Wednesday, December 20, 2006

வெள்ளைக்காரருங்க முட்டாளா? சாமர்த்தியமா?

சிலருக்கு புது புது உணவை சாப்பிட்டு பார்ப்பதில் அலாதி பிரியம். அதனால்தானோ இந்த 'சாப்பாடு திருவிழா' (Food Festival) வருஷம் தோறும் இங்க அமீரகத்தில தவறாம நடக்குது. பதிவு அதப்பத்தி இல்ல பயந்துடாதீங்க.

'துர்கிஷ் சாண்விட்ச்' வேணுமான்னு சாப்பாடு நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடியே ரொம்ப பாசமா வலம் வந்தா 'ரோஸிலின்' என் சக ஊழியரில் ஒருத்தி. அவ எங்க நிறுவனருடைய மகள்தான் ஆனாலும் எங்களில் ஒருவராக சாதாரண சக ஊழியராகவே பணி செய்யுறா. நான் 'வேண்டாம்ப்பா! நான் வீட்டிலிருந்து கொண்டு வந்தாச்சு'ன்னு தட்டிக்கழிச்சிட்டேன். ஆனா மத்த வெள்ளக்காரருங்க ('வெள்ளக்காரன்'னா கொஞ்சம் மரியாத கொறவா இருக்கும் அதான்) எல்லாம் 'வேணும் வேணும்'னாங்க. அவளும் 10 திர்ஹம்ஸ் (அதாவது 130 ரூபாய்) ஆகும் என்று எல்லோரிடமும் வசூலித்தாள்.

கிட்டத்தட்ட பத்து பேர் கொடுத்தார்கள் எல்லோரும் அவ ஊருக்காரங்கதான் (வெள்ளக்காரரருங்க), கீழ் கடையில் போயி மூணு ரூபாய்க்கு (ரூபான்னா திர்ஹம் என்று பொருள் கொள்க, அப்படி சொல்லி இருபது வருஷத்திற்கு மேல பழக்கமாயிடுச்சில்ல) ரொட்டி வாங்கி, 5 ரூபாய்க்கு மயூனைஸ் வாங்கி, சில காய்கறிகளும் வாங்கி, மொத்தத்தில் வெறும் 15 திர்ஹம் மட்டும் செலவழிச்சி பொருள் வாங்கி வந்து ரொட்டிய வெட்டி சாண்ட்விச், அதில் மயூ தடவி, காய்களை உள்ளே அடுக்கி போட்டுக் கொடுத்தாள். சாப்பிட ஆரம்பித்தார்கள். அவளும் "எப்படி இருக்கு சுவை" என்று ஸ்டைலாக கேட்க, ஒருவர் "'ம்ம்ம்.. ரொம்ப நல்லாயிருக்கு, எப்படி செஞ்சீங்க" (சமையல் குறிப்பு வேறையான்னு நினச்சிக்கிட்டேன்). இன்னொருவர் "ரொம்ப சிரமமெடுத்து செஞ்சது போலிருக்கு, சுவை நல்லா இருக்கு" (கஷ்டகாலண்டா சாமி! ). இப்படி ஒவ்வொருவரும் 'ஆஹா' 'ஓஹோ' பிரமாதம்ன்னு சாப்பிடுறாங்க (சில கவிதைகளை புரியாமே இரசிக்கிற சில பேர் மாதிரி). இவள் பதிலுக்கு "பின்ன சுவையாகத்தானே இருக்கும், அன்போடு பரிமாறியதல்லவா" என்றாள் அடக்கமாக. எனக்கு சிரிப்பு தாங்கல. என்னைப் போலவே வீட்டிலிருந்து கொண்டு வந்தவன் நல்ல வேளை நாம் தப்பித்தோம் என்று முணுமுணுத்தான்.

இந்த கேண கிறுக்கனுங்க (முட்டாள்கள் ஆகிவிட்ட பின்பு இவர்களுக்கு மரியாதை எதக்கு?) அத சும்மா சாப்பிட்டு போகம என்னைப் பார்த்து 'இந்த இந்தியர்கள் நீங்கள் எப்படித்தான் தினமும் சோறும் கறியும் சாப்பிடுகிறீர்கள் ரொம்ப செலவாகவில்லையா?' என்று கேட்டுவைக்க. நானும் உடனே "நாங்க வீட்டிலிருந்து சமைத்துக் கொண்டு வந்துவிடுகிறோம், இங்க வந்து வாங்குவதில்லை என்று அப்பாவியாக பதில் சொன்னதில் உள்ள சூசகத்தையும் மரமண்டைகளுக்கு புரியவில்லை. இவர்கள் ஏமாந்தார்களா அல்லது அவள் சாமார்த்தியசாலியான்னு நீங்களே சொல்லுங்க.

5 comments:

Anonymous said...

வெள்ளைக்காரனுங்க முட்டாள்
வெள்ளைக்காரிங்க சாமர்த்தியம்.

ஏ.எம்.ரஹ்மான் said...

ஜெஸிலா தங்கச்சி ரம்ஜான் அப்ப போன நீங்க இப்ப தான் வரீங்க ரொம்ப வேலையோ? என்னமோ எழுதியிருக்கிங்க வெள்ளைக்காரனுக்கு அப்படி சாப்பிட்டால்தான் சுவைபோல, ஆனால் சொல்லுர விதம் சுவையா இருக்கு, அல்லாஹ் நாடினால் கண்டிப்பா உங்களை நேரில் சந்திப்பேன் ஜெஸிலா தங்கச்சி. என்னமோ தெறியல உங்கல தோழியா ஏற்க மனம் மறுக்குது. வாழ்த்துக்கள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// ஏ.எம்.ரஹ்மான் said...
ஜெஸிலா தங்கச்சி //


மறுபடியும் ஒரு பாசமலரா... :)

Jazeela said...

வாங்க ரஹ்மான் அண்ணன், எப்படி இருக்கீங்க? தங்கச்சின்னு பாசமா வாய் நிறைய இல்ல இல்ல கை நிறைய எழுதிய பிறகு சுகம் விசாரிக்கலன்னா எப்படி, அதான்.

nagoreismail said...

(சில கவிதைகளை புரியாமே இரசிக்கிற சில பேர் மாதிரி)
இந்த வரிகள் உள்பட அனைத்தையுமே புரிந்த கவிதையை போல் ரசித்தேன். நிற்க. ரோஸிலின் என்பவள் பொதுவான பாஷையில் சொன்னால், 'பிழைக்க தெரிந்தவள்' ஆனால் உண்மையில் 'ஏமாற்றுக்காரி'- கேண கிறுக்கணுங்களான வெள்ளைகாரர்கள் 'ஏமாந்த சோணகிரி' எங்க ஊரு பாஷையில் சொன்னால் "மலாக்கா பேயன்" என்று சொல்லலாம்.

மலேசிய நாட்டில் உள்ள மலாக்கா நகரில் தொழில் புரிந்த பெரும் பணக்காரர்கள் ஊரில் வந்து வீடு கட்டுவார்கள், ஆனால் ஒரு செங்கல் விலை கூட தெரியாது, இப்படி பட்டவர்களை மக்கள் சுலபமாக ஏமாற்றி விடுவார்கள், இப்படி ஏமாறுபவர்களை தான் மலாக்கா பேயன் என்பார்கள். இது தவறாக கூட இருந்து வேறு காரணம் கூட இருக்கலாம், அதை விசாரித்து தான் சொல்ல முடியும்"

நாகூர் இஸ்மாயில்

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி