Tuesday, July 11, 2006

உயிரினமே

குடத்தை கீழே வைக்காமல்
நகர்ந்தது தண்ணீரை தேடி
நத்தை
**

வண்ணங்களின் கலவையை
களவாடினேன் இறையிடமிருந்து
பட்டாம்பூச்சி
**

வீட்டுக்குள்ளே
வீட்டைக்கட்டியது
எறும்புகள்
**

சேமிப்பை கற்றுக்கொண்டேன்
ஒழுகினத்தை கற்றுக்கொண்டேன்
எறும்புகளிடமிருந்து.
**

பூமியில்
பிணைந்த வாழ்க்கை
மண் புழுக்கள்
**

நிர்வாண குளியலை
ஒழிந்து பார்த்து ரசித்தது
சுவற்று பல்லி
**

கண்ணீரால்தான்
கடல் கசந்ததோ
மீன்கள்
**

கனவில்லை காரணம் தூக்கமில்லை
ஓசை காதை பிளந்தது
கொசுக்கடி
**

ரங்கோலி
ஏமாற்றம்
பசியுடன் எறும்புகள்
**

7 comments:

நாகை சிவா said...

//குடத்தை கீழே வைக்காமல்
நகர்ந்தது தண்ணீரை தேடி
நத்தை//
//ரங்கோலி
ஏமாற்றம்
பசியுடன் எறும்புகள்//

இது இரண்டு நல்லா இருக்குங்க.

"ஏமாற்றத்துடன்
எறும்புகள்
வாசலில்
ரங்கோலி!"

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

/*குடத்தை கீழே வைக்காமல்
நகர்ந்தது தண்ணீரை தேடி
நத்தை*/

/*நிர்வாண குளியலை
ஒழிந்து பார்த்து ரசித்தது
சுவற்று பல்லி*/

/*ரங்கோலி
ஏமாற்றம்
பசியுடன் எறும்புகள்*/
இந்தக் கவிதைகளை நான் மிகவும் ரசிக்கிறேன்!
தரமான கவிதைகள்! வாழ்த்துக்கள்!

கதிர் said...

வழக்கம்போலவே எல்லாம் நல்லா இருக்கு

"ரங்கோலி
ஏமாற்றம்
பசியுடன் எறும்புகள்"

இது என்னை கவர்ந்தது

அன்புடன்
தம்பி

பின்குறிப்பு: ஆறு போட்டாச்சு!!

Jazeela said...

நாகை சிவா, சேரல் மற்றும் உமா கதிர் -பாராடுக்கு நன்றி.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
ரங்கோலி
ஏமாற்றம்
பசியுடன் எறும்புகள்
///

கோலப் பொடியை அரிசி மாவுக்கு பதிலாக உபயோகிப்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்( அதைப் பத்திதானே சொல்லிருக்கீங்க இல்லை நான் தப்பா புரிஞ்சுகிட்டேனா? )

மா.கலை அரசன் said...

நல்ல தரமான வார்த்தை பிரயோகங்கள்.
//குடத்தை கீழே வைக்காமல்
நகர்ந்தது தண்ணீரை தேடி
நத்தை//
மிகவும் ரசிக்கும் படி இருக்கின்றது.

Jazeela said...

குமரன் சரியாக புரிந்த பிறகு சந்தேகமென்ன?

நன்றி கலை அரசன்.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி