Saturday, December 15, 2007

மறுபடியும் வந்துட்டோம்ல


கொஞ்ச நாட்கள் வலைப்பக்கம் வராததால் நான் என்னவோ என் கடைசி பதிவுக்கு மிரட்டல் வந்து நான் பயந்து ஒளிந்துக் கொண்டதா வதந்தியப் பரப்பிக்கிட்டு திரியுறாங்கோ. அப்படியெல்லாம் ஒண்ணுமேயில்ல சாமி, நிஜமாவே அப்படி ஏதாவது மிரட்டல் வந்திருந்தா அதுக்காகவே வம்படியா தொடர்ந்து எழுதியிருப்பேன் 'என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்களே'.

எழுத நினைத்த ஒரு புதிய பெண் வலைப்பதிவரையும் 'ஜெஸிலாவுக்கு என்ன கதியாச்சு பாத்தியா, அத மனசுல வச்சுக்கிட்டு சும்மா பின்னூட்டம் போடுவதோடு நிறுத்திக்கோன்னு' அந்த பெண் பதிவருடைய கணவர் - அவரும் பதிவர்தாங்க - மிரட்டல் விடுத்திருக்கிறார்னா பார்த்துக்கிடுங்க வதந்தி எப்படிலாம் பரவுதுன்னு. இது என் காதுக்கே எட்ட, ம்ஹும் இனி சும்மா இருக்கக் கூடாது, வாரத்துக்கு ஒரு பதிவாவது போட்டிடனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு வந்துட்டேன். 'என்ன கொடும சரவணன்'னு புலம்புறதை நான் காதில் வாங்கிக்கிறதா இல்ல.

சரி உள்ளே வரும்போதே ஒரு நல்ல தமிழ்ப்படத்தின் திரைவிமர்சனம் தரணும்னு நானும் திரையரங்கா ஏறி இறங்குறேன், ஒரு நல்ல படம் மாட்டலையே. 'அழகிய தமிழ் மகன்' அழுகிய தமிழ் மகனாப் போச்சு, 'வேல்' - சுமார் கூர்மை இல்லை. சரின்னு நேத்து 'பில்லா' படத்துக்கு டிக்கெட் வந்தது, குழந்தைகளுக்காக போவோம்னு பார்த்தா கடைசில எந்தக் குழந்தையும் வரல என் மகளைத் தவிர. அவளுக்கும் படம் பிடிக்கல போலிருக்கு.

அஜீத்தெல்லாம் கதாநாயகரா நடிக்கிறத கொஞ்சம் நிறுத்திக்கணும். முகத்துல சதையெல்லாம் தொங்கி மனுஷன் பெரிய திரையில் பரிதாபமா இருக்கார். கமல் இந்த வயசில் முகத்தில் வயசு தெரியுறாப்புல இவருக்கு இப்பவே - ரொம்ப குடிப்பாரோன்னு பக்கத்துல யாரோ கிசுகிசுத்தாங்க. கொஞ்சம் 'பேஸ் லிப்ட்' செஞ்சா தேவலைன்னு இன்னொருத்தர் அரங்கில் கத்துறார். பிரபுவுக்கும் அந்த கதாபாத்திரத்திற்கும் ஒட்டவேயில்லை, தொப்பையோடு இருப்பவர்களுக்குதான் டி.எஸ்.பி. பதவின்னு எழுதிக் கொடுத்திட்டாங்க போலிருக்கு. அந்த உயரமான போலீஸ்காரர் பக்கத்தில் பிரபுவின் உயரம் பளிச். தெரிந்த கதையை இன்னும் சுவாரஸ்யமா எடுத்திருந்தாத்தான் இன்னும் சுவாரஸ்யமே. இது வெறும் சொதப்பல். 'ச்சே! ரஜினி நடிப்பில் கால் தூசிக் கூட இல்லப்பா'ன்னு தலையில் கை வைக்கத்தான் சொல்லுது.

'நான் அவன் இல்லை' புது வடிவில் வந்த போது நிறைய பேருக்கு அந்த பழையப் படம் நினைவில் இல்லாததாலும் அதைவிட இது பிரமாதமாக சாயம் பூசப்பட்டிருந்ததாலும் கொஞ்சம் தாக்குப்பிடித்தது. ஆனால் இந்த பில்லாவில் நவீன மயமாக்கல் என்று சிகப்பு டைரியை 'பென் டிரைவ்'வாக மாற்றி, நிறைய செல்பேசி உபயோகம், பிரமாண்டமென்று ஹெலிக்காப்டர், மலேசியாவில் படப்பிடிப்பு என்று காசை வாரி இறைத்திருப்பது மட்டும்தான் புதுமையோ? படத்தை ஓட்டுபவருக்கே பிடிக்கவில்லையோ என்னவோ பழைய பில்லாவில் தேங்காய் சீனிவாசன் வரும் காட்சிகள் பிரகாஷ் ராஜ் வைத்து செய்திருப்பதாகக் கேள்வி அந்தக் காட்சிகள் அப்படியே துண்டிப்பு. கொடுத்த காசுக்கு 'கலேரியா' இப்படியா மோசம் செய்யும்? பில்லாவுக்கு எப்பவுமே ரஜினிதான் பொருத்தமென்று அஜீத் மூலமா நிரூபிக்க வேண்டும்?

நேற்று மதியம் வீட்டில் 'ப்ளைட் ப்ளேன்' என்ற அருமையான ஆங்கிலப்படம் பார்த்துவிட்டு மாலையில் 'பில்லா' பார்த்தது நல்ல சாப்பாடு சாப்பிட்டு விட்டு, ருசி கெட்டதை அதன் பிறகு வாயில் போட்டு, நாக்கே கெட்டுப் போச்சுன்னு சொல்வோம்ல அந்த மாதிரிதான். ஆனாலும் நமீதாக்காகவும், நயந்தாராக்காகவும் நம்மூரில் படம் ஓடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நம்மவர்கள் ரசனையே தனிதானே.

23 comments:

கண்மணி/kanmani said...

வாங்க ஜெஸி ரீ எண்ட்ரிக்கு வெல்கம்[:))]
நாமல்லாம்[!!!??]மிரட்டலுக்கு பயப்படும் ரகமா?ஹாஹா [நம்ம பாத்து அய்யோ எழுத வந்துட்டாங்கன்னு பயப்படாம் இருந்தா சரி]
சரி ஆட்டைய ஆரம்பிங்க
எனக்கும் சண்டை போட ஆளில்லை;)

கோபிநாத் said...

\\"மறுபடியும் வந்துட்டோம்ல"\\

வாங்க அக்கா..வாங்க...;))

நல்லாயிருக்கிங்களா!?

\\'என்ன கொடும சரவணன்'\\

யாரு நம்ம குசும்பன் அண்ணாத்தையவா சொல்லிறிங்க!?....உண்மை தான் அவரு கொடுமையை தடுக்குறதுக்கு உங்களை விட்டா வேற ஆளே இல்ல...அதனால சீக்கிரம் பதிவுகள் எழுதி குவியுங்கள் ;))

முபாரக் said...

வாங்க வாங்க

குசும்பன் said...

அண்ணாச்சி, லொடுக்கு அப்ப நீங்க ரெண்டு பேரும் சொன்னது உண்மை இல்லையா? திரும்ப வந்துட்டாங்க:))))

(ஏதோ என்னால முடிஞ்சது)

உங்க பிளாக் ஓப்பன் ஆகவில்லை என்று நினைச்சுக்கிட்டு இருந்தா கீழ பதிவு இருக்கு,மேலே வெறும் நீல கலரில் பிளாங்கா இருக்கு என்னன்னு கொஞ்சம் பாருங்க!

குட்டிபிசாசு said...

ஜெசிலா அக்கா,

ஏன் இப்படி டப்பா படங்களை பார்த்துட்டு திருவிளையாடல் தருமி போல புலம்புரிங்க. உங்களுக்கு படம் செலக்ட் பண்ணவே தெரியாதா? ஒன்பத் ரூபாய் நோட்டு, எவனோ ஒருவன் இப்படி எதாவது பார்க்கலாம் தானே!!

Jazeela said...

நன்றி கண்மணி. இந்த பதிவோடு நின்றுவிடாமல் தொடர பார்க்கணும்.

அட கோபி, பரவாயில்லையே நீங்களாவது நினைவு வைச்சிருக்கீங்களே? எங்க அமைப்பின் நிகழ்ச்சிக்கு உங்களை எதிர்பார்த்தேன்.

நன்றி முபாரக்.

ஆமா குசும்பரே, ஏதோ பிரச்சனை போல தெரியுது நேரமிருக்கும் போது பார்க்கணும்.

குட்டிபிசாசு, இது என் குத்தமில்லை நம்ம அய்யனார், ஆசிப் பண்ண லீலை. அவங்கத்தான் அந்த படத்தை பார்க்கணும்னு ஒத்த காலில் நின்றார்கள்.:-(

அபி அப்பா said...

வாங்க, வாங்க:-))

Anonymous said...

yes u r correct... nannum innaikky theatre poi billa padam paarthutu nonthu poiteen.. kevelama eduthu irukkan...

1) Prabhu-va paarthavudane "enna koduma saravanan" appdeenu kathanum pola irunthuchi... as jesisa said, height matter is a big issue..

2) my name is billa paata kola panni irukkanga...

3) intha billa padatah nan chinna vayasula paarthapo seat nunila ukkaravacha padam, ippo 2007 edukkum pothu, kathai thirai kathi ellam evalalvu build-up kodukannum..

4) 9-thara entry semma sothappal... ava pannra circus-kku (the way she shows the entry) ore suitable back-up illa..

Anonymous said...

yakkov.. neenga paartha padam "flight plane" -a illa "flight plan"-a? :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

silarai ezhutha vaikka ippadi oru vazhi iurkkoo?/ :)

( sorry for thangilsh)

ரசிகன் said...

:))

நடத்துங்க..நடத்துங்க...

Jazeela said...

நன்றி அபி அப்பா. அப்புறம் வீட்டுல எல்லாம் சுகம்தானே?

அனானி பெயரோடு எழுதியிருக்கலாமே. ரொம்ப சரியாவே எழுதியிருக்கீங்க.

flight plan தாம்ப்பா.

முத்து, எழுத வைக்க மிரட்டல் விடணும்னு சொல்றீங்களா இல்ல வதந்திய கிளப்பணும்னு சொல்றீங்களா? ரொம்ப விவகாரமான ஆளா இருப்பீங்க போல :-))

வாங்க ரசிகன். நீங்கதானே என்னை ரொம்ப தேடிக்கிட்டு இருந்தது. இப்ப நான் கிறுக்குவதை தவறாம படியுங்க :-)

Anonymous said...

ஜெஸிலா
/குழந்தைகளுக்காக போவோம்னு பார்த்தா கடைசில எந்தக் குழந்தையும் வரல /

ஆசிப் அய்யனார் னு ரெண்டு குழந்தைகள் வந்திருந்ததே நீங்க பாக்கலியா?

காட்டாறு said...

வாங்க வாங்க... மறுமொழி தவறாது கொடுப்பதில்லைன்னாலும், ரீடரில் தவறாம உங்க பதிவை படிப்பேன். பண்புடனில் ஐக்கியமானதால எழுதலைன்னு நெனச்சேன். இல்லையா? ;-)

Anonymous said...

Rommmmmba naatkal senru oru pathivu eshuti irukeenga, welcome
jazeela, kilambitaangaya kilambitaanga :-)

shabi said...

ippathan first time idu padikkiren
nalla irukku nanum dubai lathan irukken a/v patthuthan therinchukitten

manjoorraja said...

மறுபடியும் வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

சரி சரி -- படம் நல்லா இல்லன்னாலும் பொழுது போகறதுக்கு இங்கே எல்லாம் ஒரு தடவை பாத்துடுவோம்

shabi said...

kalloori oru nalla padam ippa claimax matthi irukkangalam pudhu cd vandha pakkanum
unga vimarsanathukku munnadi ella patthirikkayilayum vimarsanam vandhuduchu

c g balu said...

வாங்க.....

maduraikkaran said...

எல்லாருக்கும் வணக்கம்

அக்கா , என்னையும் ஆட்டத்துல சேத்துக்கங்கக்கா...

பில்லா பார்த்ததுக்கு "பொல்லாதவன்" பார்த்திருக்கலாம் நல்லா இருந்தது... மாப்பிள்ளையும் மாமா பேரை காப்பாத்திட்டாரு

Anonymous said...

Aha Billa Padathai ippadi Mosamaaga
vimarsanam seivadharkku oru mattamaana rasanai vendum, adhu ungalidam irukkiradhu.Nalla padangalukku ippadi mokkai vimarasanam seidhu,ennai polae nalla rasanai irukkum matravargalai paarkka vidamal seivadhu sariillai.Naan Rajiniyin ethiriyum illai,ajithin visiriyum illai aanal oru nalla tharamaan padangalin rasigai.Brammaandamaana Hollywood padangalai vaayil kosu poavadhu kooda theriyamal Aaaaa endru parkkum ungalukku ithagaya pudhiya muyarchigal nam naatil eduthal adhai varaverkkamal iruppadhu aen endru theriyavillai.

Stev E said...

arumayana eluthottam...

Write atleast Every week

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி