Monday, September 07, 2009

விளையாட்டாக விவசாயம்


முகப்புத்தகத்தில் ஹாஜா மன்சூர் என்பவர் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். என் நண்பர் அவருக்கும் நண்பரென்பதால் சேர்த்துக் கொண்டேன். தினம் தினம் ஒரு ஆப்பிள் மரம், ஒரு ஆரஞ்சு மரம் என்று பரிசு வந்த வண்ணமிருந்தது. நானும் பரிசை வாங்காமல் தவிர்த்துக் கொண்டிருந்தேன் அது என்ன ஏது என்று தெரியாமலேயே. அதன் பிறகு தோழி சுவாதியும் பரிசு அனுப்பினார்கள். கோ மாதாவை அனுப்பியிருக்கிறேன் மங்களகரமா தொடங்குங்க என்றார்கள். என்னடா இதுன்னு ஒரே குழப்பமா இருந்தது. வரும் பரிசுகளையெல்லாம் கல்லாவில் போட்டுக்கிட்டே இருந்தேன். நண்பர் சுபைரும் என்னை பக்கத்து தோட்டக்காரனா ஆக்கிக்கோங்கன்னு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். என் அக்கா மகன் வேறு ஒரு கோழி அனுப்பி வைத்தான். ஆஹா இதுக்கு மேல தாங்காது எல்லோரும் பரிசு அனுப்பிக்கிட்டே இருக்காங்கன்னா ஏதாவது விஷயமிருக்குமென்று போய் பார்த்தேன். பார்த்த பிறகுதான் தெரிந்தது அது ஒரு விவசாய விளையாட்டுன்னு. பொதுவா எனக்கு ஏதாவது ஒரு கணினி விளையாட்டு பிடிச்சிருந்தா விளையாடி விளையாடி கொஞ்ச நாள் பைத்தியமா இருப்பேன். அப்புறம் அந்த சீசன் முடிந்த பிறகு அடுத்த கணினி விளையாட்டு அல்லது வேறு பொழுதுபோக்குன்னு தொடரும். பொழுதை போக்கும் விதம் நேரமில்லாவிட்டாலும் மூச்சு முட்டும் அளவுக்கு அலுவல் வேலையிருக்கும் நேரம் எரிச்சல் ததும்பும் போது இளைப்பாறும் நிழல் ஒரு வகையான மாற்றம்தான் நமக்கு இந்த முகப்புத்தம் விளையாட்டெல்லாம்.

நான் விவசாய விளையாட்டுன்னு குறிப்பிட்டது ‘ஃபார்ம் வைல்’ (Farm Ville) பற்றி தான். முகப்புத்தகத்தில் இருப்பவர்கள் எனக்கு தெரிந்து அத்தனை பேரும் இதனை ருசிப்பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். பொதுவாக கணினி விளையாட்டு நம்மை மீண்டும் மீண்டும் விளையாட தூண்டும் நம் மனதில் குறிக்கும் இலக்கை எட்டும் வரை. சில வகை விளையாட்டின் மீது கிறுக்காகவே மாறுவோம். அப்படித்தான் நான் ஸ்கிராம்பிலில் கிடந்தேன். தூக்கத்தில் கூட இந்த வார்த்தை அந்த வார்த்தை என்று நினைத்து கோட்டை கட்டுவேன். கை பரபரக்கும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாட தூண்டும், பொறுமை இழக்கவும் செய்யும் ஆனால் இந்த விவசாய விளையாட்டு மிகவும் மாறுபட்டது, நமக்கு பொறுமையையும் கற்பிக்கிறது என்றால் மிகையாகாது. நமக்கு தந்த நிலத்தில் சாகுபடி செய்ய வேண்டும், விதைக்க வேண்டும். விதை தேர்வு நம்முடையதே. ஒவ்வொரு விதைக்கும் கால அவகாசமுண்டு. விதையை வாங்கும் போது பணம் செலுத்த வேண்டும். மகசூலை உரிய நேரத்தில் அறுவடை செய்யவேண்டும் யாருடைய உத்தரவிற்கும் காத்திராமல், இல்லாவிட்டால் காய்ந்துவிடும் என்று நம் அரசாங்கத்திற்கு தெரியாத விஷயங்களெல்லாம் கணினி விளையாட்டுக்கு கூட தெரிந்திருக்கிறது. ஓய்வு நேரத்தில் பக்கத்து தோட்டத்தை பார்த்து காக்கா விரட்டினால், குப்பையள்ளிப் போட்டால், புல்லுருவி நீக்கினால் நமக்கு பொற்காசு வழங்கப்படுகிறது. நல்ல மகசூல் (மகசூல் என்பது ஒரு அரபி வார்த்தை) கிடைத்தால் அதற்கும் பாராட்டி பொற்காசுகள். இந்த நடைமுறை போல உண்மையாக இருந்தால் நம் நாட்டு விவசாயிகளின் பிரச்சனை தீர்ந்து நாடும் நலம் பெருமில்லையா?

இந்த விளையாட்டை வெறும் விளையாட்டாகப் பார்க்க முடிவதில்லை. ஒவ்வொரு விதைநெல்லுக்கும் நமக்கு கொடுக்கப்படும் குறுகியக் காலகட்டத்தில் காத்திருக்க கடினமாக இருக்கும் நேரத்தில், கண்டிப்பாக விளையாடும் ஒவ்வொருவரும் விவசாயிகளின் வாழ்க்கையை பற்றியும், துயரங்களை பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் கொஞ்சமாவது யோசிப்பார்கள் கவலை கொள்வார்கள் என்பது உறுதி. விளையாட்டில் கூட விவசாய விளைபொருட்களில் விலை அதிகமாகவே இருக்கிறது.

உண்மையில் விவசாய விளைபொருட்களின் தேவை எப்போதுமிருக்க அதன் விலை உயர்வுக்கு காரணமென்ன? இவர்கள் விளைச்சலுக்கு ஏன் வேறு நபர் விலை நிர்ணயிக்கிறார்கள்? பருத்தி பயிரீட்டின் நஷ்டத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது நமக்கெல்லாம் வெறும் செய்தியாகவே இருந்திருக்கிறது. இவர்களைப் பற்றி அக்கறை கொள்வதுதான் யார்? விவசாயிகளுக்கு விளையவில்லையென்றாலும் இழப்பு, அதிக அளவில் எல்லோருக்கும் ஒரே விதமாக அதிகமாக விளைந்துவிட்டாலும் விலை சரிவு என்றாலும் பேரிழப்பு. அவர்கள் எதிர்பார்த்தபடி அவர்கள் வாழ்க்கை அமைவதேயில்லை என்பது பெரிய சோகம். என் நண்பர் ஒருவர் உர மருந்து வியாபாரியாக இருந்து பிறகு அந்தத் தொழிலின் துரோகத்தை உணர்ந்து கைவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். எப்படியென்றால் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதைதான் உர வியாபாரிகளுடையதாம் நோயையும் உண்டாக்கி மருந்தையும் விற்பனை செய்வார்களாம். என்ன கொடுமை!

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வந்த மடலில் பூச்சிக் கொல்லி மருந்தை அந்த பகுதி மக்கள் சுவாசிப்பதால் ஏற்படும் அபாயங்களை விளக்கியிருந்தது. மருந்தை சுவாசிப்பதனாலேயே பிரச்சனையென்றால் அந்த விளைச்சலை சாப்பிடுபவர்களுக்கு என்ன நேரும்? வெளிநாட்டில் செய்ய முடியாத அபாய ஆராய்ச்சிகளை அந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்து தந்திரமாக நமது நாட்டிற்கு யோசனைகளை அனுப்பி சோதனைகளை மேற்கொள்கிறார்கள். நம் மக்கள் உயிர் வழக்கம் போல் அவர்களுக்கு வெறும் மயிர் என்பதால்.

விவசாயிகளும் கூட்டுறவு சங்கமென்றெல்லாம் வைத்திருந்தாலும் அதன் மூலம் பால் பிரச்சனை ஓய்ந்ததே தவிர கரும்பு சாகுபடியாளர்களோ, பருத்தி பயிரீட்டாளரோ பயன் பெறவில்லை. இந்த விஷயத்தையெல்லாம் எல்லா வகையான ஊடகங்களும் கட்டம் கட்டி காசு பார்த்து நகர்ந்துவிட்டதே தவிர தீர்வை எதிர்பார்த்து யாரும் செயல்படுவதில்லை என்பது துரதிஷ்டமே. நான் மட்டும் எழுதி கிழித்து ஏதெனும் தீர்வு வந்துவிட போகிறதா என்ன? நம்முடைய பல வகையான கையாலாகாத்தனத்தில் மற்றொன்று.

ஒருவேளை நம்ம அரசியல்வாதிங்க இந்த விவசாய விளையாட்டு விளையாடினால் திருந்துவார்களோ? ம்ஹும் விளையாட்டையே மாற்றியமைக்க உத்தரவிட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. சரி, நீங்க Farm Ville விளையாடினால் மறக்காமல் எனக்கு பரிசு அனுப்பிவிடுங்கள்.

17 comments:

மின்னுது மின்னல் said...

ஃபேஸ்புக் கேள்வி பட்டு இருக்கேன்
முகபுத்தகம் இப்பதான் கேள்வி படுகிறேன்

:)

மின்னுது மின்னல் said...

சரி ரமதான் மாசமா இருக்கே விளைச்சலுக்கான கூலி குடுத்திட்டிங்களா :)

☀நான் ஆதவன்☀ said...

ஆகா விளையாட்டை பத்தி விளையாட்டா சொல்றீங்கன்னு பார்த்தா கடைசியில சீரியஸா கருத்து சொல்லி சிந்திக்க வச்சுட்டீங்க.

எனக்கு ஒன்னுமே புரியாம விளையாடல. இனி கத்துகிட்டு நானும் விளையாடுறேன்

கிளியனூர் இஸ்மத் said...

முகப்புத்தகத்தைப் பற்றி சொல்லப்போறீங்கன்னு நினைச்சேன்....முதுகெலும்பை டச் பண்ணிட்டீங்க...வாழ்த்துக்கள்..........

Prabu M said...

அட... நீங்களும் ஒரு ஆன்லைன் விவசாயிதானா??
என்னையும் add பண்ணிக்கங்க :)

cuteprabu20@gmail.com

Anonymous said...

என்னுடைய விளையாட்டும் பேஸ் புக்கில் இதுதான். நன்றாகவே இருக்கிறது

குசும்பன் said...

//விளையாடி விளையாடி கொஞ்ச நாள் பைத்தியமா இருப்பேன்.//

ஹி ஹி ஹி:)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

கீழை ராஸா said...

விளையாட்டைக் கூட சமூக சிந்தனையுடன் அணுகியுள்ள உங்கள் குணம் பாராட்டக் கூடிய ஒன்று...நான் இதைப்பற்றி ஒரு பதிவெழுதலாம் என்றிருந்தேன்...(இனி என்னத்த எழுத...?)

"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்கா பாடுபடு வயல் காட்டில்... Read More
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
விவசாயி விவசாயி...."

நேற்று இந்த பாடலை அண்ணாச்சிக்கு அனுப்பியிருந்தேன்..."வெளிநாட்டுலே வந்து பாடுற பாட்டா இது..?"ன்னு அண்ணாச்சி டென்சன் ஆகிட்டாரு...

இருந்தாலும் இந்த விளையாட்டை ஆடும் போதெல்லாம் என்னை அறியாமல் என் உதடு இந்த பாட்டை தான் முணு முணுக்கிறது...

Unknown said...

//நம் மக்கள் உயிர் வழக்கம் போல் அவர்களுக்கு வெறும் மயிர் என்பதால்.//

அவர்களுக்கு மட்டுமில்லை. நம்மூர் அரசியல்வாதிகளுக்கும்தான். இல்லேன்னா, அந்த மாதிரி சோதனைகளுக்கு அனுமதிப்பாங்களா?

நானும் ஒரு பண்ணை வாங்கி போட்டுருக்கேன். வாங்க, பக்கத்து பண்ணையா! எனக்கும் இன்னும் இந்த விளையாட்டுப் பண்ணை புரிபடலே. அதனாலே, ஏனோ தானோ விவசாயம்தான் பண்றேன்!

"உழவன்" "Uzhavan" said...

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு சொல்வாங்க. அந்த அளவிற்கு வாய்க்கொம் கைக்குமே சரியாகிப் போய்விடும் தொழில்தான் இந்த விவசாயம். அதற்கு ஒரு விமோசனம் வந்தால் ஆனந்தக் கண்ணீரோடு அகம் மகிழ்கிறோம். நல்ல பகிர்வு தோழி.

Jazeela said...

மி.மின்னல், அதுதான் இது :-). விளைச்சலுக்கு கூலி அவர்கள் தருகிறார்கள் ஏன்னா நான் தானே விவசாயி :-)

நிஜமாவே சீரியஸ் தான் ஆதவன். :-(

நன்றி இஸ்மத் அண்ணா.

சரி சேர்த்தாச்சு பிரபு.

சின்ன அம்மிணி நலம்தானே? சேர்ந்துவிடுங்களே என்னுடைய பக்கத்து வீட்டு தோட்டம்மாவா ஆகிடுங்களேன் :-)

குசும்பரே, இந்த வில்லத்தனமான சிரிப்பு எதுக்கு :-)

Jazeela said...

//"வெளிநாட்டுலே வந்து பாடுற பாட்டா இது..?"ன்னு அண்ணாச்சி டென்சன் ஆகிட்டாரு../// நெசம் தானுங்களே :-)
கீ.ரா. மிக்க நன்றி. பண்ணியில் ஒழுங்க வேலைய பாருங்க. குதிரைக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்கோ!

தஞ்சாவூரன், உதவில போய் விளையாட்டை பற்றி படிங்க புரியும். நம்ம அரசியல்வாதிங்க என்னங்க பண்ணுவாங்க பாவம். அவங்க வயிறும் பணப்பெட்டியும் நிறஞ்சா போதாதா :-)

//அதற்கு ஒரு விமோசனம் வந்தால் ஆனந்தக் கண்ணீரோடு அகம் மகிழ்கிறோம்.// விமோசனம் வர என்ன செய்ய வேண்டும்? ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா செயல்படுத்த?

கோபிநாத் said...

விளையாட்டிலும் ஒரு செய்தி...பகிர்வுக்கு நன்றி ;)

உங்கள் ராட் மாதவ் said...

//நம் மக்கள் உயிர் வழக்கம் போல் அவர்களுக்கு வெறும் மயிர் என்பதால்.//

ம்ம்ம்ம்ம்ம் .... அனல் பறக்கின்றது டீச்சர்...... :-)

Thenammai Lakshmanan said...

அன்பிற்குரிய சகோதரி ஜெசிலா,
உங்கள் குறையொன்றுமில்லை, எல்லாம் யாருக்காக கவிதைகள் அருமை
ரமலான் நோன்புக்கு பசித்திரு, தனித்திரு விழித்திரு என்று விவேகானந்தரை
மேற்கோள் காட்டியது நன்று.
ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்.!!

Chittoor Murugesan said...

அன்புடையீர்,
இந்திய திரு நாட்டை முன்னேற்ற வேண்டும் ,விவசாயம் செழித்தாலன்றி இது சாத்தியமில்லை , அதற்கு நதி நீர் இணைப்பே நல்ல வழி. நான் சற்று ஆழமாக சென்று மேற்சொன்ன அம்சங்க‌ளை சாத்தியமாக்க ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற பெயரில் ஒரு திட்டம் தீட்டி ஐம் டூயிங் மை பெஸ்ட். என் திட்டத்தின் சுருக்கத்தை படிக்க கீழ் காணும் லிங்கை க்ளிக் செய்யவும்


http://kavithai07.blogspot.com/2009/10/blog-post_31.html

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி