Sunday, December 24, 2006

தினத்தந்தியில் சவுதி அரேபியாவில் துபாய்?

பெரிய பத்திரிக்கை, பிரபல பத்திரிக்கை ஆனால் பூகோளம் தெரியாத பத்திரிக்கை. தினத்தந்தியில் ஒரு செய்தி. கீழே உள்ள சுட்டியை சுடக்கி படிக்கவும்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=305233&disdate=12/24/2006

சவுதி அரேபியா ஒரு தனி நாடு அதில் ரியாத், ஜித்தா, தமாம், அல் கோபர் என்று பல இடங்கள் உள்ளன. ஆனால் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குயின், ராஸ் அல் கைமா, புஜைரா என்ற ஏழு மாநிலங்கள் (Emirates) அடங்கியதுதான் ஐக்கிய அரபு நாடு. இதை அறியாத பிரபல தின பத்திரிக்கை 'தினத்தந்தி' சவுதி அரேபியாவில் துபாய் இருப்பது போல் செய்தி வெளியிட்டுள்ளது.

தலைப்பிலேயே தவறு. தெரிந்த தவறு ஒன்று தெரியாதது எத்தனையோ?

செய்தி: // சிகிச்சை கட்டண பாக்கிக்காக இந்திய பெண்ணின் குழந்தை பிணைக்கைதியாக சிறைவைப்பு துபாய் ஆஸ்பத்திரியில் மனிதாபிமானமற்ற சம்பவம்

துபாய், டிச. 24-

கட்டண பாக்கிக்காக இந்திய பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தையை துபாய் ஆஸ்பத்திரி பிணைக் கைதி போல பிடித்து வைத்துள்ளது.

இந்திய பெண் குழந்தை.

சவூதி அரேபியாவின் ரியாத்தில் வசிக்கும் இந்தியப் பெண் ரெஹ்னா. ஆந்திர மாநில ஐதராபாத்தை சேர்ந்தவர். இவரது கணவர் தாகிர் அக்ரம் முகமது (வயது 35). இவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்........

41 comments:

லொடுக்கு said...

அதெல்லாம் ஒரு நாளிதழ்-னு அதை போயி படிச்சிக்கிட்டு...

Jazeela said...

அடடா, லொடுக்குன்னு இப்படி சொன்னா எப்படி? அதிகம் விற்பனையாகும் நாளிதழில் செய்திகள் சரியோ இல்லையோ சின்ன சின்ன விஷயங்களிலாவது கவனம் வேண்டாமா?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

பத்திரிக்கையில் செய்திகளை இடுவதற்கு முன் அந்த தகவல்களை முழுமையாக பெற்றியருக்க வேண்டும். இது மட்டுமல்ல நிறைய செய்திகள் இப்படித்தான் இருக்கின்றன...

அரபு நாடுகள் என்றாலே சவுதி துபாய் என்று இரண்டையும் இணைத்து செய்திகளாக்கிவிடுகின்றார்கள்.

இப்படிக்கு

ரசிகவ் ஞானியார்,
திருநெல்வேலி ,
துபாய்.

dondu(#11168674346665545885) said...

"சவூதி அரேபியாவின் ரியாத்தில் வசிக்கும் இந்தியப் பெண் ரெஹ்னா. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர். இவரது கணவர் தாகிர் அக்ரம் முகமது (வயது 35). இவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரெஹ்னாவுக்கு கடந்த மாதம் 14-ந்தேதி துபாயில் உள்ள அல்-சலாமா பொது ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஷான் என்று பெயரிட்டனர்."

இதில் என்ன முரண்பாட்டைக் கன்டீர்கள்? ரியாத்தில் வசிப்பவர் துபாய் ஆஸ்பத்திரியில் போய் அட்மிட் ஆக முடியாதா?

சவுதியில் உள்ள துபாய் என்று எங்கும் எழுதியதாகத் தெரியவில்லையே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Jazeela said...

டோண்டு அண்ணாத்தே, உங்கள மாதிரி ஆளுங்க இருக்கிறவரைக்கும் முரண்பாடே தெரியாதுதான். அல்-சலாமா மருத்துவமனை துபாயில் இல்லை, சவுதியில்தான் உள்ளது. எங்களுக்கு புரிஞ்சது உங்களுக்கு புரிவது கொஞ்சம் கஷ்டம்தான். ;-) அதான் தினத்தந்திக்கும் புரியலை.

Jazeela said...

//ரசிகவ் ஞானியார்,
திருநெல்வேலி ,
துபாய்.// நீங்களும் தினத்தந்தி ரசிகர் மன்றத்திலிருந்தா ;-)

ஆமா, துபாய் வர யோசனையே இல்லாம நெல்லைலயே தங்கிட்டா மாதிரி தெரியுது?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// dondu(#4800161) said...
இதில் என்ன முரண்பாட்டைக் கன்டீர்கள்? ரியாத்தில் வசிப்பவர் துபாய் ஆஸ்பத்திரியில் போய் அட்மிட் ஆக முடியாதா? //




டோண்டு அவர்களே


சவுதிக்கும் துபாய்க்கும் வேறு வேறு விசாக்கள். நிறைமாத கர்ப்பிணிப்பெண்ணை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு கொண்டு வந்து அனுமதிப்பது என்பது தேவையில்லாத விசயம்.

அது மட்டுமல்ல ரியாத்தில் எல்லா வசதிகளும் இருக்கின்றது.

துபாயில் உள்ள அரசாங்க பொது மருத்துவமனை பெயர் அல்-சலாமா இல்லை....

விமர்சனம் தரவேண்டும் என்று விமர்சிக்காதீர்கள் உண்மைகளை புரிந்து கொள்ளுங்கள்

Leo Suresh said...

// dondu(#4800161) said...
இதில் என்ன முரண்பாட்டைக் கன்டீர்கள்? ரியாத்தில் வசிப்பவர் துபாய் ஆஸ்பத்திரியில் போய் அட்மிட் ஆக முடியாதா? //
8 மாதத்திற்க்குப் பிறகு பிளட்டில் பயனிக்கவே அனுமதியில்லை.
லியோ சுரேஷ்
துபாய்

dondu(#11168674346665545885) said...

"அல்-சலாமா மருத்துவமனை துபாயில் இல்லை, சவுதியில்தான் உள்ளது. எங்களுக்கு புரிஞ்சது உங்களுக்கு புரிவது கொஞ்சம் கஷ்டம்தான். ;-)"

அப்படியா, சரி. ஆனால் மேலே கூறியது அங்கேயே வசிக்கும் உங்களைப் போன்றவர்களுக்குத்தான் தெரியும். எங்களுக்கு தெரிந்திருக்க முடியாதுதானே. ஒத்துக் கொள்கிறேன்.

ஆக, அல்-சலாமா மருத்துவமனை துபாயில் இல்லை, சவுதியில்தான் உள்ளது என்பதையும் உங்கள் பதிவில் அதை முதலிலேயே ஏன் எழுதியிருக்கக் கூடாது?

நீங்கள், ஒரு செய்தியை வெளியிடும் போது அது முழுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இந்தப் பதிவுக்கும் பொருந்தும்தானே?

இந்தப் பதிவு உலகில் பல மூலைகளில் இருப்பவர்களும் படிப்பதற்குத்தானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Jazeela said...

//அல்-சலாமா மருத்துவமனை துபாயில் இல்லை, சவுதியில்தான் உள்ளது என்பதையும் உங்கள் பதிவில் அதை முதலிலேயே ஏன் எழுதியிருக்கக் கூடாது? //

அய்யய்ய, என்ன இது சின்னபுள்ளதனமா இருக்கு... வாழப்பழத்த உரிச்சி வாயில் கொடுத்து சாப்பிடவும் சொல்லிக் கொடுக்கனும் போல இருக்கே உங்களுக்கு ;-). இன்னும் நான் தினத்தந்தி ரேஞ்சுக்கு செய்தி எழுதி பழகலப்பா.

நல்ல வேள நிலவு நண்பரும், லியூ சுரேஷும் வந்து எழுதுனாங்க இல்லாட்டி போனா அல்-சலாமா துபாய்லதான் இருக்குன்னு ஒரே போடா போட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல. அத விட முக்கியம் துபாயில மனிதாபிமானமற்ற செயலெல்லாம் நடக்காதுங்க.

கதிர் said...

உள்ளூர் செய்திகளையே கோக்கு மாக்காத்தான் போடறாங்க!

சதாமுக்கு தூக்கு என்ற செய்தியில் ஜெயலலிதா இருக்கும் புகைப்படம்.

இதுமாதிரி தினமும் ஒரு செய்தி பாக்கலாம். காமெடியா இருக்கும் :)

படம் மாறி வருவதும், செய்தியே மாறி வருவதும் அன்றாட பழக்கமாகிப்போன
தினமலரை படிக்கலியா நீங்க!

dondu(#11168674346665545885) said...

"அய்யய்ய, என்ன இது சின்னபுள்ளதனமா இருக்கு... வாழப்பழத்த உரிச்சி வாயில் கொடுத்து சாப்பிடவும் சொல்லிக் கொடுக்கனும் போல இருக்கே உங்களுக்கு ;-)."

நிச்சயமாக அப்படித்தான். (சிரிப்பான் எதுவும் இல்லை).

சிரிப்பான் இல்லைதான் ஜெசீலா அவர்களே. நான் சீரியசாகத்தான் கூறுகிறேன். எழுதும் உங்களுக்கோ அல்லது மற்றும் சில நண்பர்களுக்கோ தெரியும் என்பதாலேயே எல்லோருக்கும் அது தெரிய வேண்டுமென்பதில்லை.

Each report shall stand on its own, and one should never assume things.

இது பற்றி நான் போட்ட ஒரு பதிவில் இவ்வாறு எழுதியுள்ளேன்.

"சமீபத்தில் 1978-ல் தி. நகர் ராஜகுமாரி தியேட்டரில் (இப்போது அது இடிக்கப்பட்டு விட்டது) ஒரு படம் பார்க்க எண்ணினோம். பேப்பரில் வெறுமனே தினசரி 3 காட்சிகள் என்று போட்டிருந்தார்கள். மாட்டினி ஷோ எத்தனை மணிக்கு என்ற விவரமே இல்லை. சரி தியேட்டரில் போட்டிருப்பார்களே பார்த்துக் கொள்ளலாம் சென்றால் அங்கும் அந்தத் தகவல் இல்லை. மேனேஜர் அறைக்கு சென்று என்ன விஷயம் என்று கேட்டால் "எங்கள் தியேட்டரில் மேட்டினி காட்சி 2.45 மணிக்கு என்பது எல்லோருக்கும் தெரியுமே" என்ற பொறுப்பற்ற பதில் வந்தது. ஆனால் அதே தியேட்டரில் சில நாட்கள் கழித்து இன்னொரு படத்துக்காக மேட்டினி ஷோவுக்கு 2.30 மணிக்கு சென்றால் படம் 2.15-க்கே ஆரம்பித்திருந்திருக்கிறார்கள். இது என்னப்பா புதுக்கதை என்று பார்த்தால் சம்பந்தப்பட்ட படம் (மாமன் மகள்) பெரிய படமாதலால் 2.15-க்கே ஆரம்பித்து விட்டார்களாம். ஏன் அதற்கான அறிவிப்பு இல்லை என்று பார்த்தால் அவ்வாறு அவர்கள் செய்வது எல்லோருக்குமே தெரியுமாம். எங்கு போய் அடித்துக் கொள்வது?

அண்ணா சாலையில் சிம்ஸன் எதிரில் பல பஸ் ஸ்டாப்புகள் உண்டு. செல்லும் டெர்மினஸ்களை பொருத்து பஸ்கள் வேவேறு இடங்களில் நிற்கும். ஆனால் எந்த ஸ்டாப்பில் எந்த பஸ் நிற்கும் என்பதை மட்டும் போடவேயில்லை. ஒரு பஸ் கண்டக்டரிடம் கேட்டால் அவர் தனது பஸ் எந்த ஸ்டாப்பில் நிற்கும் என்பது எல்லோருக்குமே தெரியும் என சத்தியம் செய்கிறார்.

"சிங்கார வேலன்" படத்தில் கமல் ஆட்டோ டிரைவரிடம் கேட்பார், "என்னப்பா மனோ வீடு தெரியாதுங்கறையே, அது குழந்தைக்குக் கூடத் தெரியும் என்று மனோ சொல்லியிருக்கானே" என்று. ஆட்டோ டிரைவர் (கமல் கொண்டு வந்த கருவாட்டுக் கூடையின் வாசத்தால் பொங்கி வரும் வாந்தியை அடக்கிக் கொண்டு) கூறுவார், "நான் என்ன குழந்தையா" என்று."

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"நல்ல வேள நிலவு நண்பரும், லியூ சுரேஷும் வந்து எழுதுனாங்க இல்லாட்டி போனா அல்-சலாமா துபாய்லதான் இருக்குன்னு ஒரே போடா போட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல."

தெரியாத ஒரு விஷயத்தில் டோண்டு ராகவன் அவ்வாறு போடெல்லாம் போட மாட்டான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அட போங்கப்பா.....

தமிழ் நாட்டுலெ பத்திரிகை நடத்துவதற்க்கு அந்துமணி ரேஞ்சுக்கு எழுத தெரியணும். காப்பியடிக்க தெரியணும். பாஸ்போர்ட்டே இல்லாமெ 'அங்கெ போகதே இங்கெ போகதேண்ணு டோண்டு கணக்கா கப்சாவிட தெரியணும்.
போததா...?

Jazeela said...

//எழுதும் உங்களுக்கோ அல்லது மற்றும் சில நண்பர்களுக்கோ தெரியும் என்பதாலேயே எல்லோருக்கும் அது தெரிய வேண்டுமென்பதில்லை. //

அப்படி இல்லீங்க. அந்த செய்தியை மறுபடியும் படியுங்க.

1. ரூபாய் மதிப்பீட்டை ரியாலில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ரியால் சவுதி அரேபியாவில் உபயோகிப்பது. துபாயில் நாங்கள் உபயோகிப்பது திர்ஹம்ஸ்.
செய்தியில் //ரூ.65,340 ரியால்// என்று குறிப்பிட்டுள்ளார்கள். ரூ.65,340-ஆ அல்லது ரியால் 65,340-ஆ?
2. நிலவு நண்பன் மற்றும் லியோ சுரேஷ் குறிப்பிட்டது போல் இரண்டும் வெவ்வேறு நாடுகள், நாட்டில் நுழைய தனி விசா தேவை. ரியாத்தில் இருக்கும் பெண்மணியை, ரியாத்தில் எந்த வசதியும் இல்லாததாலா துபாயுக்கு அழைத்து வந்தார்கள்? எட்டிப் பார்க்கும் தூரத்தில் இல்லீங்க துபாயும் சவுதியும் அதை முதலில் புரிந்துக் கொள்ளுங்கள்.
3. இதில் வேறு கடைசி வரியில் துபாய் சட்டபடி ஆஸ்பத்திரியில் கட்டண பாக்கிக்காக குழந்தைகளை பிடித்து வைக்க முடியாது என்று ஜெத்தாவை சேர்ந்தவர் சொல்கிறாராம்?

பூகோளம் தெரிந்திருந்தால்தான் டோண்டு அந்த முரண்பாடுகள் சிரிக்க வைக்கும். அந்த நாட்டில் இருந்தால்தான் அதைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கும் உங்க பதிவுக்கும் சம்பந்தமேயில்லை. உலகெங்கும் படிக்கும் தினத்தந்தியுடன் உள்ளூர் திரையரங்கையும், பேருந்து நிறுத்தத்தையும் சேர்த்து பார்க்கிறீங்களே, ஹய்யோ ஹய்யோ இததான் சின்னபுள்ளதனம்னு சொன்னேன். அது தப்பே இல்லன்னு மறுபடியும் நிரூபிச்சிட்டீங்க.

பூகோளமும் தெரியாமல், எந்த நாட்டில் எந்த கரன்சி என்ற பொது அறிவும் இல்லாதவர்கள் இந்த மாதிரி பத்திரிக்கைகள் படிக்கும் போது உள்ள அறிவும் போய்விடுகிறது என்பதுதான் வருத்தமே!

Jazeela said...

//படம் மாறி வருவதும், செய்தியே மாறி வருவதும் அன்றாட பழக்கமாகிப்போன
தினமலரை படிக்கலியா நீங்க!//

கதிர், அதயெல்லாம் சுட்டிக்காட்டினாலாவது திருந்துவாங்கன்னு ஒரு நப்பாசத்தான்.

லொடுக்கு said...

//படம் மாறி வருவதும், செய்தியே மாறி வருவதும் அன்றாட பழக்கமாகிப்போன
தினமலரை படிக்கலியா நீங்க!//

தம்பி, அப்போ நீங்க அந்த குரூப்பா? :)

லொடுக்கு said...

//பூகோளமும் தெரியாமல், எந்த நாட்டில் எந்த கரன்சி என்ற பொது அறிவும் இல்லாதவர்கள் இந்த மாதிரி பத்திரிக்கைகள் படிக்கும் போது உள்ள அறிவும் போய்விடுகிறது என்பதுதான் வருத்தமே!//

நல்ல வேளை நான் இந்த கருமத்தையெல்லாம் வாசிப்பதே இல்லை.

லொடுக்கு said...

//ஜெஸிலா said...
அடடா, லொடுக்குன்னு இப்படி சொன்னா எப்படி? அதிகம் விற்பனையாகும் நாளிதழில் செய்திகள் சரியோ இல்லையோ சின்ன சின்ன விஷயங்களிலாவது கவனம் வேண்டாமா?
//

நம்மால செய்ய முடிஞ்சது ஒன்னே ஒன்னுதான். துஷ்டனை கண்டால் தூர விலகு. நான் விலகி ரொம்ப நாளாச்சு.

Anonymous said...

இங்கு ஒரு மச்சான் மாட்டிக்கொண்டு முழிப்பது போல் தெரிகிறதே!!

கதிர் said...

//தம்பி, அப்போ நீங்க அந்த குரூப்பா? :) //

இல்லிங்க லொடுக்கு!
நான் "ஓ" நெகட்டிவ் குரூப்பு! :))

யாருக்காச்சும் வேணும்னா சொல்லியனுப்புங்க!

கதிர் said...

இங்கு கயமை செய்து கொண்டிருக்கும் லொடுக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.

Jazeela said...

//நல்ல வேளை நான் இந்த கருமத்தையெல்லாம் வாசிப்பதே இல்லை.// //நம்மால செய்ய முடிஞ்சது ஒன்னே ஒன்னுதான். துஷ்டனை கண்டால் தூர விலகு. நான் விலகி ரொம்ப நாளாச்சு.//

அப்ப தப்பிச்சிட்டீங்கன்னு சொல்லுங்க லொடுக்கு.

//இங்கு கயமை செய்து கொண்டிருக்கும் லொடுக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.//

பாவம் கதிர் லொடுக்கை விட்டுடுங்க. அதவிட பெரிய கயமை செய்றவங்கலாம் இங்க இருக்காங்க ;-) ஒருவேளை லொடுக்குன்னு பேரை மாற்றிப் போட்டுவிட்டீர்களோன்னு சந்தேகம்.

Anonymous said...

//இல்லிங்க லொடுக்கு!
நான் "ஓ" நெகட்டிவ் குரூப்பு! :))

யாருக்காச்சும் வேணும்னா சொல்லியனுப்புங்க!//

அதை அந்த மாட்டிக்கிட்டு முழிக்கும் அந்த மச்சானுக்கு கொடுக்கவும்

லொடுக்கு said...

//தம்பி சொன்னது...
இங்கு கயமை செய்து கொண்டிருக்கும் லொடுக்கை வன்மையாக கண்டிக்கிறேன். //

சொல் கயமை விட, பின்னூட்ட கயமை பெரியதா?

பதிவு நம்ம துபையை பற்றியதால், நூறடிக்க வழி செய்வோம். அதுக்கு என்னால முடிஞ்ச மொய் இந்த கயமைகள்.

மரைக்காயர் said...

கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டவேயில்லைன்னு இங்கெ ஒருத்தர் சாதிச்சிக்கிட்டிருக்குறதை பார்த்தா சிரிப்புதான் வருது :-)))))

(நிறைய சிரிப்பான் போட்டிருக்கேன்!)

லொடுக்கு said...

ஆஹா! பதிவு பத்திக்கிச்சு போலிருக்கே... அப்போ இனி பின்னூட்ட மஜா தான்...

Jazeela said...

//அதை அந்த மாட்டிக்கிட்டு முழிக்கும் அந்த மச்சானுக்கு கொடுக்கவும்//

மாட்டிக்கிட்டு முழிக்கிறவர் உங்க மச்சானா? மச்சானா இல்லாட்டி அவருக்கு அந்த இரத்தம்தான் உங்களுக்கு எப்படி தெரியும் அநியாய அனானி?

//ஆஹா! பதிவு பத்திக்கிச்சு போலிருக்கே... அப்போ இனி பின்னூட்ட மஜா தான்...//

பத்திக்கிச்சா? அப்ப தீயணைப்பு படைய அனுப்ப சொல்லலாமா? யாருக்கோ வயிறு வேற எரியுதாம் ;-)

லொடுக்கு said...

//பத்திக்கிச்சா? அப்ப தீயணைப்பு படைய அனுப்ப சொல்லலாமா? யாருக்கோ வயிறு வேற எரியுதாம் ;-)
//

பற்றும் வயிறுகளை நூ(நா-அல்ல)றடிச்சு அனைப்போம்.

Anonymous said...

தமிழ் நாட்டின் ஒரு முக்கியமான(?!) அதிகம் விற்பனையாகும் பத்திரிகை(?!) என்று சொல்லப்படும்(?!) ஒரு பத்திரிகையில் இதுப்போன்ற தவறுகள் வருவது மன்னிக்க முடியாத குற்றமாகும். ஒரு சாதாரண செய்தியைக் கூட இப்படி தப்பும் தவறுமாக எழுதுவதை விட அந்த செய்தியை போடாமல் இருப்பதே நல்லது. எத்தனையோ தமிழ் மக்கள் தினத்தந்தியை படிக்கிறார்கள் என்ற கோணத்தில் பார்க்கும் போது அவர்கள் நிச்சயமாக குழம்புவார்கள் என்பதைவிட யாரிடமாவது பேசிக்கொண்டிருக்கும்போது இந்த செய்தியைப்பற்றிய விவாதம் வந்து அந்த நபருக்கு துபாய் வேறு சவுதி வேறு என்ற விசயம் தெரிந்திருந்தால் நிச்சயம் அடிதடி வரை இந்த விவாதம் போகும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை. நம்மூர் டீக்கடைகளில் இதை நாம் சகஜமாக பார்த்திருக்கிறோம்.

ஆக ஜெஸிலா சுட்டிக்காட்டிய தவறு வெளிப்பார்வைக்கு சாதரணமாக நமக்கு தெரிந்தாலும் இது ஒரு முக்கியமான விடயம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பின்னூட்டம் போடவேண்டும், அல்லது விவாதிக்க வேண்டும் என்பதை விட்டு இது போன்ற தவறுகளை சுட்டிக்காட்டுவது மிகவும் முக்கியம். ஏனென்றால் இப்போதெல்லாம் தின, வாரப்பத்திரிகைகள் வலைப்பதிவுகளிலிருந்து சுடுவது அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதனால் இந்த பதிவும் சுடுபவர்களின் கண்ணில் படும் வாய்ப்பு இருக்கிறது.

இதன் மூலம் இனிமேலாவது கொஞ்சம் உஷாராக இருந்தால் நல்லது தானே....

ஏ.எம்.ரஹ்மான் said...

நீங்க சரியா புரியாம என் தங்கை கிட்ட கேள்வி கேட்காதிங்கப்பா, நீங்க எப்படி கேள்வி கேட்டாலும் என் தங்கை கிட்ட இருந்து சரியான பதில் கிடைக்கும்பா.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ஆமா, துபாய் வர யோசனையே இல்லாம நெல்லைலயே தங்கிட்டா மாதிரி தெரியுது? //

வரலாம்
வராமலும் போகலாம்
வந்திட்டு போகலாம்

( சிரிப்பான்..சிரிப்பான்...சிரிப்பான்..)

Anonymous said...

தினத்தந்தி செய்தி தவறுதான், இதைவிட இண்டு பேப்பரிலும் செய்தி வரும் பாருங்க படித்து பார்த்தால் யாருக்கும் உபயோகம் இருக்காது.

ஒருமுறை ரஷ்யாவில் இந்திய மாணவர் தாக்கப்பட்டாருனு முதல் பக்க செய்தி, யார் எந்த ஊர் எந்த கல்லூரி ம்கூம் ஒண்ணும் கிடையாது.
இதில் அடுத்த நாள் பேப்பரில் வாசகர் ஒருவர் இந்த குறையை சொல்ல அதையும் வெளியிட்டு இருந்தார்கள்

Jazeela said...

//இது போன்ற தவறுகளை சுட்டிக்காட்டுவது மிகவும் முக்கியம். //

நன்றி மஞ்சூர் ராசா.

//என் தங்கை கிட்ட இருந்து சரியான பதில் கிடைக்கும்பா// உங்க தங்கையாச்சே இருக்காத பின்ன ;-)

Anonymous said...

If somebody comments on something which hedon't know corret him. But making joke out of it is crual sister....

Anonymous said...

\\சவுதி அரேபியாவில் துபாய்?\\

நானும் ஏதோ "பாம் ஜுமைரா", "பாம் ஜபல் அலி", "தி வேர்ல்ட்" என்று உள்ளே வந்தால் இங்கு மேட்டரே வேறயா இருக்கு.

ஈராக்கின் அதிபர் அமிர் கர்சாய் வரிசையில் இதுவும் ஒன்னு.

Jazeela said...

//If somebody comments on something which hedon't know corret him. But making joke out of it is crual sister.... //

Dear Anonymous,

Please read the replies properly, so that you will understand that I have tried correcting him, but if he doesn't want to understand, which is not my fault dear. I am never cruel for anybody.

Anonymous said...

40

Anonymous said...

இத்தனை அழகான பதிவிற்கு இவ்வளவு குறைவான பின்னூட்டங்களா?

ramachandranusha(உஷா) said...

ஜெசிலா, இங்குள்ள கல்ப் நியூஸ் பத்திரிக்கையில் தவறாய் ஏதாவது செய்தி வந்தால் அதை சுட்டி காட்டுமாறு செய்திதாளிலேயே
கட்டம் கட்டிப் போடுகிறார்கள். சிலசமயம் அப்படி தவறாய் செய்தி வந்தால் மறுநாள் ஆசிரியருக்கு கடிதம் பகுதியில் வாசகர்கள் சுட்டிக் காட்டியிருப்பார்கள். சிலசமயங்களில் கட்டம் கட்டி இந்த தேதியில் இந்த செய்தி தவறாய் வெளியாகியுள்ளது என்று மன்னிப்புக் கேட்டிருப்பார்கள்.

முதுவை ஹிதாயத் said...

ÕûT: ®`Uô] EQÜ Nôl©hP 3 Ck§V ÏZkûRLs T#

EeL[Õ ©GvGuGp ùNpúT£«p Sôû[V TgNôeL ϱl×Lû[ Cuú\ ùT\ §]m JÚ ìTôn UhÓúU!



ÕûT, Ad. 23: ÕûT«p ®`Uô] EQûY Nôl©hP Ck§VôûYf úNokR 3 ÏZkûRLs C\kR]o. CYoL°u ùTtú\ôo UÚjÕYUû]«p £¡fûNl ùTtß YÚ¡u\]o.

ØLUÕ Lô#j CdTôp GuTYo Nî§ ªuT¦ JlTkR ¨ßY]j§p Gu˲VWôL Es[ôo. CYÚûPV Uû]® EvUô, Utßm ÏZkûRLs A]ôv (6), U¬Vôm (3), SwXô (9). CYoLs Aû]YÚm N²d¡ZûU CWÜ ReLs Åh¥p EQÜ EhùLôiPl ©\Ï £±Õ úSWj§p UVdLUûPkR]o. CûRVÓjÕ Lu×Pô ùTôÕ UÚjÕYUû]«p AàU§dLlThP]o.

ÏZkûRLs 3 úTÚm N²d¡ZûU CWúY C\kR]o. CdTôp Utßm EvUô CÚYÚdÏm ¾®W £¡fûN A°dLlThÓ YÚYRôL Lu×Pô ùTôÕUÚjÕYUû]«u ùNn§j ùRôPoTô[o ØLUÕ C©u UdùTüv ùR¬®jRôo.

ùLhÓl úTô] EQûY CYoLs EhùLôi¥ÚdLXôm G]Üm EQÜ Uô§¬Ls BnÜdÏ AàlTlThÓ Ø¥ÜdLôL Lôj§ÚlTRôL úUÛm AYo ùR¬®jRôo.


http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNB20071023104407&Title=International+News&lTitle=NoY%FARNf+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி