Thursday, July 26, 2007

பழக வருகிறார் உங்களுடன்

எல்லா மனிதர்களுக்குமே தன்னுடைய சொல்லுக்கு மதிப்பு தருபவர்களை பிடிக்கும். இதில் ஆண்- பெண் என்ற விதிவிலக்கெல்லாமில்லை. காதலிக்கும் போது காதலன் சொல்வதை அப்படியே காதலி கேட்டுவிட்டால் 'அடடா, இவ மனைவியாய் வர நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்ற எண்ணத்தில் மிதப்பர்கள். அதே போல காதலியும் தன் பேச்சை காதலன் கேட்டுவிட்டால் 'நான் போடுற கோடுக்குள்ள கட்டுப்பட்டு வாழணும் வீட்டுக்குள்ள, நான் கைக்கட்டி வாய்ப்பொத்தி நில்லுன்னா நிற்கணும் டோய்..'ன்னு பாட தொடங்கிவிடுவார்கள். கல்யாணத்திற்கு பிறகுதான் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பது வேறு கதை.

யாரெல்லாம் உங்க சொல் பேச்சு கேட்டு நடப்பார்கள்?

1. மனைவி (அவ சொல் பேச்சு கேட்டுத்தான் நானே நடக்குறேன்னு சிலர் புலம்புறது கேட்குது - அதுல தப்பே இல்ல கீப் இட் அப்)

2. குழந்தைகள் (அதெல்லாம் அந்தக் காலம், இந்த காலத்து புத்திசாலி குழந்தைகள் சொல்வதைத்தான் நாம் கேட்டு நடக்க வேண்டி இருக்குன்னு அனுபவபூர்வமா எனக்கும் தெரியும்.)

3. வளர்க்கும் நாய் (நீங்க சொல்றா மாதிரி கேட்குதுன்னு வெளியில சொல்லிடாதீங்க 'ப்ளூ க்ராஸ்' தயாரா நிற்கிறாங்க)

யார் கேட்கிறார்களோ இல்லையோ இவர் கேட்பார். ம்ம் சொல்லுங்க ஆனா இவருக்கு ஆங்கிலம் மட்டும்தான் புரியும் அதுவும் ஒற்றை வார்த்தையில் சொன்னால்தான் புரியும். உங்க சொல்பேச்சுக் கேட்கும் 'மவுஸை' கொண்டுப் போய் LAUGH, CRY, DANCE, JUMP, GO TO HELL, F*****F இப்படி ஏதாவது தட்டிப் பாருங்க திட்டிப் பாருங்க உடனே செய்வார், சொல்படி கேட்பார். அதுவும் Internet Explorer 6 உபயோகித்தால் ரொம்பவும் சந்தோஷப்படுவார். ஆனா நீங்க சொல்வது புரியலைன்னா உடனே உதட்டை பிதுக்கி புரியலைன்னு ஒத்துக்குவார்.

இதை சொடுக்கித்தான் ஆணையை பிறப்பிக்க முடியும். இண்டர்நெட் எஸ்ப்லோரரில் உலவுபவராக இருந்தால் சொடுக்குங்கள் ஆணையிடுங்கள், இதோ உங்கள் அடிமை (பயர்பாக்ஸிலும் வேலை செய்யும் ஆனால் ஆணை பிறப்பித்த பிறகு ஒரு உரல் வரும் அதை க்ளிகினால் தான் அவரை பார்க்க முடிகிறது):



இந்த மாதிரி தமிழில் ஆணை பிறப்பித்து விளையாடினால் இன்னும் நல்லா இருக்கும்ல? எங்கே நம் மென்பொருள் வீரர்கள்? (இந்த மாதிரி விளங்கா வெட்டி வேலையெல்லாம் நாங்க செய்வதில்லைன்னு சொல்றாங்கப்பா!)

10 comments:

அபி அப்பா said...

நான் எங்க வீட்டுல இ(க)ஷ்டமா பாடும் பாட்டு "நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்" :-))

கதிர் said...

இதுக்குதான் இம்புட்டு பில்டப்பா? :(

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

:) where to get the command list?

╬அதி. அழகு╬ said...

பார்ட்டி படுமோசம்.

'குடிக்காதே'ன்னு சொன்னேன். உடனே ஃப்ரிஜ்ஜைத் திறந்து ஒரு கோக்கோ என்னவோ டின்னில் இருந்தது. அதைத் திறந்து குடிக்கிறார்.

Jazeela said...

அபிஅப்பா மர மண்டை என்பதை இப்படியா ஒத்துக்குவீங்க :-))) (நான் மரம்னு சொல்லிருக்கீங்களே அதச் சொன்னேன்:-)

கதிர் பில்டப்பா - அது எங்க இருந்தது பதிவில்? எனக்கு தெரியலையே?

ரவிசங்கர் நீங்களாம் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பிச்சா எப்படி? You will get the command list on demand :-) ரவி, அந்த இடத்தில் அதனை எப்படி செயல்படுத்துவது, எப்படி இந்த மாதிரியான ஒரு பிரோகிராமை தயாரிப்பதென்றாலாம் இருக்கிறது - தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் வேறு எதற்காவது உதவும். தமிழ்99-ல் எப்படி தட்டச்சுவது என்று கேட்டால் அங்கு பதில் வருவது போல் ஏதாவது செய்யலாம். படித்து தெரிந்துக் கொள்வதை விட இந்த மாதிரி செயல் விளக்கம் பயனுள்ளதாக இருக்குமே. இது சின்ன யோசனைதான் அப்புறம் உங்க பாடு :-)

அழகு அவருக்கு ஒரு வார்த்தையில் சொன்னாதான் பெரும்பாலும் புரிகிறது. Drink என்றாலும் don't drink என்றாலும் drink ஐ மட்டுமே புரிந்துக் கொள்கிறார். பாவம்யா அவருக்கு குழந்தை மனசு பார்த்து கையாளுங்க.:-)

Ayyanar Viswanath said...

ஜெஸிலா அட்டகாசம் எங்க பிடிச்சீங்க இவரை.:)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

அலுவலகக் கணினியில் இன்று firefox கோளாறு. அதான் ஆங்கிலம் :(

எத்தனை பின்னூட்டம் போட்டு கயமை செய்தால் அந்த கட்டளை பட்டியலைக் கொடுப்பீர்கள் :)

பத்மா அர்விந்த் said...

Jesila
There is similar one here http://idlyvadai.blogspot.com/2007/07/subservientprogrammer.html. You can use Tamil comments.

Jazeela said...

அய்யனார், ரொம்ப நாளா இவருடன் பழகிக்கிட்டு இருக்கேன். நேற்றுதான் யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்னு இங்க அனுப்பிட்டேன் :-)

ரவி - ஆங்கிலத்தில் உள்ள எல்லா கட்டளையும் அப்புறம் வலைப்பூ என்றால் என்ன? இதையே blog enraal enna - என்று கேட்டாலும் அவர் சொல்வது போல் அமைக்க வேண்டும் இத வச்சிதானே அவர் தமிழில் தட்டச்சுவது எப்படி, பயர்பாக்ஸை நிறுவுதல், பயன்பாடுகள், தமிழில் வலைப்பூ, இப்படி கணிணி தொடர்பான / தமிழ் தொடர்பான் பள்ளிக்கூடமா மாற்றிக் கொள்ளலாம். ரொம்ப நிறைய கேட்கிறேனோ? இது கொஞ்சம்தான் :-) நீங்க பயந்துடக் கூடாதுன்னு நிறுத்திக்கிட்டேன்.

இல்லங்க பத்மா இதேதான் அதுவும். அங்க தமிழில் சொன்னால் உதட்டை பிதுக்கி புரியலைன்னு சொல்றார்.
அந்த break the computerஐ ரொம்ப அழகா செய்றார் :-)

பாலராஜன்கீதா said...

செந்தழல் இரவி அவர்கள் தன் பதிவில் http://imsai.blogspot.com/2007/07/blog-post.html

http://www.subservientprogrammer.com/main.aspx என்று எழுதியிருக்கிறார்.
:-)))

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி