வீடு தேடினோம்
பாலைவனத்தில்
விரைந்து நடந்தோம்
பாதசாலையில்
வின்னை முட்டும்
கட்டிடங்கள் இடையில்
வீதி வீதியாய்
வரிசை வீடுகள்
விசால வராண்டா
வேண்டாம்டா எனக்கு
நிம்மதி குடியிருக்கும்
வீட்டை காட்டுடா
வில்லை வில்லையாய்
குட்டி வீடுகள்
கொட்டி கொடுத்தாலும்
கிடைக்காத இல்லங்கள்
வெளிச்சம் நிறைந்த
திறந்த வெளி
வில்லாவானாலும் பாலையிலே
பூத்த சோலை
வயல்காடு போல்
புற்கள் அளவாய்
வேப்பம் ஒன்று முருங்கை இரண்டாய்
வளர்ந்து நிற்க
வெட்கத்தில் வெக்கிய
மல்லி கொடி கவிழ்ந்து படற
விக்கி விக்கி என்று பூனை பெயரை
விளிக்கும் கிளி
விடிந்ததும் சூரியனை கண்டு
கூவ சேவல்
விட்டு விடாமல் பட்டென்று
குடியேறினோம் வீட்டின் உள்ளே.
3 comments:
nalla feel....
palivana sogagalli nirya
ealuthungal...
eanuku tamilil ealuthum
soozal amivilli mannithuvidungal..
innum ethir parkirean...
anbudan
veeramani
நன்றி வீரமணி. தமிழில் எழுதும் சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
நன்றி அய்யனார். ரொம்ப நொந்த மாதிரி தெரியுது, ஊருக்கு புதுசா?
Post a Comment