Monday, August 07, 2006

உறவில்லாத உறவு

பிறந்தவுடன்
பெற்ற உறவில்லை
பின்னாளில்
உற்ற உறவும் இல்லை

உன் சந்திப்பே
என் சந்தோஷமானது
மலிவாக மகிழ்ச்சி என்றால்
அதன் மறுபெயர் நீ என்பேன்
என் பிரச்சனைகளுக்கு
யோசனை கிடங்கானாய்
பாதிப்பில் பாசி படிந்தால்
பூசி தேற்றுபவன் நீ தானே
என் அறிவு வறுமையிலும்
ஆதரவாய் நீ நின்றாய்

நீயே என்
இன்பத்தின் ஆரம்பம்
தவிப்பின் துணை
தனிமையின் தீர்வு
துன்பத்தின் தேடல்

என் உளறல்களையும்
காது கொடுத்து கேட்டாய்
பதிலாக கனிவாய் மொழி பேசினாய்
கருணை பார்வை வீசினாய்
தேவைக்கு தோள் கொடுத்தாய்

என் ஐம்புலனையும் ஆட்சி செய்யும்
புதிய பிரதிநிதியே
நீ என்
சாதியோ, மதமோ, மொழியோ, ஊரோ,
காதலோ, உடன்பிறப்போ, இரத்த பந்தமோ
இல்லாதபோது
உணர்வால் உணர்த்திய
உறவில்லாத உறவாக
எங்ஙனம் முளைத்தாய்?

17 comments:

சந்திப்பு said...

ஜெசிலா கவிதை உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது. அதில் உள்ளக் கொதிப்பும் வெளிப்படுகிறது.

அந்த துன்பத்தின் தேடல்?

தங்கள் கவிதை மிளிர வாழ்த்துக்கள்!

துபாய் ராஜா said...

ஜெஸிலா,நன்றாக உள்ளது.நண்பர்கள்
தினக்கவிதை இது ??!!.

G Gowtham said...

நட்பின் வலிமை இது!
'அதே வானம்
அதே நிலவு
நான் மட்டும் புதிதாய்' என்று ஆரம்பித்து
'இத்தனை நாளாய்
எங்கு இருந்தாய்
அடியே சகியே!' என முடிவதாய்
பல வருடங்களுக்கு முன்னால்
என்னால் கிறுக்கப்பட்ட கவிதை ஒன்றை நினைவு படுத்தியது உங்கள் கவிதை!
வாழ்த்துக்கள்

Jazeela said...

நன்றி பெருமாள்.

ராஜா, சரியா கண்டுபிடிச்ச பிறகு எதுக்கு கேள்விக்குறி?

கெளதம், அந்த கவிதை உங்க வலைப்பூல இருந்தா சுட்டியை தந்திருக்கலாமே.

இராம்/Raam said...

ஜெசிலா,

நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்... :)

ஏ.எம்.ரஹ்மான் said...

ஜெஸிலா
என்ன வென்று சொல்வதம்மா வஞ்சி உந்தன் சிந்தனைகளை...

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏற்படும் உணர்வு.

வாழ்த்துக்கள்!

G Gowtham said...

//கெளதம், அந்த கவிதை உங்க வலைப்பூல இருந்தா சுட்டியை தந்திருக்கலாமே. //
இல்லை ஜெஸிலா,
உதிராத வண்ணச் சிறகுடன் என்னைக் கடந்துபோன (வார்த்தைப் பிரயோகம் : இந்த வார குங்குமத்தில் வெளியான ராசுக்குட்டியின் வலைப்பூவாளி) ஒரு தோழியை நினைத்து நான் கிறுக்கிய கவிதை அது.
மற்றபடி கவிஞர்கள் வரிசையில் நான் இல்லாததால் வலைப்பூவில் கவிதை பரி'சோதனை'யெல்லாம் செய்யவில்லை.
நினைவுபடுத்திப் பார்க்க முயல்கிறேன். சிற்றறிவுக்குச் சிக்கினால் எழுதுகிறேன்.

Jazeela said...

ராமுக்கும், ஏ.எம். ரஹ்மானுக்கும் நன்றிகள்.

கதிர் said...

ஜெஸிலாக்கா,

கவிதை நல்லா இருக்கு,

http://umakathir.blogspot.com/2006/08/blog-post_11.html

இங்க பாருங்க,
தேறுமான்னு பாத்து சொல்லுங்க

இப்னு ஹம்துன் said...

நல்ல கவிதை.

மதுமிதா said...

நன்று ஜெசிலா

///
மலிவாக மகிழ்ச்சி என்றால்
அதன் மறுபெயர் நீ என்பேன்
///

Jazeela said...

கதிர், பார்த்தேன் ஓட்டும் போட்டேன். நன்றி.

நன்றி இப்னு.

நன்றி மதுமிதா.

Anonymous said...

your poetry is very nice.but i feel guilty in one line that is "malivana maghizhchi endral adhu needhan" because friendship is not based on once financial position.........it is far apart than that.it is my point of view. if this comment hurts you then i am really so sorry.....'ALL THE BEST FOR YOUR FUTURE WRITINGS"...

Jazeela said...

நன்றி அபிலாஷா //"malivana maghizhchi endral adhu needhan" because friendship is not based on once financial position.// தவறாக புரிந்துக் கொண்டீர்கள். மலிவான மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு இருப்பது நட்பை பணத்தை பற்றி எடைப்போடுவதாக எடுத்துக் கொண்டுள்ளீர்கள் அப்படியல்ல மகிழ்ச்சி கிடைக்க சிலர் நிறைய செலவளிக்க வேண்டியிருக்கும். ஆனால் நண்பனை கண்டாலே மகிழ்ச்சி என்பது 'மலிவு'தானே அதைதான் அப்படி சொல்லியிருக்கிறேன். இப்போ சமாதானமாச்சா?

Anonymous said...

thank you jazeela.sorry i am mistaken......really it's nice

Anonymous said...

Assalamu Alaikum
Hi Jazeela Sister
I am Sabireen From Trichy in Tamil Nadu
Your Web Pages super what are you ding in dubai.

Anonymous said...

மலிவாக மகிழ்ச்சி என்றால்
அதன் மறுபெயர் நீ என்பேன்
வாழ்த்துக்கள்

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி