Monday, July 31, 2006

நெஞ்சு பொறுக்குதில்லையே...போடும் பருக்கைகளை
பகிர்ந்து உண்டு பழகிவிட்டது
பறவை இனம்

நாய் பூனையும் கூட
சேர்ந்து உண்ண
கற்றுக் கொண்டது

மனிதர்களாகிய நாம்தாம்
தவித்தாலும் தாகத்தை
தொலைக்க தவிர்க்கிறோம்
நதிநீரை

9 comments:

Unknown said...

எல்லாம் சரியான கேள்வி தான். பதில் தான் யாரிடமும் இல்லையே?

Anonymous said...

உங்க வலைப்பக்கத்திற்கு நான் வருவது முதல் முறை இது. தொடர்ந்து கவி தாருங்கள். வாழ்த்துக்கள்

கதிர் said...

எல்லாம் வார்த்தையில வருத்தபடத்தான் முடியும்.
இந்த இடத்திலதான் ஆறு இருந்துச்சி என்று எதிர் காலத்தில நம்ம பிள்ளைகளுக்கு சொல்ல போகிறோம்.

ஏ.எம்.ரஹ்மான் said...

சரியாக சொன்னீர்கள் ஜெஸிலா மனிதர்களை மிருகங்கள் ஆட்சி செய்யும் காலம் வந்துவிட்டது ஏன் என்றால் மனிதன் மிருகத்தைவிட கேவலமாக அல்லவா மனிதநேயமற்று இருக்கிறான்.யார் யாரை அடிக்கலாம், ஒரு நாடு மற்றொரு நாட்டை அடிக்கலாமா என்ற சிந்தனையில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

துபாய் சென்றால் பாலைவனம் ஆச்சே தண்ணீர் கிடைக்காது என்று நினைத்தேன் இங்கு எப்பொழுதும் தண்ணீர் கிடைக்கிறது, காவிரி உள்ள நம் நாட்டில் தான் தவித்தாலும் தாகத்தை தொலைக்க தண்ணீர் இல்லை.

ஜெஸிலாவின் நல்ல சிந்தனைகளுக்கு வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

அருமையான பதிவுகள்.தொடர வாழ்த்துக்கள் ஜெஸிலா !!!.

பாலசந்தர் கணேசன். said...

தொடருங்கள்

Anonymous said...

இனிய ஸ்னேகிதத்திற்கு...

ரியாத் தமிழ் சங்க மடலாற்குழு வழியே உங்கள் இந்த வலைப்பூ தளத்திற்கு வர நேரிட்டது.. உங்களுடைய எல்லாக் கவிதைகளையும் வாசித்தேன்.. சில கவிதைகளில் யதார்த்தமும் அதனூடே வழிந்தோடும் மென்மையான சோகமும் தென்பட்டது..
எல்லாக் கவிதைகளுக்கும் கீழே கருத்தெழுத ஆசைதான்.. அடியேன் கொஞ்சம் படித்துணர்வில் குறையுடையவன்.. இருப்பினும் இக்கவிதை மனிதனின் அவல நிலையை சற்று உரைக்கும்படி சொன்னதோ என்று தோணியது..

உங்களது சிந்தனை முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.. இன்னும் சீரிய கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்..

அன்புடன் - அன்பிற்காக

லக்கி ஷாஜஹான் - ரியாத்

Jazeela said...

சரியா சொன்னீங்க துபாய்வாசி, பதிலை தேடி தான் கவிதையே.

நன்றி ஜான் போஸ்கோ. முதல் முறையா வந்திருக்கீங்க. காப்பி தண்ணி குடிச்சிட்டுப் போங்கன்னு சொல்ல வந்தேன் அதுக்காட்டி போய்டீங்க ;-)

கதிர் அந்த மாதிரியான கொடூரம் நடக்க வேண்டாமென பிராத்திப்போம். அதமட்டுந்தான் செய்ய முடியும் ;-(

ரஹ்மான், நீங்க சொன்ன மாதிரி பாலைவனத்திலும் பஞ்சமில்லை. கடல்நீர் குடிநீராக்கும் திட்டத்தை நம் நாட்டில் கொண்டுவந்துவிட்டால் பிரச்சனையே இருக்காது.

நன்றி ராஜா. ஆமா, துபாய்க்கே ராஜா நீங்க தானா ;-)

நன்றி பாலசந்தர். நான் தொடருகிறேன். நீங்களும் கருத்தெழுத தொடருங்கள் ;-)

நன்றி ஷாஜகான். //அடியேன் கொஞ்சம் படித்துணர்வில் குறையுடையவன்.. // தன்னடக்கம் போல் தெரிகிறது. நீங்கள் எழுதிய ஹுசைன் மரைக்காயர்தான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

சந்திப்பு said...

இயற்கையன்னை நிலம், நீர், காற்று ஆகிய மூன்று அத்தியவசியமானதை மனிதனுக்கு வழங்கி கொடை. மனிதன் (சுரண்டல்வாதி - முதலாளி - ஏகாதிபத்தியவாதிகள் என்ற அர்த்தத்தில்) மற்றொரு மனிதனை சுரண்ட ஆரம்பித்து நிலத்தை அடிப்படையாக வைத்து நிலத்தை சுரண்டினான். தற்போது நீரை சுரண்டிக்கொண்டிருக்கிறான். நீர் வியாபார பொருளாக மாறிவிட்டது. எவ்வளவு நீர் இருக்கிறதோ, அவ்வளவும் செல்வம் என்ற நிலைக்கு மாற்றிவிட்டான். தற்போது காற்றையும் சுரண்ட ஆரம்பித்துள்ளார்கள். பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் மையங்கள் திறக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. தங்கள் கவிதை காலத்தின் கண்ணாடியாய் மிளிர்கிறது. வாழ்த்துக்கள்.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி