அன்பர்கள் தினம்

ல்லா வலைப் பதிவர்களுக்கும் பூங்கொத்தும், இனிப்பும் அனுப்புவதாகத் திட்டம்*. தங்களுடைய புகைப்படத்தையும் முகவரியையும் தனிமடலில் அனுப்பினால் குலுக்கல் முறையில் இல்லை இல்லை சிறந்த முகங்களை ஒரு சுமாரான முகம் தேர்வு செய்து 10 அதிர்ஷ்டசாலிகளுக்கு இந்தப் பரிசு அனுப்பிவைக்கப்படும்.

* சொந்த படமாக இருக்க வேண்டும்.
* உங்க படத்தை நீங்களே எடுத்ததாக இருக்க வேண்டும்.
* படத்தின் அளவு 4 x 6 ஆக இருக்க வேண்டும்.
* படத்தின் கோப்பு 256KB க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* அனுப்ப வேண்டிய கடைசி நாள் 'காதலர்கள் தினம்' எப்போது என்று கண்டுபிடித்து அந்த நாளில் சரியாக கிடைக்கும் படி செய்ய வேண்டும்.
சரி விஷயத்திற்கு வருவோம்...

யாரோ 'வாலண்டைன்' என்பவருக்காக பிப்ரவரி 14-ஐ நாம் ஏன் கொண்டாட வேண்டும்? நாள் பார்த்தா காதலிக்க வேண்டும்?

வணிக ரீதியாக, வியாபார ரீதியாகப் பெருகிவிட்ட புது புது தினங்களை மேல்நாட்டவர்கள் கொண்டாடுவார்கள். ஏனெனில் காதலிக்கவும் ஒரு தினம் ஒதுக்கித்தான் செய்வார்கள். அன்னையர் தினத்தில்தான் 'அன்னை' இருப்பதே இவர்களுக்கு நினைவுக்கு வரும். ஆனால் உறுதியான அன்புள்ளங்கள் கொண்ட 'இந்தியர்கள்' நமக்கு இது சரிப்படுமா?

உங்களவரை/வளை சந்தித்த அல்லது உங்கள் காதல் கைக்கூடிய அல்லது உங்கள் காதலைத் தெரிவித்து இருவரும் ஒருசேர மலர்ந்த தினத்தை காதலர்கள் தினமாகக் கொண்டாடலாமே?

வியாபார நோக்கமில்லாமல் இலவசமான இந்த வலைப்பூவில் இலவசமாக ஒரு பதிவு. ஹே! இலவசமாக சில படங்களும்.

அப்புறம் இன்னொரு விஷயம் மேலே உள்ள பரிசுப் போட்டி சும்மா 'அல்வா'ங்கோ!
2 மறுமொழிகள்

சொன்னது...

காதலர்தினம்னு தலைப்பு வச்சிறுந்தீங்கன்னா கமெண்ட்ஸ் வந்திருக்கும்...

இருந்தாலும் இனிய அன்பர்கள் தின வாழ்த்துக்கள்

சொன்னது...

100% உண்மைங்கோ!

பின்னூட்டம் வரலைன்னாலும் பரவாயில்லை ஒரு பயக இந்த பக்கமே வரலைன்னா பார்த்துக்குடுக. ம்ம் அனுபவஸ்தர் சொல்ற அறிவுரையை யாரு கேட்கிறா..

Blog Widget by LinkWithin