சுதந்திரப் பறவை

என்ன பார்க்கிறாய்
என்னை பார்க்கும் போது
என்னில் என்ன பார்க்கிறாய்?

நான் சுதந்திர பறவையா?
கட்டுக்கோப்புகுள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணடியாக என் மேனி தெரியாததாலோ?
கறுப்பு முடிகள் மறைந்திருப்பதாலோ?

நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?

எனகென்று சொந்த குரல்
எனகென்று சுயசிந்தனை இல்லை என்கின்றாய்
வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்

மூடி மறைப்பது - கூண்டு கிளியா?
முடியை மறைப்பது - அநாகரீகமா?
காட்ட மறுப்பது - திணிப்பா?

சிறு வட்டத்தில் அடைப்பட்டவளாக
பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்
‘சுதந்திரத்தின்’ பொருள் அறியாமலேயே

கவலை, துயரம்
கோபமும், வேதனனயும் எனக்கு
கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு

கண்ணீரின் காரணம்
நீ என்னை ஒதுக்குவதாலும்
உன் கேலிக் கூத்தாலும் அல்ல

நீ உனையே ஒதுக்குவதால்
உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்
இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்

கண்களுக்கு நான் அழகாக
காட்சிப் பொருளாக
வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்

எனக்கு தந்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்
அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்
ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்

பின்னால் பார்க்க அண்டாங்காக்கா
அடையாளம் கண்டால்
நான் அறிவின் ஊற்று

அமைதியில் என் அழகும்
பொறுமையில் என் மென்மையும்
ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்

மன வலிமை
சரியான முடிவெடுக்கும் திறன்
சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு

வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும் போதும்
உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்
குட்டை பாவடையும் கட்டி இறுக்கும் மேலாடையும்
கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்

கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்
கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை

உண்மையில் நானே சுதந்திரப் பறவை
விண்ணில் பறக்கும் என் சிறகே ‘ஹிஜாப்’
அபயத்தை அளிக்கும் கவசமே ‘அபாயா’
அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!!

9 மறுமொழிகள்

சொன்னது...

assalaamu alaikum dear sister in islam i was read your poetry masha allah its very nice also its very useful for our islamic sisters
alhamdhu lillah
thank you for sending message to our mail id

அபூநஜ்லா சொன்னது...

இஸ்லாமியப்பெண்கள் விரும்பித்தான் 'பர்தா' அணிகிறார்களா? என்று ஆசிப் அண்ணாச்சியின் ஒரு பதிவில் யாரோ 'தஸ்லிமாத்தனமாக' கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு இந்தப்பதிவு நல்ல பதில். நன்றி.

சொன்னது...

kavithai!!!

சொன்னது...

மனவலிமை, சிந்தனைத்திறன், செயல்படுத்துவதில் உறுதி, பொறுமையில், ஒழுக்கத்தின் உயர்வில், அமைதியில் பெண்மையின் மென்மை. ஆஹா அதுவே பெண்மையின் உண்மை அழகு. சுதந்திரம் அறிந்த பறவை.

சொன்னது...

அருமையான கவிதை சகோதரி! இந்த கவிதை என்மனம் கவர்ந்த காரணத்தை என் தளத்தில் சொல்லி, உங்கள் கவிதையை பதிந்தும் இருக்கிறேன். மேன்மேலும் இதுபோன்ற கவிதைகளை தாங்கள் சமூகத்திற்கு கொடுத்து கொண்டே இருக்க வல்ல இறைவனிடம் பிரார்த்தித்தவனாக....

www.islamkural.com

சொன்னது...

மத சம்மந்தமான விடயத்திற்குள் நான் மூக்கை நுழைக்கவிரும்பவில்லை. அதற்கு அவ்வளவு அனுபவமில்லாத அப்பாவி. :-)) உங்களுடைய கவிதையில் பெண்மை வாழ்கிறது. நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

சொன்னது...

nalla irukku kavithai!

சொன்னது...

ஹிஜாப்பினால் ஒரு பெண்ணுக்கு கிடைக்கும் பாதுகாப்பு இதுதான் ""கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்
கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை""மிகஅருமையான வரிகள் சகோதரி.

சொன்னது...

சகோதரிக்கு பல கோடி நன்றிகள்... அல்லாஹ் தங்களுக்கு மேன் மேலும் சீரான ஞானத்தையும் ஆற்றலையும் தேகாரோக்கியத்தையும் நீண்ட ஆயுலையும் சமூகத்திற்காக சேவை செய்யும் மனப்பாங்கையும் தருவானாக!
“பெண் என்பாள் ஒரு டாக்ஸி வண்டி போன்றவள், அதை யாரும் பயன்படுத்தலாம். அல்லது தனி உரிமையாளரின் கார் இதை அவர் மட்டும்தான் பாவிப்பார். அவள் ஒரு விலையுயர்ந்த மாணிக்கம் அதை யாரும் கண்ட கண்ட இடத்திலெல்லாம் போடமாட்டார்கள், மாறாக அதை வைக்க வேண்டிய இடத்தில்தான் வைப்பார்களட். இதில் தேர்வு செய்ய வேண்டியது நீங்கள்தான்

Blog Widget by LinkWithin