காதல் கடிதம்

பெயரில்லாததால்
பெரிதுப்படுத்தவில்லை
அறிவுறுத்தியிருந்ததால்
அலட்சியப்படுத்தவில்லை
கவரும் காகித அட்டையால்
கவிழ்ந்துவிடவுமில்லை
இதுவரை யாரென்று தெரியவில்லை
இருப்பினும் சந்திக்க விருப்பம்
விருப்பத்தை சொல்லவல்ல
விபரீதம் காதல் எனவே.

8 மறுமொழிகள்

சொன்னது...

அட, உங்க வலைப்பூவா? வாழ்த்துக்கள் ஜெஸிலா!

சொன்னது...

நறுக்கென்று கிறுக்குகிறீர்கள்... கிறுக்கல்கள் தொடரட்டும்

அன்புடன்
சேவியர்
www.xavi.wordpress.com

சொன்னது...

//இருப்பினும் சந்திக்க விருப்பம்
விருப்பத்தை சொல்லவல்ல
விபரீதம் காதல் எனவே.//

:))

சொன்னது...

ஜெஸிலாக்கா நீங்க ஒரு கவிதை கிடங்கு. அருமையா கவிதை எழுதறிங்க அப்புறம் ஏன் கிறுக்கல்னு தலைப்பு. இதெல்லாம் ஒரு தொகுப்பா போடலாமே.

சொன்னது...

நன்றி சேதுக்கரசி மற்றும் சேவியருக்கு.

ந.பிரகாஷை சிரிக்க வைத்ததில் மகிழ்ச்சி.

தம்பி உங்க யோசனைக்கு நன்றி. உங்களுக்கும் எனக்கும் பிடித்தது மற்றவர்களுக்கு கிறுக்கலாக இருக்கலாம். ஆகையால் தலைப்பு கிறுக்கலாகவே இருக்கட்டும் ;-)

சொன்னது...

எனக்கு வலைப்பூ பற்றி அதிகம் தெரியாது, ஆனால் உங்கள் வலைப்பூவில் justification மாற்றவேண்டுமென்று நினைக்கிறேன் ஏனெனில் நெருப்புநரி உலாவியில் சரியாகத் தெரிவதில்லை. ஜஸ்டிஃபிகேஷன் மாற்றினால் தெரியும். இந்தக் குறிப்பை மற்றவர்களின் வலைப்பூக்களில் வாசித்திருக்கிறேன்.

சொன்னது...

இன்னொரு தகவல்: மறுமொழிகளை மட்டுறுத்தலில் இடுவது நலம் என்று நினைக்கிறேன். நீங்கள் பார்த்து அப்ரூவ் செய்யலாம், இல்லாவிட்டால் குப்பைகள் வர வாய்ப்புண்டு.

சொன்னது...

அட !!

Blog Widget by LinkWithin