமைப் புரிந்து வைத்துள்ளீர்கள்.

//அதனால் தீவிரவாதிகள் ஹராமிகள், உண்மையான இஸ்லாமியர்கள் இல்லையென்று இஸ்லாமிய சகோதர/சகோதரிகள் மற்றவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.//

புரியவைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். உங்கள் பார்வையில் படவில்லை என்பதால் இல்லை என்று ஆகிவிடாது.

//ஒரு முல்லா இவர்களுக்கு பத்துவா போட்டு மதத்தை விட்டே விலக்கிவிட்டால், இஸ்லாத்தின் மகிமை உலகுக்கு புரியும். ஆனால் நடக்குமா?//

இஸ்லாம் ஒருவருக்கோ, ஒரு இனத்தவருக்கோ சொந்தமில்லை. யாரும் யாரையும் விலக்க வழியில்லை.

//I wonder why the author allows useless anonymous' comment and explains for the same. //

Good suggestion for useless,meaningless comments.

சேதுக்கரசி said...

//பகுத்தறிவு நிறைந்த நீங்கள் பெயரில்லாமல் அனானியாக எழுதுவது மட்டும் சரியா?//

ஜெஸிலா, off topic ஒரேயொரு விசயம் சொல்ல விரும்புகிறேன். அனானி மறுமொழியை அனுமதிக்கும் வலைப்பதிவர்கள் இப்படிக் கேட்பதிலுள்ள அர்த்தம் எனக்கு சத்தியமாகப் புரியவில்லை!

ஒரு அனானி அனானியாக வந்து மறுமொழியிட்டது நியாயமா இல்லையா என்று அந்த அனானியை அனானியாக வந்து மறுமொழியவிட்டவரே கேட்பது எனக்கு விசித்திரமாகப் படுகிறது.

நானும் பலருடைய வலைப்பூக்களில் அனானியாக மறுமொழியிட்டிருக்கிறேன். சமீபகாலம் வரை என்னிடம் பிளாக்கர் அக்கவுண்டு கிடையாது.

இருப்பினும், அனானியின் வசம் பிளாக்கர் அக்கவுண்டு இருக்கிறதா இல்லையா என்பதல்ல இப்போது பிரச்சினை.

அனானியை அனானியாக மறுமொழியவிட்டுவிட்டு, பிறகு நீ ஏன் அனானியா வந்தே? என்று கேட்பது எனக்கு நியாயமாகப் படவில்லை.

இரண்டொரு வலைப்பூக்களில் இப்படி அவர்கள் கேள்வி கேட்டவுடன், அடச்சே.. இவருடைய வலைப்பூவில் போய் அனானியாய் எழுதினால் "நீ ஏன் அனானியாய் வந்தாய்" என்று கேள்வி வரும் உடனே.. செய்யவிட்டுவிட்டு ஏன் செய்தாய் என்று கேட்குமிடத்தில் எனக்கென்ன வேலை என்று அந்தப் பக்கம் போகாமலும் இருந்ததுண்டு.

உங்களை எனக்குத் தெரியும் என்பதால் மட்டுமே மனம் திறந்து சொல்கிறேன்.

Jazeela said...

//நானும் பலருடைய வலைப்பூக்களில் அனானியாக மறுமொழியிட்டிருக்கிறேன்//

அனானியாக வந்தாலும் சேதுக்கரசி என்று உங்கள் பெயரை எழுதி விட்டுத்தானே செல்வீர்கள்? எத்த்னையோ பேர் வலைப்பூ வைத்திருந்தும் அவ்ர்கள் குறித்த விபரம் எதுவும் இல்லாமல் இருக்கும். ஆனால், சில பேர் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் அனானியாய் வந்து அவசியமில்லாத கேள்வியை எழுப்பியதால் அப்படிக் கேட்டிருந்தேனே தவிர, எந்த அனானியின் கருத்தும் அநாகரிகமாக இல்லாதவரையில் அதனை நான் அனுமதித்திருக்கிறேன்.

Anonymous said...

//ஒருவரின் நம்பிக்கக இன்னொருவருக்கு மூட நம்பிக்கையாக இருக்கலாம் என்றுநீங்கள் சொல்வது புரிகிறது.//

புரிந்து கொண்டதற்கும் அதை வெளிப்படுத்தியதற்கும் நன்றி. மேற்கொண்டு சிந்தியுங்கள். பிரபலமானவர்களைச் சுற்றி எழுதப்படும் சுவாரஸ்யமான பதிவுகளை விடுத்து வேறு தளங்களில் எழுதுங்கள். உங்களால் முடியும். வாழ்த்துக்கள்!

//ஒரு அனானி அனானியாக வந்து மறுமொழியிட்டது நியாயமா இல்லையா என்று அந்த அனானியை அனானியாக வந்து மறுமொழியவிட்டவரே கேட்பது எனக்கு விசித்திரமாகப் படுகிறது.//

சேதுக்கரசி கேட்டதும் சரிதான்

சேதுக்கரசி,
நீங்களே ஏன் ஒரு வலைப்பதிவு எழுதக்கூடாது. நன்றாகத்தானே எழுதுகிறீர்கள். உங்கட மாதிரி ஆட்களுக்கு தமிழ்மணத்தில் வரவேற்பு அதிகம்

அன்புடன் அசரீரி
asariiri@gmail.com

சேதுக்கரசி said...

அசரீரி - நன்றி. நான் வலைப்பூவில் எழுதலாமா வேண்டாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தோஷத்தால் திருமணம் ஆகாத கிராம பெண்ணின் நிலைமைக்கும் ஒரு உலக அழகியின் நிலைமைக்கும் வித்தியாசம் இல்லை இங்கே.அப்படியாவது தன் மனதுக்கு விரும்பியவரை அடைய வேண்டி இருக்கும் ஒரு பெண்ணின் பரிதாபம் தான் எனக்கு தெரிகிறது.

வெளிகண்ட நாதர் said...

நான் கொஞ்சம் லேட்டா இதை எழுதினேன்! சேதுக்கரசி சொல்லி இங்கே வந்தென்!

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி