Tuesday, July 10, 2007

அதிரத்தான் செய்கிறது ஆச்சரியத்தில்!

படம் சொல்லும் கதை:



எல்லோருமே ஏதோ ஒரு வகையில் ஒரு வகையான ஊனம்தான். ஆனால் ஆளுக்காள் ஊனத்தின் தன்மை வேறுபடும், சிலர் மனதளவில், சிலர் கல்வியில், சிலர் உடலில். ஆனால் தன்னம்பிக்கையென்ற மருந்திருந்தால் எவ்வகை ஊனத்தையும் பொருட்படுத்தத் தேவையில்லை என்பதற்கு அலிசன் லப்பர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பிறவியிலேயே கைகள் இல்லாததால் திருமணம் முடிக்கவும், தன்னைப் போலவே குழந்தையும் பிறந்துவிடுமோ என்ற அவநம்பிக்கையெல்லாம் இல்லாமல் துணிந்து பெற்றெடுத்து தாய்மையை தன்னுடைய 34ஆம் வயதில் உணரும் மனதிடம் மிக்கவர். தன் குழந்தையை ஒரு வரப்பிரசாதமென்றும், குட்டி தேவதையென்றும் சிலாகிக்க காரணமுள்ளது, மகன் பாரிஸ் ஆலன் ஜார்ஜ் தாயின் நிலையுணர்ந்து தனது ஐந்தாவது நாளிலிருந்தே தலையை தூக்கி தானே பால் குடித்துக் கொள்ளவும், அணைக்க வரும் தாயை தாமே கட்டிக் கொள்ளவும் தெரிந்த ஆறாம் அறிவுப் பெற்ற புத்திசாலிக் குழந்தை.

'குழந்தையை அரவணைக்க கைகள் இல்லையே' என்ற கவலை தரும் அந்த எண்ணத்தைக்கூட தன்னுடன் வைத்துக் கொள்வதில்லை என்று முகம் மலரும் அலிசன் 'கைகள் இல்லையென்றால் வாழ்க்கையே முடிந்து விடுமா?' என்று தம்மையேக் கேட்டுக் கொண்ட கேள்விதான் அவருக்கு அவரே தந்துகொள்ளும் ஊட்டச்சத்தும் ஊக்கச்சத்தும்.

தாய்மைக்கு இல்லை ஈடு. ஆச்சரியத்தில் அதிர்ந்ததாள் பகிர்ந்துக் கொண்டேன்.

17 comments:

Anonymous said...

Unmaiyilayey migavum paaraata koodiya thaai,kaigal illavittalum thanambikaiyai vidaathavar, hats off, pagirnthu kondatarku nanri jazeela ;-)

அபி அப்பா said...

வாவ்!!!!! அம்மான்னா அம்மா தான். நான் கொஞ்ச நேரம் ஸ்த்ம்பித்து போனேன்!

selventhiran said...

அடடே

Anonymous said...

வாவ்!

இந்த தாய்க்கு வாழ்க்கை தந்த அந்த கனவன் வாழ்க! இந்த தாயை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அந்த கனவன் வாழ்க வாழ்க. அவரது தியாகம் ஒப்பற்றது.

முத்துகுமரன் said...

ஆச்சர்யத்தில் திகைத்துப்போனேன். தாய்மையின் வலிமையை சொல்லியிருக்கும் அத்தாய்க்கு வாழ்த்துகள். அவர்களின் கால்கள்ளே அவருக்கு கரங்கள்.

பதிந்தமைக்கு நன்றி

Sumathi. said...

ஹாய்,

இப்படி பட்ட அந்த அம்மாவப் பாக்கும் போது அந்த குழந்தை
எவ்வளவு பெருமை படனும் தன் அம்மா அவ்வளவு உயர்ந்தவள் என்று.

கோபிநாத் said...

சூப்பர் அம்மா !!!!!!

Anonymous said...

This is the wonderful stuff i have ever seen... Thanks a lot for this post...

-Balakumar

Jazeela said...

நன்றி ஹனீஃபா, அபி அப்பா, செல்வேந்திரன், முத்துகுமரன், சுமதி, கோபிநாத், பாலகுமார்.

வா மஞ்சுளா எப்படி இருக்க? கணவனுக்கு 'ண'. இன்னும் தட்டச்சு சரியா பழகுலையா? 'ன' இருக்கும் இடத்தில்தான் 'ண'வும் இருக்கு 'ஷிப்ட்' பிடித்து அடிக்க வேண்டும். உன்னை தமிழ்99 தானே பழக சொன்னேன்? என்னை உசுப்பேத்தவே கணவனுக்கு 'ஜே' போடுறியாக்கும். இப்படிப்பட்ட மனைவி கிடைக்க அந்த கணவர்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

லொடுக்கு said...

touching video.

Anonymous said...

நீங்கள் என்னைத்தானே தமிழ்99 படிக்க சொன்னீர்கள்.ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி " நான் அவள் இல்லை"......(மஞ்சுளா)

Unknown said...

படம் தரும் - தன்னம்பிக்கை எனும் பாடம்.

மங்கை said...

நெகிழ்ந்து போனேன் ஜெஸிலா..

பார்க்கும் போது எழும் உணர்வுளை சொல்ல வார்த்தைகள் இல்லை... ஹ்ம்ம்ம்ம்

துளசி கோபால் said...

ஆச்சரியத்தால் வாயடைச்சு நிக்கறேன்!

Jazeela said...

மங்கை, துளசி, சுல்தான், லொடுக்கு நீங்கெல்லாம் இதுக்கே அசந்தா எப்படி? இந்த உரலையும் பாருங்களேன்:

http://www.youtube.com/watch?v=5GNzBFnUAdo

அப்பப்பா நாமெல்லாம் இறைவனுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

ஜெசிலா, நெசமாவா சொல்றீங்க? சரி பார்த்துக்கலாம் ;-)

Sowmya said...

Arumaiyana pathivu.Niraya membatta pathivugalai ungal valaipathivil kanden. mahizhchi :)

Jazeela said...

நன்றி செளமியா.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி