Thursday, July 13, 2006

குருதி வியர்வை

விவசாயின் காயம்
மருந்து
உழவு மண்
**

செத்தால்தான்
சோறு
சாவு கூத்தாடி
**

கடன்பட்டவனின்
இரத்த வாடை
வட்டிப்பணம்
**

பிணம் எரிந்தால்தான்
எரியும் வயிற்றுக்கு சோறு
வெட்டியான் வாழ்க்கை
**

நிலத்தில் வயிற்றை கழுவ
வானத்தை நோக்கினர்
விவசாயிகளின் வறுமை
**

உயர்ந்தது உன் கொள்கையென
கைத்தட்டி உயர்த்தி விட்டோம்
உயர்ந்தது விலைவாசியும்.
**

எச்சிலை சேர்த்து
தாகத்தை தொலைத்தனர்
தண்ணீர் பஞ்சம்
**

பழைய சன்னல் திரையில்
புது பாவாடை
ஏழை குடியாள்
**

10 comments:

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
பழைய சன்னல் திரையில்
புது பாவாடை
ஏழை குடியாள்
///
///
பிணம் எரிந்தால்தான்
எரியும் வயிற்றுக்கு சோறு
வெட்டியான் வாழ்க்கை
///

இது ரெண்டும் நல்லா இருக்குங்க....

நிறைய ஹைக்கூதான் எழுதறீங்க ஹைக்கூதான் ஸ்பெசாலிட்டி போல...

ஹைக்கூ தவிர மத்ததும் எழுதுங்க...

- யெஸ்.பாலபாரதி said...

//பழைய சன்னல் திரையில்
புது பாவாடை
ஏழை குடியாள்//
நல்ல பதிவு.
இன்னும் சிறப்பாக உங்களால் ஹைகூ எழுதிட முடியுமென்று நம்புகிறேன்.
கூடுமான வரை சொந்த அனுபவங்களில் இருந்து எழுத முயலுங்கள்.

ILA (a) இளா said...

விவசாயத்தைப்பற்றி குறல் குடுக்க இன்னொரு இருப்பதை நினைத்து மகிழ்கிறேன். வாழ்த்துக்கள்

ஏ.எம்.ரஹ்மான் said...

நமது தமிழ் மண்ணை நினைவில் வைத்துள்ளீர்களே! நீயே உழவுப் பென்.
என்றும்
www.rashmiatamilnet.blogspot.com
www.tntjbismiamr.blogspot.com

பாலசந்தர் கணேசன். said...

காதலை பாடுபவர்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான குரல், இந்த குரல் ஓங்கி ஒலிக்கட்டும்

கதிர் said...

ம்ம் கலக்குங்க

"நிலத்திற்கு நீராதாரம்
உழவனுக்கு நீராகரம்"

ஹி ஹி ஹி எல்லாம் உங்களை பாத்துதான்

அன்புடன்
தம்பி

Jazeela said...

குமரன் நீங்க சொன்னதற்காகவே வேறு எழுதியிருக்கிறேன் அய்கூவை தவிர.

யாழிசைச்செல்வன்: கண்டிப்பாக இன்னும் நன்றாக எழுத முயற்சிக்கிறேன்.

நன்றி இளா.

மண்ணை மறக்க முடியுமா முஜீப்?

வாழ்த்திய பாலசந்தர் கணேசனுக்கு நன்றி.

நல்லா இருக்கே கதிர், நிறைய எழுதுங்க.

கோவி.கண்ணன் [GK] said...

//உயர்ந்தது உன் கொள்கையென
கைத்தட்டி உயர்த்தி விட்டோம்
உயர்ந்தது விலைவாசியும்.//
ஜெஸி...
உங்கள் கவிதைகள் எல்லா தளங்களையும் நன்றாக அலசுகிறது.

கோவி.க, தளங்கள் அழுக்கா இருக்குதான்னு ? கேட்டு வைக்காதீங்க :)

Anonymous said...

naveena kavithai try pannungalen..

Basho voda haiku padinga it's very deep and beautiful ...,,

ayyanar.v@gmail.com

Jazeela said...

நவீன கவிதையா? அப்படின்னா ;-)

கொஞ்சம் சொல்லிதாங்க கத்துக்கிட்டு எழுதிப்பார்க்கிறேன். ;-)

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி