ஆரம்பக் காட்சியைப் புரிந்து கொள்ள கடைசிக் காட்சி வரை நம்மைப் பார்க்க வைக்கும் படம் 'தி பாஸ்ட்' (The Past - Le Passé). தலைப்பை 'தி பாஸ்ட்' என்று வைத்துவிட்டு ஒரு 'பிளாஷ் பேக்' கூட இல்லாமலும், இதுவரை நடந்தது என்ன என்று ஒரு கதை சொல்லி மூலமோ குட்டிக் கதை மூலமோ சொல்ல முற்படாமல் கதையில் வரும் காட்சிகளின் நகர்வை வைத்தும், வசனங்களை வைத்தும் நம்மைப் புரிந்து கொள்ள வைக்கிறார் இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹதி.
ஒரு படத்தைக் கண்ணெடுக்காமல் அதில் மூழ்கி நாமும் அதில் ஒர் அங்கமாகி நடக்கும் நிகழ்வுகளைக் கவனித்து அதைப்பற்றி விமர்சனம் செய்வது மற்றவர் வீட்டு விஷயத்தைப் புறம் பேசுவது போல் உணர வைக்கும் அளவிற்கு அமைந்துள்ள திரைப்படம். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கி நீ என் கதையின் வெறும் கதாபாத்திரமல்ல இது நடிப்பல்ல நிஜமென்று நம்மை நம்ப வைக்கும்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் பங்கை செவ்வனே செய்துள்ளனர். அது முக்கிய கதாபாத்திரமாக இருந்தாலும் சரி ஒரு காட்சியில் வசனமில்லாமல் வந்து போகிறவரென்றாலும் சரி. இப்படி அமைய வேண்டுமென்றால் அந்த இயக்குனர் தன் கண் முன்னே இப்படத்தை இயக்குவதற்கு முன்பே ஓட்டிப் பார்த்திருக்கக் கூடுமென்பது என் கணிப்பு.
'எ செப்பரேஷனை' தொடர்ந்து அதே விவாகரத்தை மையமாகக் கொண்ட படம் 'தி பாஸ்ட்'. அஹ்மத்- மேரியான் இருவரும் காரை பின்னோக்கி எடுக்கும் போது பின்புறம் ஒரே நேரத்தில் திரும்பி பார்ப்பது கடந்தவற்றைத் திரும்பிப் பார்ப்பவர்கள் இவர்கள் என்பது போல 'தி பாஸ்ட்' என்று படத்தலைப்பு விரிகிறது. படத்தின் காட்சிகள் திருமண முறிவுக்குச் செய்யும் ஏற்பாடுகளும் அதன் பிறகு மேரியான் ஏற்படுத்திக் கொள்ளப் போகும் புதிய உறவைப் பற்றியும் புதுத் திருமண வாழ்வையொட்டியும் அதனால் பாதிக்கப்படும் குழந்தைகளைப் பற்றியுமாக நகர்கிறது.
திருமணத்தின் கசப்பால் இரு குழந்தைக்குப் பிறகு விவாகரத்து பெற்று அஹ்மத்தை கைப்பிடித்து அவர் நிழலில் குழந்தைகள் வளர்ந்து, பிறகு அவருடனும் பிளவென்பதால் மற்றொரு விவாகரத்தை வேண்டும் மேரியான், சமீர் என்பவரின் குழந்தையைச் சுமர்ந்து கொண்டு அவரை மறுமணம் செய்ய விரும்புவதை மேரியோனின் மகள் லூசி வெறுக்கிறாள். சமீரின் மகன் ஃபூவாதும் புது உறவுகளை ஏற்க முடியாமலும் தவிர்க்க முடியாமலும் தன் கோபத்தை வெளிப்படுத்துகிறான். தன் வீட்டில் அவனைப் பார்த்துக் கொள்ள யாருமில்லை. அவனது தாய் தற்கொலை செய்ய முயற்சித்துக் கோமாவில் இருக்கிறாள். அவளைத் தற்கொலைக்குத் தூண்டுவது எது? மேயான்- சமீரின் தொடர்பா? இந்தப் புள்ளிகளில் நகர்வதுதான் கதை. ஒரு பதின்ம வயது மகள் தாயின் மூன்றாவது திருமணத்தை எதிர்கொள்ளும் போராட்டமும், அமைதியாக வாயே திறக்காமல் கண்களால் பேசி வேடிக்கை பார்க்கும் அவள் தங்கை அக்காவின் கூற்றில் நியாயமிருக்கிறதா இல்லையா என்று புரிந்துக் கொள்ள முடியாத தவிப்பும், சமீரின் மகனாக வரும் ஃபூவாத்தின் வசனமில்லாத முகபாவத்தில் ஆயிரம் விஷயங்களைச் சொல்லிச் செல்ல வைக்கிறார் இயக்குனர் ஃபர்ஹதி.
தன்னைப் பற்றி மட்டும் யோசித்து சுலபமாகக் கண்ணீருடன் கிழித்துப் போடும் திருமணங்களின் வலியில் துடிப்பது குழந்தைகள் என்பதை அழுத்தமாகக் காட்டி இருக்கும் இயக்குனர் அதில் எந்த மதத்தை வலியுறுத்தியோ, அறநெறி, ஒழுக்கப் பிரச்சனைகளின் போதனையோ இல்லாமல் மிக நேர்த்தியாக அற்புதமாகச் சொல்ல விரும்பியிருக்கிறார். 'எ செப்பரேஷன்' - இஸ்லாமிய சமுதாயத்தை முன்னிறுத்தி அதன் போலித்தனமான பாசாங்குகளையும் முக்கியமாக வர்க்க வேறுபாட்டை வெளிப்படுத்தியும் அந்த உண்மையை உரக்கச் சொல்லியும் ஆஸ்கர் தட்டிச் சென்றவர் ஃபர்ஹதி. இந்தப் படத்தில் மதச்சார்பற்ற மேலை நாடுகளில் சுதந்திரம் என்ற பெயரில் பொறுப்பற்ற தவறான நடத்தையால் அடுத்தத் தலைமுறைக்கு ஒரு தவறான எடுத்துக்காட்டாகின்றனர் என்பதையும் புலப்படுத்தியிருக்கிறார்.
'அம்மா சாகட்டும்' என்கிறான் சமீரிடம் மகன் ஃபூவாத். ஆச்சர்யத்துடன் சமீர் 'ஏன் அப்படிச் சொல்கிறாய்?' என்று கேட்க, 'உயிர் வாழ விரும்பாதவர்கள் தானே தற்கொலை செய்ய முயற்சிப்பார்கள், பின்பு ஏன் அம்மா உயிருடன் இருக்க வேண்டும்?' என்று தாய் தன்னைப் பற்றிச் சிறிதும் எண்ணிப் பார்க்காமல் வெறுக்கத்தக்க செயலின் கோப வெளிப்பாட்டை ஒரு குழந்தையாகத் தம் உடல்மொழியின் மூலம் வெளிப்படுத்தும் அந்தப் பிஞ்சின் நடிப்பு பாராட்டுக்குரியது.
ஏ.ஆர். ரஹ்மான் எப்படித் தன் ஹிட் மெட்டை அடுத்தப் படத்தில் புகுத்தி அதையும் ஹிட்டாக்குவாரோ அப்படி ஃபர்ஹதி ஆஸ்கர் வென்ற 'எ செப்பரேஷனில்' பேமேன் மவாதியுடைய அதே தோற்றத்தையும் ஒப்பனையும் கதாநாயகனான அஹ்மத்தாக வரும் அலி முசஃபாவுக்குத் தந்திருக்கிறார். நானும் இந்தக் கதாநாயகனை படம் முடியும் வரை ஃபர்ஹதியின் மற்றப் படங்களான 'அபவுட் எல்லி', 'எ செப்ரேஷனில்' வரும் பேமேன் மவாதி என்றே நினைத்திருந்தேன். அதன் பிறகுதான் இவர் - அலி முசாஃபா ஓர் ஈரானிய நடிகரைப் பிரஞ்ச் கற்றுக் கொள்ளச் செய்து இந்தப் படத்தில் நடிக்க வைத்துள்ளார் - என்பது பற்றி தெரிந்துக் கொண்டேன்.
இப்படத்தின் கதாநாயகி மேரியானாக வரும் பெஜோ தேர்ந்த நடிகை. சென்ற வருட ஆஸ்கருக்கு சிறந்த நடிக்கைக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இப்படத்தில் கோபக் கணைகளை வீசும் போதும் தன் மகள் லூசியிடம் 'ஏன் எனக்கு இப்படி ஒரு காரியத்தைப் பண்ணினே' என்று ஓலமிட்டு அழும் போதும், அவர் அடையும் ஆத்திரத்தில் நாமும் சேர்ந்தே நடுங்கிவிடுகிறோம்.
கவிதை நயம் கொண்ட ஃபர்ஹதியின் படங்களில் சில காட்சிகளில் நேரடியாகச் சிலவற்றைச் சொல்லாமல் சொல்லிவிடுவார். இப்படியாக ஒரு காட்சியில் குழாயில் தண்ணீர் கசியும் அஹ்மத் அதைச் சரி செய்து நிறுத்த முற்படுவார். சரி செய்துவிட்டார் என்று நினைக்கும் போது அது மறுபடியும் கசிகிறது என்பார். உடனே சமீர் நீங்க ஒதுங்குங்க நான் சரி செய்கிறேன் என்று குனிவார். இந்தக் காட்சியில் நான் புரிந்துக் கொண்டது மேரியானின் கசியும் அன்பையும் தேவையையும் பூர்த்தி செய்ய முற்பட்டு முடியாமல் இப்போது சமீர் அதில் முயற்சிக்க இறங்கியுள்ளார் என்பதாக.
காட்சிகளைக் கூர்ந்து கவனித்தால் மறைவான நிறைய விஷயங்கள் வசனமில்லாமல் புரிந்துவிடும். இப்படியான நுணுக்கமான காட்சிகளைச் சரியாகப் பதிந்துவிடுபவர் ஒளிப்பதிவாளர் மஹ்மூத் கலாரிதான். இயக்குனர் பார்த்த, பார்க்க விரும்பிய அத்தனை பொருட்களையும் காட்சி விவரிப்பையும் ஒரே 'பிரேமில்' கச்சிதமாக நம் கண் முன் நிறுத்துபவர். சின்ன அறையாக இருந்தாலும் சரி, சாலைக்கு அப்பால் ஓடும் ரெயில் தண்டவாளமாக இருந்தாலும் சரி எல்லாவற்றையும் நமக்குக் காட்டி விடுகிறார். சின்ன ஜன்னலின் வழியாக மேரியான் கீழே குழந்தைகளின் சைக்கிளை சரி செய்யும் அஹ்மத்தை கவனிப்பதைக் கூட அவர் கண் வழியே அந்தக் காட்சியை நம்மைப் பார்க்க வைக்க வல்லவர். நான் விவரிக்கும் ஒவ்வொன்றும் நீங்கள் இந்தப் படத்தைப் பார்த்து இரசிக்கும் போது புரியும்.
'தி பாஸ்ட்' கடந்த காலம் அல்லது கடந்தவை என்பது வெறும் கடந்தவையல்ல நடந்த பாதை, நினைவுகள், பழைய உறவு என்று பல பொருள்படும் இந்தப் படத்தின் முதல் காட்சியில் அஹ்மத்- மேரியான் இருவரும் அடர்த்தியான கண்ணாடியின் வெவ்வேறு புறங்களிலிருந்து கையசைவின் மூலம் மட்டுமே பேசிக் கொள்வார்கள். அதுதான் அவர்கள் வாழ்ந்த கடந்தவையின் புரிதல்.

1 comment:
அருமையான விமர்சனம்...
Post a Comment