ஆனந்த விகடன் வரவேற்பறையல நம்ம வலைப்பூ பத்தி வந்தாலும் வந்துச்சு ஆளாளுக்கு 'யாரப் புடிச்ச? எவ்வளவு கொடுத்த? இந்த இலவச விளம்பரத்துக்கு'ன்னு ரொம்பவே கொச்சப்படுத்துறாங்கப்பா. சில வலைப்பதிவர்களை கடந்து போனாலே கரிஞ்ச வாட வருது, 'நான் வருஷக் கணக்கா எழுதுறேன் என்னுது வரலை உன்னுது எப்படி வந்துச்சு?'ன்னு வயித்தெரிச்சப்படுறாங்க. காதுல புகைக் கூட கவனிச்சேன். எங்க வீட்டுல கூட 'எப்படி ஜெஸி?'ன்னு கேட்டாங்க, 'என் கடன் பணி செய்துக்கிடப்பதே'ன்னு சொன்னேன். 'பார்த்து, யாராவது பொறாமைல அடிச்சி ரோட்டுல கிடக்கப் போற'ன்னு பயமுறுத்திட்டுப் போறாங்க. இதுல வேற நேத்து 'மெட்ரோ நியூஸ்'லயும் நம்மள பத்திப் போட்டிருக்காங்கன்னு செய்தியைப் பார்த்தேன். நம்ம இலங்கை நண்பர் ஒருவர் எழுதியிருந்தார் தகவலுக்கு நன்றி சொல்லி வந்தேன்.
அப்புறம் பின்னூட்டத்தில் வாழ்த்தியவர்களுக்கும், தனி மடலில் தனியா வாழ்த்தியவங்களுக்கும், தொலைபேசி வாழ்த்தியவர்களுக்கும் ரொம்ப நன்றிங்க. ஆனந்த விகடனில் நம்ம வலைப்பூ பத்தி வரது அவ்வளவு பெரிய விஷயமான்னு இருந்தேன், என் கவுண்டர் ஓடிய ஓட்டத்தை பார்த்துத்தான் ரொம்பப் பெரிய விஷயம்தான் போலன்னு நினைச்சுக்கிட்டேன்.
எங்க ஊருல ரமதான் இன்று ஆரம்பம் (துபாயை எப்போ உங்களுக்கு எழுதிக் கொடுத்தாங்கன்னு ஆரம்பிச்சுடாதீங்க மக்கா). எல்லா மக்களுக்கும் ரமதான் கரீம்.
33 comments:
வாவ், நேத்து நான் போன் பண்ணியதே இதற்கு வாழ்த்து சொல்ல தான் ஆனா பாருங்க விட்டு போச்சு, வாழ்த்துக்கள். "ஒரு தெய்வம் தந்த பூவே" பாடலை நீங்க விமர்சம் பண்ணியதை போட்டிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்! வாழ்த்துக்கள் மீண்டும்!
Aavi enravudan bayanthu vitten, piragu taan terinthathu vishayam, vashthukkal jazeela, ungal saevai thodarattum, ungalukkum en ramadan
vaashthukkal :-)
நான் இப்பத்தான் வர்றேன். அதனாலெ கெளண்டர் ஏற சான்ஸே இல்லே.
மிகவும் இதயபூர்வமான மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்.
பொறாமையில்லை பெருமையே....
ரமதான் கரீம்...
நேக்கும் சேம் பிளட் ஜெஸிலா :(
சூப்பர்:))) நோ புகை, நோ கருகல் ஸ்மெல் என் பக்கம் இருந்து.:))
ஏற்கனவே இது குறித்து வாழ்த்து சொல்லியதால் மீண்டும் வாழ்த்துகள்.
இனி கரிக்கும் நாட்களல்லவா! கரிஞ்ச வாடயும் கரிந்து போகும்.
ரமதான் கரீம் முபாரக்!
ரமதான் கரீம்!!!
வாழ்த்துக்கள்...
நன்றி அபி அப்பா. நேற்றே உங்களுக்கு நான் நன்றி சொல்லிவிட்டேன் நீங்கள் வாழ்த்தும் போது :-)
நன்றி ஹனீஃப். பயப்படாதீங்க கணினிய விட்டு ஆவி வெளியில் வராது. :-)
வாங்க சுந்தர், நீங்க வந்திட்டீங்கள இப்போ எண்ணிக்கை எகிறிடும். :-)
செல்வா, அப்ப உங்க குருதி நிறம் கருப்பா? :-))
குசும்பரே, எங்க இருக்கீங்க, ரொம்ப நாளா நம்ம குழுமம் பக்கம் ஆளையே காணோமே? வாங்க வந்து சேருங்க.
நன்றி சுல்தான் பாய் & லக்கி லுக்.
வாழ்த்துகள் சகோதரி
இரட்டை வாழ்த்துக்கள் ஜெஸிலா.
தில்லியில் நேற்று தான் ஆனந்தவிகடன் கையில் கிடைத்தது...
வாழ்த்துக்கள் ஜெஸிலா...
நன்றி இப்னு ஹம்துன், உஷா & முத்துலெட்சுமி.
ஜெஸிலா மேடம் உங்களுக்கு முன்னே அவந்திகாவின் வலைப்பூ பற்றிய செய்தி ஆவியில வந்துடுச்சி.
நல்ல விஷயம் தானே அனானி? நாளை உங்களுடையதும் வரும். அதில் என்ன அதிசயம்? மகிழ்ச்சி தானே?
வாழ்த்துக்கள் ஜெஸிலா.
ஆமா! எப்படி உங்க பேர் மட்டும்...... :))
அன்பு ஜசீலா, மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ரமதான் கரிம் வாழ்த்துக்களும்.:))))
வெயிலான் நீங்களுமா. நன்றிங்க.
வல்லி, ஊருக்கு போயாச்சா? எப்படி இருக்கீங்க? வாழ்த்துக்கு நன்றி.
Namma kudumbathil mudhal mudhalaga than peyaraiyum, seyalgalayum pattri idhazhkalil vandhu, perumai sertha unakku en nandriyum vaazhthukalum.
Unnai pol, unakkum melaga, un magal faatin sirandhu vilanga engal vazhthukal
என்ன ஆச்சு பெனு ரொம்ப செண்ட்டியா? எங்க புகைப்படங்கள் பெயர் வராத பத்திரிகை உண்டா என்ன? கல்ப் நியூஸிலேயே உன் புகைப்படம் வந்ததே மறந்துட்டியா? இதெல்லாம் சின்ன விஷயம் தான். வாழ்த்துக்கு நன்றிம்மா. சரி நீங்க எப்போ வலைப்பூவில் எழுதப் போறீங்க?
Vaalthukkal, valarga.
Ramadhan Kareem - Ahlan Wa Sahlan
வாழ்த்துக்கள் ஜெஸிலா.
வாழ்த்துக்கு நன்றி ஜாஃபர் & சின்னக்குட்டி.
வாழ்த்துக்கள்!!
சத்தியா
ரமதான் கரீம் - வாழ்த்துகள்
//'நான் வருஷக் கணக்கா எழுதுறேன் என்னுது வரலை உன்னுது எப்படி வந்துச்சு?'ன்னு வயித்தெரிச்சப்படுறாங்க. காதுல புகைக் கூட கவனிச்சேன்//
எனக்கும் காதுல புகையா வந்துச்சு..சரி வேற என்ன செய்ய ஒரு வாழ்த்துச் சொல்லி அந்த ஆதங்கத்தினை தீர்த்துக்க வேண்டியதுதான்னு வாழ்த்துச் சொல்ல வந்தேன்..
வாழ்த்துக்கள் ஜெஸிலா... :)
இனிய ரமலான் வாழ்த்துக்கள் - நாகூர் இஸ்மாயில்
நன்றி சத்யா, சீனா & ரசிகவ்.
நான் இன்று தான் ஆன்லைன்ல படிச்சேன்... அங்கேயும் ஒரு வாழ்த்து சொல்லியாச்சு... அப்படியே இங்கு வந்து இங்கவும் சொல்லியாச்சு..
வாழ்த்துக்கள்...
Dear jazeela..
i just came to your page after reading the aa.vi..
its gr8 you know....i read through some of your blogs..your words are sharp and crisp..
i wish you all the best in all your literary endeavours..
luv
oru "saga payani " Ancy.
சகப் பயணி ஆன்சிக்கும், சுடான் புலி சிவாக்கும் நன்றி. :-)
Hi Jaseela
Nice blogspot. Valthukkal!.
Anbudan,
Kassali (+91 94438 13228)
வாழத்துக்கள். நல்ல சுறுசுறுப்பான எழுத்துக்கள்.
Post a Comment