Tuesday, December 25, 2007

எம்.ஓ.பி. வைஷ்ணவாவின் மறுபக்கம்


கீழ்க்கண்ட பின்னூட்டங்கள் என்னுடைய 'கல்லூரி - நிஜமும் நிழலும்'- பதிவுக்கு வந்தவை. அரசாங்க விடுமுறையை கல்லூரிகள் தர மறுக்கிறது என்று நான் எழுதப் போக, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக அதிர்ச்சி தரும் பின்னூட்டங்கள். இது உண்மைதானா என்ற கேள்வியை எழுப்புகிறது.

hi jaseela,
even i'm a student of MOP. forget abt govt holidays atleast v can adjust. bt i want to tel an important worst thing our coll did last year.

everybody outside thinks tht our coll is gr8 and it has campus placements n all. bt the rule for the placement is tht every student who are selected in placements must give their first month salary to the coll tht too b4 receiving the salary. if they don giv the offer letters frm the company wont b given to that student.

idhu kodumailayum kodumaila...

*******************

Hello jazeela,
someone from my college has written about that campus placement. i appreciate her guts and that rule is true. so u dont have to worry about its authenticity. But she forgot to include an idiotic incident that happend last year.

A student from our college was selected from the company google. The college asked her to pay Rs.20000 (i.e) half the amount of her gross salary. She was from a middle class family and so she didnt have that amount at hand. So her father said he'll pay when she receives her first salary. The management insulted her father and asked him to get out of the office and the pathetic thing is that the girl was barred from writing her end semester exam.

How cheap it is????

கல்வி வியாபாரமயமாகி விட்டதை நாமெல்லாம் அறிந்திருந்தாலும் இந்த வகையில் தரம் தாழ்ந்து வருவதை அறியும் போது கொஞ்சம் பயமாகக் கூட இருக்கிறது. பெற்றவர்கள் பார்த்து நல்ல கல்லூரியென்று சேர்த்தால், படிக்குமிடத்திலேயே மகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய வாய்ப்பு இருப்பதாக நம்பினால் இப்படியொரு இடியா வந்து விழும்? தனியார் மயமாக்கல், தன்னாட்சி என்று கல்லூரிகளுக்கு ஆதிக்கம் வந்துவிட்டதால் இப்படி அதிகார துஷ்பிரயோகம் செய்து மாணவிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இது போன்ற கல்லூரிகளுக்கு அரசாங்கம் தன்னாட்சி அதிகாரத்தை ரத்து செய்தால்தான் என்ன? ஒரு கல்லூரிக்கு செய்துவிட்டாலே ஒட்டுமொத்த கல்லூரிக்கும் ஒருவித பயமிருக்கத்தான் செய்யும். எந்த ஒரு செயலை செய்யும் போதும் யோசிக்கவே செய்வார்கள்.

வேலை வாங்கி தரும் பிரதிநிதி நிறுவனங்கள் (recruitment agencies) கூட தனக்கான ஊதியத்தை நிறுவனங்களிடம்தான் வாங்கிக் கொள்ளுமே தவிர வேலையில் சேரும் நபரிடமிருந்தில்லை. அப்படியிருக்க அற்பத்தனமாக முதல் சம்பளத்தை வேலையில் சேரும் முன்பே மாணவிகளிடம் வாங்குவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

எங்கேயோ இருக்கும் என் காதுகளுக்கு இது போன்ற விஷயங்கள் எட்டும் போது உள்ளூரிலேயே இருக்கும் ஊடங்கள் ஊமையாக இருக்க காரணமேதும் உண்டா? சின்ன சமாச்சாரங்களையும் 'சிறப்புப் பார்வையாக' ஊதி பெருசாக்குபவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா? அல்லது அலசி செய்தி வெளியிடுகிறோம் என்ற விகடகவிகளுக்கு இதெல்லாம் பெரிய விஷயமில்லையா? ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் அல்லவே!

என் முந்தைய பதிவிற்கு பாதிக்கப்பட்ட மாணவிகளைத் தவிர, கல்லூரியின் நிழலிற்கு ( பட விமர்சனத்திற்கு) மட்டுமே பின்னூட்டமிட்ட பதிவர்கள் நிஜத்தைக் கண்டும் காணாமல் போனது ஆச்சர்யமளிப்பதாய் இருந்தது. ஊடகங்கள் அரசியல் சார்பாக, சாதி ரீதியாக, வியாபார மயமாகிப் போய்விட்டன, நம்மைப் போன்ற வலைப்பதிவர்களாவது ஒளிந்துக்கிடக்கும் சமூக அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடகமாக நம் வலைப்பதிவை அமைத்துக் கொள்வோமே? சேர்ந்து குரல் கொடுங்கள். அதன் மூலம் சேர வேண்டிய காதுகளுக்குச் சென்று சேர வைப்போம்.

38 comments:

குட்டிபிசாசு said...

என்னங்க கல்லூரி படவிமர்சனம் மாறி சிரியஸாக போயிகிட்டு இருக்கு!!

"துப்பறியும் ஜெஸிலா" இது எப்படி இருக்கு!!

மங்கை said...

ஜெஸீலா

இந்த விசயத்தை வலையேத்தியமைக்கு பாராட்டுக்கள்... பதிவுகள் பொது மக்களிடையே பிரபலமாகி வரும் போது இது போன்ற பதிவுகள் அவசியம்...மாணவிகள் சொன்னது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக இதை ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.. இது போல பாதிக்கப்பட்ட மாணவிகளே இதற்கு பதில் அளிக்க முடியும்...

மனது கஷ்டப்படத்தான் செய்கிறது...

இந்த அளவுக்கா நமது கல்வியாளர்கள் (?) தரம் கெட்டு போய்விட்டார்கள்..

வவ்வால் said...

//எங்கேயோ இருக்கும் என் காதுகளுக்கு இது போன்ற விஷயங்கள் எட்டும் போது உள்ளூரிலேயே இருக்கும் ஊடங்கள் ஊமையாக இருக்க காரணமேதும் உண்டா? சின்ன சமாச்சாரங்களையும் 'சிறப்புப் பார்வையாக' ஊதி பெருசாக்குபவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா? அல்லது அலசி செய்தி வெளியிடுகிறோம் என்ற விகடகவிகளுக்கு இதெல்லாம் பெரிய விஷயமில்லையா? ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் அல்லவே!//

ஜெசிலா,

அந்த கல்லூரி செய்வது மட்டமான வேலை என்பது அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. மேலும் இந்த சம்பளத்தில் பணம் கேட்பது, எல்லாம் பத்திரிக்கைகளில் வந்தும் விட்டது. அனேகமாக 3-4 ஆண்டுகளுக்கு முன்னரே , அப்போது எல்லாம் உங்களுக்கு பத்திரிக்கை படிக்கும் வழக்கம் இருந்திக்காது போல!

இப்போத்தான் உங்களுக்கு வலைபதிவு இருக்குனு எதிர்வினையாற்றுறிங்க போல!

ஆமாம் அந்த டிரஸ் கோட் மேட்டர்ல கூட நீங்க சத்தம் காட்டலையே? இப்படித்தான் ஒருத்தர் ஒருத்தருக்கு ஒன்றை பிரச்சினையாக பேசப்பிடிக்கும்.


அப்போ உங்களை எந்த குட்டை மட்டைனு சொல்வதாம்?

அவர்களும் சில மாணவர்களை விட்டு படித்தக்கல்லூரிக்கு விருப்பப்பட்டே அப்படி அளிப்பதாகவும், அது கல்லூரி வளர்ச்சிக்கு பயன்படுகிறது என்றும் பேட்டிக்கொடுக்க வைத்தார்கள்.

அதோடு அமுங்கிவிட்டது அப்பிரச்சினை.

ஒரு கல்லூரில டிரஸ் கோட் வைத்து அதனைக்கொண்டு அங்கு வரும் விருந்தினர்களையும் கேவலப்ப்படுத்தினா, அங்கே தான் அப்படினு தெரியும்ல ஏன் போகிறாய்னு தானே இங்கே கேட்கிறாங்க, இதுக்கும் அப்படித்தான் கேட்பாங்க!

Osai Chella said...

mudinthaal antha college placement officer number kudunga thozhi. Visaarichuduvom!

webmediaconsultant AT yahoo.com

Jazeela said...

வவ்வால், எப்படி இப்படியெல்லாம்? பெரிய ஹீரோ தான் நீங்க போங்க :-)
//அனேகமாக 3-4 ஆண்டுகளுக்கு முன்னரே , அப்போது எல்லாம் உங்களுக்கு பத்திரிக்கை படிக்கும் வழக்கம் இருந்திக்காது போல// 3-4 ஆண்டுகளுக்கு முன்னாடி வந்துட்டு பிரச்சனை தீர்ந்திருந்தா ஏன் போன ஆண்டு எங்க கல்லூரியில் இப்படி நடந்ததுன்னு எழுதப் போறாங்க? நீங்க சொல்றத பார்க்கும் போது அவங்க எழுதினது, எனக்கு கேள்வியா எழும்பியது இப்போ உறுதி செய்யப்படுது.

//ஆமாம் அந்த டிரஸ் கோட் மேட்டர்ல கூட நீங்க சத்தம் காட்டலையே? இப்படித்தான் ஒருத்தர் ஒருத்தருக்கு ஒன்றை பிரச்சினையாக பேசப்பிடிக்கும்.// டிரஸ் கோட் மேட்டரா? எனக்கு புரியலை. விளக்கமா சொன்னா பதில் எழுதுவோம்ல. //அப்போ உங்களை எந்த குட்டை மட்டைனு சொல்வதாம்? // எது நல்ல குட்டையோ அதுல ஊறியவன்னு சொல்லிக்கிடுங்க, காசா பணமா :)

//அவர்களும் சில மாணவர்களை விட்டு படித்தக்கல்லூரிக்கு விருப்பப்பட்டே அப்படி அளிப்பதாகவும், அது கல்லூரி வளர்ச்சிக்கு பயன்படுகிறது என்றும் பேட்டிக்கொடுக்க வைத்தார்கள்.// எத்தனைப்படம் பார்த்திருப்போம். பெற்றவர்களை சொல்லி குற்றமில்ல - 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' கல்லூரியே இப்படிப்பட்ட செயலை நிறுத்த வேண்டும். நிறுத்தாவிட்டால் தன்னாட்சி அதிகாரத்தை அரசு இரத்து செய்ய வேண்டும்.

//mudinthaal antha college placement officer number kudunga thozhi. Visaarichuduvom!// செல்லா, மாணவி யாராவது எழுதினாத்தான் உண்டு. மாணவிகளே, பிரச்சனையை கொண்டு வந்துட்டீங்க. செல்லா எண் கேட்கிறார் தயவுக்கூர்ந்து கொடுத்துடுங்க.

Jazeela said...

குட்டிபிசாசு, படவிமர்சனம் போயி பிரச்சனை வந்தது டும் டும் டும் :-)

நன்றி மங்கை. வெளிச்சத்திற்கு கொண்டு வந்து ஒரு தீர்வு காண வேண்டும். தரம் கெட்டவர்கள்தான் கல்வியாளர் ஆவதற்கான தகுதியோ என்னவோ தெரியலை.

Anonymous said...

சகாக்களே.
இது தான் கல்லூரியின் முகவரி.

M.O.P. VAISHNAV COLLEGE FOR WOMEN (Autonomous)
20, IV Lane, Nungambakkam High Road
Chennai - 600 034,Tamil Nadu, India.
Ph : (044)2833 0262 , (044)2833 0507
Fax: (044)28330385
E-mail : mopvcfw@eth.net
Web Site : www.mop-vaishnav.ac.in

சம்பளத்த கேக்கரதெல்லாம் டூ மச்சு

மெலட்டூர். இரா.நடராஜன் said...

இது போன்ற அக்கிரமங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. காலேஜ் சேரும்போது பொறியில் கல்லூரிகள் 5-8 லட்சம் லஞ்சம் கேட்கிறார்கள். மக்களும் கொடுக்கிறார்கள். வாங்குபவர்களும் உத்தமர்கள் இல்லை. கொடுப்பவர்களுக்கும் வெட்கம் இல்லை. இப்போது செலவழிப்போம். பிறகு வேறு வழிகளில் சம்பாதிப்போம் என்ற அழுக்கு மனப்பாண்மை புரையோடி போய்விட்டது.

நானும் பகுதி நேர பத்திரிக்கையாளன்தான். ஏதாவது ஒரு பத்திரிக்கையில் கவர் செய்ய முயற்சிக்கிறேன். நீங்களும் தனியார் செய்தி தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகளை தொடர்பு கொண்டு சொல்லுங்கள். ஜூனியர் இல்லையென்றால் நக்கீரன் இருக்கிறது. குங்குமம் இருக்கிறது. என்.டி.டி.வி இருக்கிறது. எல்லா கதவுகளையும் தட்டுங்கள். அக்கிரமகாரர்களின் கொட்டம் அடங்கும்.

Jazeela said...

தொ.எண் & முகவரி கொடுத்தமைக்கு நன்றி அனானி.

வாங்க நடராஜன், ரொம்ப சரியா சொன்னீங்க. //பிறகு வேறு வழிகளில் சம்பாதிப்போம் என்ற அழுக்கு மனப்பாண்மை புரையோடி போய்விட்டது.
// ஆண்கள் பெரும்பாலும் வரதட்சனையில் பிடிங்கிடுவாங்க. தாய்குலத்த நினைச்சுப் பாருங்க :-))
பொறியியல் கல்லூரியில் மட்டுமா இப்படி இந்த எம்.ஓ.பி.லையும் மற்றவர்களுக்கு ஒரு கட்டணம் NRIக்கு ஒரு கட்டணம். துபாயில் உட்கார்ந்துக்கிட்டு எந்த தொலைக்காட்சி, பத்திரிகையை தொடர்பு கொள்ள சொல்றீங்க? சரி முயற்சிப்போம்.

Anonymous said...

Really??!!

நான் PG சென்னைல பண்ணலாம்ல இருக்கிறேன். நம்ம கோயம்புத்தூர் பரவால்ல போலிருக்கு.

இதுக்கெல்லாம் ஒரு Sting Operation பண்ணணும்.

வவ்வால் said...

ஹீரோவோ இல்லையோ அதை மக்கள் முடிவுக்கே விட்டுறலாம்.

எங்கேயோ இருக்க உங்களுக்கு தெரியுது ,ஆனா நீங்க மீடியா கண்டுக்கலைனு சொன்னதால் சொன்னேன். ஏற்கனவேக்கண்டுக்கொண்டாச்சு, அதை அவங்க சமாளிச்சுட்டாங்க.எல்லாம் அரசியல்வாதிகள் டெக்னிக் தான். அரசியல்வாதிகள் மேல ஒரு ஊழல் புகார் வந்தால் அதை சமாளிச்சுட்டு தொடர்ந்து செய்வதில்லையா, அதைப்போல இவர்களும்.

நீங்கள் யாருமே கண்டுக்கலை .... நீங்க ஒருவர் மட்டும் தான் கண்டுக்கொண்டதாக நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். மீண்டும் யாரேனும் போய் புகார் செய்தால் தானே செய்தி மீண்டும் வரும்.

லயோல கல்லூரில நடந்த ஆடை விவகாரம் கூட உங்களுக்கு தெரியலை! அப்படினு நானும் உங்களைப்போலவே சலித்துக்கொள்கிறேன்!

தற்போதெல்லாம் பெரும்பாலும் மாணவர்கள் கல்லூரிக்கு எதிராக எதிலும் போராடுவதில்லை என்பதை சொல்லவே லயோலா பற்றியும் சொன்னேன். அவர்களுக்கு எதிர்காலம் முக்கியம் இல்லையா?

கானகம் said...

கல்வி ஒரு வியாபாரம் என்பது மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

தன்னாட்சி கல்லூரிகளின் நிலைமை இப்படியென்றால் நிகர் நிலை பல்கலைகழகங்கள் எப்படி இருக்கும்?? யோசிக்கவே பயமாக இருக்கிறது..

நிகர் நிலைப் பல்கலைகழகங்கள் வசதியானவர்களால் அல்லது முன்னாள் கல்லூரி நடத்துனர்களின் செழிப்பினால் உருவானது இந்த நிகர் நிலைபல்கலைகள்..

அங்கு சென்று கேட்டால் இதைவிட கொடுமையான கதைகள் கிடைக்கும்..

Anonymous said...

In 2003 we as a group of 5 people thought of helping the Engineering Students by going to their colleges & teach them few important concepts & prepare them for the Campus Interview. We requested college to give the students for 3 days(we are ok with both weekends & weekdays) We tought the students, gave the materials & guided them for 3 days with just Rs500/.(its not compulsary & its for the time & books which we gave to them). The program went excellent & may colleges refered us to do so. But in some colleges they told us that they would get 500 from Student & would only give us Rs250/. We accepted & did that bcz we are not bascially looking for money but just to cover expenses & our main motive was to help students to get into Campus Intereiews. We know teh pain of being without job. But College people just want to make bussiness.

Regards,
Ganesh

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நிழலை நிஜமாக்கியிருக்கின்றீர்கள்... இதன் மூலமாகவாவது அவர்கள் விழிப்புணர்வு அடையட்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தவிர்க்கட்டும்.

KARTHIK said...

நடராஜன் sir சொன்னதுபோல் ஊடகங்களுக்கு இதை தெரிவிக்க வேண்டும் முயற்சி செய்வோம்

Anonymous said...

//என் முந்தைய பதிவிற்கு பாதிக்கப்பட்ட மாணவிகளைத் தவிர, கல்லூரியின் நிழலிற்கு ( பட விமர்சனத்திற்கு) மட்டுமே பின்னூட்டமிட்ட பதிவர்கள் நிஜத்தைக் கண்டும் காணாமல் போனது ஆச்சர்யமளிப்பதாய் இருந்தது.//
இதென்னா தாயீ வம்பா இருக்கு? நீங்க எழுதியிருந்தது கல்லூரி படத்தோட விமர்சனம். முழுக்க முழுக்க அத்த எழுதிபுட்டு, "இப்படி பட்ட பசு மாடு தென்னை மரத்தில் கட்டப் பட்டிருந்தது"ன்ற கதையா கடசீல ஒரு பத்தி அதும் விடுமுறை விடாதிருப்பதை பத்தி மட்டுந்தான் எழுதியிருந்தீங்க. இந்த வம்படியா சம்பளத்துல பங்கு கேக்கறதை பத்தி அங்க அனானிமஸ் கமென்ட்ஸ் ரெண்டு வந்தவுட்டுத்தான் பேச்சே வருது. ஆனா அதுக்குள்ள அந்த அனானிமஸ் கமென்ட்டை பப்ளிஷ் பண்ணினதுலயே என்னவோ நீங்க புர்ட்சி பண்ணிட்டதாவும் அத்த யாரும் கண்டுக்கலைன்னும் புலம்பறது உங்களுக்கே கொஞ்சம் த்ரீ மச்சா தெரியலீங்களா?

Anonymous said...

Hi jazeela,
thanks for writing our comments in ur blog. we didnt have any way to share our griefs with others who think our coll is the best for everything. we need to give a warning to those who thought MOP as an opportunity to their career (the way we also thought before).

I accept that it provides lot of opportunities bt money plays a gr8 role in this coll other than opportunities. The other name for MOP is Money Only Policey . NRI quota means double the amt of fees of the original amt, money for 1st yr party, money for final yr farewell, fine for dress code violation, fine for late payment of fees and fine even when cheque bounces.

Now new technique for their money income. They've given a seminar ticket and v've to sell it. If v sell then only v get marks or else v dont get 5 marks for internals. The ticket rate starts from Rs.200 - Rs.500.

Indha pudhu marketing edhukku theriyuma? Mid-sem holidays-nu 10days leave koduthirukkangalla, andha 10days leave-la endha source vazhiyavum income irukkadhu. So coll reopen aana moththama ticket endra perula kaasa karappatharku. That too seminar is based on entrepreneurship. Who vl come to buy???

Anonymous said...

Hi jezi,
i'm a 2nd yr student of MOP. V've a so-called community service in our coll. v r supposed to teach something to the community - the orphans, slums and the illiterate public to earn their living. V went to an orphanage and v thought v'll help them by donating some amount. v spoke regarding this matter to one of the staff and she said "U ppl r not doing social service, its community service. If u've money its not necessary to help them u giv that money as sponsorship for culturals on behalf of our class. Our class name will come in the magazine and even our department vl b vry proud."

Is it a matter to b proud of???

Jazeela said...

//நீங்கள் யாருமே கண்டுக்கலை .... நீங்க ஒருவர் மட்டும் தான் கண்டுக்கொண்டதாக நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.// அப்படியல்ல வவ்வால் யாராவது ஏதாவது செய்து அந்த பிள்ளைகள் பிரச்சனைக்கு ஒரு விடிவு பிறக்காத என்ற ஆதங்கம் மட்டுமே எனக்கு. ஏற்கெனவே ஊடகத்தில் வந்து பிரயோஜனமில்லை ஒரு தீர்வு கிடைக்கும் வரை - அதை தான் நான் குறிக்க விரும்புகிறேன். ஒரு தனி நபருக்கு ஒரு பிரச்சனை தெரியாமல் போவதற்கும் ஊடகத்தால் ஒரு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க செய்யாமல் போவதற்கு நிறைய வித்தியாசங்கள் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.
----------
கானகம், கொடுமையான கதைகள் உருவாகமலிருக்க விழிப்புணர்வு தேவை -அதனை ஒரு துறையில் சேரும் முன்பு பலவற்றை விசாரிக்க வேண்டும் மாணவர்கள்.
-----------
கணேஷ், எல்லாமே வியாபாரம்தான் என்பதற்கு நீங்கள் எழுதிய சம்பவமே ஒரு உதாரணம்தான். ம்ம் யார் எப்படி மாற்றுவது?
-----------
வாங்க நிலவு நண்பன், நலம்தானே? விழிப்புணர்வு பெற்றால் சரிதான் :-0
-----------
சரி கார்த்திக், ஏதாவது முயற்சியுங்கள்.
-----------
//ஆனா அதுக்குள்ள அந்த அனானிமஸ் கமென்ட்டை பப்ளிஷ் பண்ணினதுலயே என்னவோ நீங்க புர்ட்சி பண்ணிட்டதாவும் அத்த யாரும் கண்டுக்கலைன்னும் புலம்பறது உங்களுக்கே கொஞ்சம் த்ரீ மச்சா தெரியலீங்களா?// சந்திரா? இது எழுதியவங்க பெயர் சந்திரா மாதிரி தெரியலையே :-). சரி பெயர் ஆராய்ச்சி வேண்டாம் விஷயத்திற்கு வரேன். அனானி பின்னூட்டத்தை போட்டது சாதனைன்னு நான் சொன்னேனா? ஏன் இப்படி சம்பந்தமில்லாமல் குற்றம் கண்டுபிடிக்க எழும்பியிருக்கீங்க? பாவம் பிரச்சனையை எழுதினார்கள் - பதிவாக்கினால் தீர்வு ஏதாவது ஒரு ரூபத்தில் கிடைக்காதா என்பதற்கான ஆதங்கம் -அது உங்களுக்கு 4 மச்சாக இருந்தால் ஒன்றும் சொல்வதற்கில்லை.
----------
அழகிய தமிழ் மகளே வாங்க. செமினார் டிக்கெட் சரியான யோசனையா இருக்கே - கல்லூரியிலேயே பிழைக்க வழி சொல்லித் தராங்க போலிருக்கு :-)) . மன்னிக்கணும் வேதனை புரியுது. தீர்வு கிடைக்க காத்திருப்போம் கவலைப்படாதீங்க.
---------
என்னா ஒரு பெருமிதம் அவங்களுக்கு. அவர் அவருக்கு அது அதுன்னு சொல்றது இதுத்தானோ? உதவி செய்ய யார் கிட்டயும் கேட்க என்ன அவசியம்? செய்யணும்னு நினைச்சா இடது கைக்குக்கூட தெரியாம உங்க வலது கை கொடுத்து பழகட்டும். பணமா கொடுக்காவிட்டாலும் புத்தகமா, துணியா, உணவா கொடுத்திடுங்க.

Mangai said...

I am hearing about getting money by college for placement only now. Its pathetic.

If the whole college students oppose it will they dare to do?

அபி அப்பா said...

வாவ்! மரக்காணம் பாலா உங்களை கூப்பிட்டு ஒரு விஷயம் கேட்டா நீங்க எழுதின இந்த விஷயம் சூப்பர்ன்னு அர்த்தம். வவ்வாளை கும்மில கட்டி போட்ட பின்னும் இங்க வந்துடுச்சே அது எப்படி ஜெசீலா??

அபி அப்பா said...

ஏம்மா சின்ன மங்கை! பெயரை மாத்திக்க கூடாதா? கொஞ்சம் சிந்திச்சு முடிவெடுக்கலாமே?

Anonymous said...

Hello Jazeela,
A gr8 attempt! Its so nice to find a platform to bring forward al d non-sense happening in tat HELL!! As far as i kno MOP stands 4 MONEY ONLY POLICY.
MOP is n't worth to hav such a gud reputation among d public...... "ANDHA COLLEGE LA PADIKRA ELARUM EDHO ORU PAVAM PANIRKANGA"

Jazeela said...

அனானி உங்க பின்னூட்டம் வருத்தமளிக்கிறது. உங்களை போன்றவர்கள் கல்லூரியிலிருந்துக் கொண்டு பெயரிட்டு எழுதினால் தானே பிரச்சனை? கல்லூரி படிப்பு முடித்துவிட்டவர்கள் - பாதிக்கபட்டவர்கள் புகார் தொடுக்க முன் வந்தால் என்ன? உங்க பிரச்சனைக்கு வருகாலத்தில் தீர்வு கிடைக்க ஒரு அடி எடுத்து வையுங்களேன் ப்ளீஸ். பொதுவாக எழுத விருப்பமில்லையென்றால் தனிமடலிடுங்கள் அல்லது பின்னூட்டமே 'பிரசுரிக்க வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டு எழுதுங்கள். உங்கள் பெயர் வராமல் பிரச்சனையை மட்டும் வெளிக்கொண்டு வருவோம்.

Anonymous said...

hi check this week junior vikan. news published on m.o.p college based on the jessila blog repot. keep it up.

Unique One said...

Good to see an article in junior vikatan this week based on your post. Titled "Kalloori" under athiradi section. Blogging is going a long way in creating awareness. WTG :)

Anonymous said...

ஒன்னுமில்லாத வெட்டிய விசயத்தை எழுதி அதுக்கு பாராட்டு அதுல ஜீவி கவரேக் வேற
சென்ற பதிவில் தாங்கள் சொல்லி இருந்தது ஏதோ பார்பண தலைகள் தான் இதுக்கு எல்லாம் காரணம் என்று

நீங்கள் ஜாதியை இழுத்த போதே இந்த விழயத்தில் எனக்கு ஏதோ உள் குத்து இருப்பது போல தான் தோன்றியது. இப்படி ஜாதி மதம் பார்த்து லீவு விடும் கல்லூரிகள் நிறுவனங்கள் என்று பார்தால் தமிழ் நாட்டில் எக்கசகம் தேறும். உதாரணம் முஸ்லீம்களின் ஜமால் முகமது திருச்சி ,MIET திருச்சி இப்படியே கணக்கேடுத்தால் ஆயிரமாவது தேறும்

பொது பிரச்சனையில் நீங்கள் ஜாதியை துணைக்கு அழைத்தது முதலில் தவறு..

சரி அடிக்க்த கேள்வி
இந்த காலத்தில் பிஏ எம் ஏ அல்லது பி காம் படிப்பவர்கள் யார்?

எதுக்கு பயன் இல்லாமல் அல்லது எந்த படிப்பும் கிடைக்காமல் கடைசியில் சரி நாமும் படிப்போம் என்று படிப்பவர்கள் தான். இதே போல group ல் படிப்பவர்களுக்கு வேலையும் வாங்கி கொடுத்து அதுவும் ஆண்டு வருமானம் லட்சத்தில் வேலை வாங்கி கொடுத்து சரி ஒரு மாத சம்பளத்தை கல்லூரிக்கு கொடு அதை வைச்சு உன்னை மாதிரி ஆட்களை முன்னேத்தாலாம்ன்னு சொன்னா அதுல ஜாதி மத சண்டை

சொன்னா கோவிச்சுக்க கூடாது நீங்க ரொம்ப சுத்தமா வெளிபடையா ஆண்களை பாத்து பேச வலைபதியும் ஆண்களை பாத்து பேச உங்கள் மத அடிப்படை விழயங்களை வைச்சு தானே பெண்களை மட்டும் அதுவும் உங்கள் வீட்டில் வைத்து சந்திப்பு நடத்தீனர்கள்

முதலில் நீங்கள் திருந்தவும்
உங்கள் மததை திருத்தவும்

பின்னர் போராடலாம்...

இந்த பின்னோடம் வராது என்று தெரியும் கவலைபடேல் விகடனில் கல்லூரி என்ற அந்த கட்டுரையில் என் கருத்து கண்டிப்பாக வரும்

Jazeela said...

//சரி அடிக்க்த கேள்வி
இந்த காலத்தில் பிஏ எம் ஏ அல்லது பி காம் படிப்பவர்கள் யார்?

எதுக்கு பயன் இல்லாமல் அல்லது எந்த படிப்பும் கிடைக்காமல் கடைசியில் சரி நாமும் படிப்போம் என்று படிப்பவர்கள் தான்.// அப்படியா? எனக்கு தெரியவே செய்யாதே. எப்படி இப்படி ஒரு தப்பான்ன அபிப்ராயம் வச்சிருக்கீங்க நீங்க? உங்கள பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு.

//சொன்னா கோவிச்சுக்க கூடாது நீங்க ரொம்ப சுத்தமா வெளிபடையா ஆண்களை பாத்து பேச வலைபதியும் ஆண்களை பாத்து பேச உங்கள் மத அடிப்படை விழயங்களை வைச்சு தானே பெண்களை மட்டும் அதுவும் உங்கள் வீட்டில் வைத்து சந்திப்பு நடத்தீனர்கள்
முதலில் நீங்கள் திருந்தவும்
உங்கள் மததை திருத்தவும் பின்னர் போராடலாம்...// நன்றி உங்க உபதேசத்திற்கு. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி ஆண்களை / ஆண் வலைப்பதிவர்களை சந்திக்க விரும்பாமல் பெண்களை வீட்டுக்கு அழைக்கவில்லை. என் வீடு வசதியாக இருக்குமென்று நம்பினேன். அசவுகரியமாக யாராவது கருதும் பட்சத்தில் வேறு எங்கும் மாற்றவும் தயாராக இருந்தேன். துபாயில் எல்லா ஆண் வலைபதிவாளர்களை சந்தித்திருக்கிறேன். சரி இதெல்லாம் உங்களுக்கு நான் ஏன் சொல்றேன் தெரியுமா? உங்கள போல வேற யாருக்கும் கூட இப்படிப்பட்ட ஐயம் இருப்பின் தெளிவுப் பெற. அதுவுமில்லாமல் நீங்க அனானியாக எழுதினாலும் வார்த்தை வரம்பு மீறாத மரியாதைக்காக.

//இந்த பின்னோடம் வராது என்று தெரியும் கவலைபடேல் விகடனில் கல்லூரி என்ற அந்த கட்டுரையில் என் கருத்து கண்டிப்பாக வரும்// அதெப்படி அவ்வளவு தவறா கணிச்சிருக்கீங்க. இதிலிருந்தே தெரியலையா என்னை நீங்க சரியா புரிஞ்சுக்கலன்னு :-)

மெலட்டூர். இரா.நடராஜன் said...

ஜெஸீலா மேடம்

நான் உங்களுக்கு வாக்கு கொடுத்தபடி எனக்கு மிக பரிச்சயம் உள்ள விகடன் நண்பருக்கு தெரிவித்தேன். அதற்கு உடனடி பலன் கிடைத்திருக்கிறது. சனிக்கிழமை வந்த ஜூனியர் விகடனில் ஒரு ரிப்போர்ட் வந்திருக்கிறது. பாருங்கள். என்னாலான முயற்சியை எடுத்தேன். நல்லது நடந்தால் நல்லதே. உங்கள் பணியை தொடருங்கள். நானும் அடைபட்டிருக்கும் சாக்கடைகளை சரி செய்ய என்னாலான முயற்சிகளை எடுக்கிறேன்.

எனக்கு எழுத்துதான் வரும். அவ்வப்போது சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறேன். எனது வலைப்பூவான mrnatarajan.blogspotல் பதிவு செய்து வருகிறேன்.

நேரம் இருக்குமானால் விஜயம் செய்யுங்கள்.

Anonymous said...

hi jezi...
really its a pain to study in m.o.p coll.....money money money everything s money only...16\01\2008 and 17\01\2008 s a gov holiday but we had college....for the community service they giving a kurti it cost 150/- that kurti worth will be 50/- only....who going to stop them plz help us...

Jazeela said...

//சனிக்கிழமை வந்த ஜூனியர் விகடனில் ஒரு ரிப்போர்ட் வந்திருக்கிறது. பாருங்கள். //பார்த்தேன் நடராஜன் ஆனால் எனக்கு திருப்தி இல்லை. ஏதோ எழுதினோம் அது பத்திரிகையில் வந்தால் போதாது பிரச்சனைக்கு ஒரு விடிவு வேண்டும். மாணவிகளும் புகார்களை இன்னும் தொடுத்த வண்ணம்தான் உள்ளனர். :-(

Anonymous said...

கருத்துச் சொல்லுங்க என்று கேட்டிருக்கிறீர்கள். நல்லது, எம்.ஓ.பி.காலேஜ் பற்றி நீங்களும், உங்க நன்பர்களும் நிறைய சொல்லிவிட்டீர்கள். ஜூ.வி வேறு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அந்தக் கல்லூரி மாணவிகள் எந்தளவு சுயநலம் பிடித்தவர்கள், ஜாதிய மனப்பாண்மை கொண்டவர்கள் என்பதைச் சொல்லவா ஜெசிலா?

Anonymous said...

ok.. all this agreed.. but what are we going to do about this?
i am also a student \..
we have to make them realise that students can really talk for themselves will this subside..
and also we have to make them know that students wont say yes for everything that they say.
what are the solutions?

Anonymous said...

ஏதோ பிரச்சி செய்ய போவதாய் வலைபதிவில் இதை போல தலைப்பை எழுதும் தாங்கள்..சன் டிவி அரட்டை அரங்கத்தில் ஏன் முழுக்க முக்காடு அணிந்த உடையில் அதுவும் பெண்ணினதுக்கு துரோகம் செய்யவிக்கும் செயலில் ஈடுபட்டது எதனால்?
புரியவில்லை விளக்கவும்..படுதா போட்டு தான் இருக்க வேண்டும் என்ற கொளை எனக்கு பிடுபடவில்லை தோழி

Anonymous said...

//சரி அடிக்க்த கேள்வி
இந்த காலத்தில் பிஏ எம் ஏ அல்லது பி காம் படிப்பவர்கள் யார்?

எதுக்கு பயன் இல்லாமல் அல்லது எந்த படிப்பும் கிடைக்காமல் கடைசியில் சரி நாமும் படிப்போம் என்று படிப்பவர்கள் தான்.//

//அப்படியா? எனக்கு தெரியவே செய்யாதே. எப்படி இப்படி ஒரு தப்பான்ன அபிப்ராயம் வச்சிருக்கீங்க நீங்க? உங்கள பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு.

ஐயோ உங்களை பார்ட்தா தான் பாவமா இருக்கு :)
படுதா போட்டு பெண்ணுரிமை பேசும் இலக்கியவியாதி :)))

Jazeela said...

//ஏதோ பிரச்சி செய்ய போவதாய் வலைபதிவில் இதை போல தலைப்பை எழுதும் தாங்கள்..சன் டிவி அரட்டை அரங்கத்தில் ஏன் முழுக்க முக்காடு அணிந்த உடையில் அதுவும் பெண்ணினதுக்கு துரோகம் செய்யவிக்கும் செயலில் ஈடுபட்டது எதனால்?
//புரட்சி செய்ய போவதாய் நான் உங்களிடம் எப்போ சொன்னேன்? ஹிஜாப் அணியும் கொள்கை உங்களுக்கு பிடிக்கவில்லை என்பது என் சுதந்திரத்தில் நீங்கள் தலையிடுவதாக நான் நினைக்கிறேன். முகமுடி போட்டு எழுதும் / அனானியாக உங்களை விட முகத்தை காட்டியே பேசும் என் கொள்கை எனக்கு பிடிச்சிருக்கு.

//ஐயோ உங்களை பார்ட்தா தான் பாவமா இருக்கு :)
படுதா போட்டு பெண்ணுரிமை பேசும் இலக்கியவியாதி :)))// பாவப்படும் அளவுக்கில்லை. பி.காம். பி.ஏ.வாக இருக்காதாயிருக்கும் :-). பெண்ணியமென்றால் என்னவென்றே தெரியாத உங்களிடம் விளக்கம் தர என்னிடம் நேரமில்லை.

Anonymous said...

kanavan mattum kanun azhakai kadaihal pottu katta solranga ,pennurimai pesum annomy.
eppothan thirunduvarhalo? z

ராமய்யா... said...

இது மாதிரி எத்தனையோ பொறியியல் கல்லூரிகளில் கூட நடக்கிறது,,, இவர்கள் எல்லாம் பிச்சை எடுத்ததை பிடுங்கி திங்கும் பிசாசுகள்..
மதிப்பெண்களை கையில் வைத்துக்கொண்டு இவர்கள் ஆடும் ஆட்டம்... அப்பப்பா..
கல்வியே என்னவென்று தெரியாதவர்கள் கல்லூரி நடத்த வந்தால் கல்வியின் நிலை இதுதான்....
நான் படித்த பொறியியல் கல்லூரியில் இப்படித்தான்.. நின்னா கட்டணம் நடந்தா கட்டணம்.. படுத்தா கட்டணம் செத்தா கூட கட்டணம் கட்டிட்டு தான் சாவனும்..
மயி****** புடுங்கிகள்.. இவர்கள் இதற்கு வேற எதாவது தொழில் பண்ணி பொழைக்கலாம்...

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி