கவிப் பகைவர்களுக்காக அடக்கி வைத்திருந்தாலும் எனக்குள் இருக்கும் ஆர்வம் அவ்வப்போது துளிர்விடத்தான் செய்கிறது. வெளிவரும் அத்தனையும் குறும்பாக்கள், துளிப்பாக்கள், கவிதைகள் என்று பெயரிட முடியாததால் கிறுக்கலாக...
மர நிழலில் ஒதுங்கினேன்
மர அசைவில்
நேற்று சேகரித்ததிலிருந்து
எனக்கு மட்டும் மழை
***
வானத்தின் ஜன்னலில்
எட்டிப்பார்க்கும் சூரியன்
நட்சத்திரம்
***
செத்தும்
முகத்தில் எச்சில்
சிலை
***
எதிர்பாராமல்
எதிர்கொண்டு முடிந்தது
கூச்சம்
***
ஒட்டக நிழலில்
தொழுகை
பாலைவனம்
***
வெளிநாட்டு வேலை
தள்ளிப்போடப்பட்டது
தாம்பத்யம்
***
நாட்டின் மானம்
பந்தயத்தில் அடமானம்
கிரிக்கெட்
***
நாய்களுடன் போட்டி
எச்சில் இலைக்கு
மனிதன்
***
என்னையே தொடர்ந்தாலும்
நெருங்கி வர முடியாத
நிழல்
***
வீசிவிட்டு
அழுதது குழந்தை
சாமி ஊர்வலத்தில்
திடீர் ஜாதி கலவரம்
பலர் காயம்
சிலர் மரணம்
வீசப்பட்ட
அப்பாவின் ஒற்றைச்செருப்பு
ஒன்றுமறியாமல் வீதியில்.
***
31 comments:
//வீசப்பட்ட
அப்பாவின் ஒற்றைச்செருப்பு
ஒன்றுமறியாமல் வீதியில்.
//
நச்.. வலியின் குரல்:(
அபி அப்பா அதிசயப் பிறவி போல நீங்க. வெள்ளிக்கிழமை அதனால் முதல் பின்னூட்டத்த 'மிஸ்' பண்ணிடுவீங்கன்னு நினச்சேன் ஆஜராயிட்டீங்களே. நன்றி.
இல்லை சகோதரி, நம் வீடு, நம் சகோதர சகோதரன், நம் அப்பா,அம்மா, நம் தெரு, நம் ஊர், நம் நாடு இதிலே ஊறிப்போயிட்டேன். துபாய் சகோதரி ஸ்டார் பதிவர் என்கிற போது நான் தான் ஊக்கம் கொடுக்க வேண்டும் என்கிற ஆவல் தான் காரணம்.
அது தவிர நல்ல விஷயங்கள் சில சமயம் கவணிக்கப்படாமலே போய்விடும். அது போல இதும் ஆகிவிடக்கூடாது என்றே ஆற்றுப்படுத்தவும் செய்கிறேன்!
வெள்ளிக்கிழமை என்பதால் தூங்கிக் கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தேன் ;-).
உங்கள் பரந்த மனப்பான்மைக்கு நன்றி அபி அப்பா.
/வீசிவிட்டு
அழுதது குழந்தை
சாமி ஊர்வலத்தில்
திடீர் ஜாதி கலவரம்
பலர் காயம்
சிலர் மரணம்
வீசப்பட்ட
அப்பாவின் ஒற்றைச்செருப்பு
ஒன்றுமறியாமல் வீதியில்.//
ஜெஸிலா,
அட்டகாசமான கவிதை...
வீசப்பட்ட
அப்பாவின் ஒற்றைச்செருப்பு
ஒன்றுமறியாமல் வீதியில்.
ரீப்பீட் அபி அப்பா
முரண்களின் கட்டமைப்பில் உயிர் தேவை
:)
எல்லாமே நல்லா இருக்கு....
Arumaiyaagavay kirukki irukeenga, superb ;-)
இராம், அய்யனார், மங்கை, ஹனீபா எல்லோருக்கும் மிக்க நன்றி.
நன்றாக இருக்கிறது ..
இப்படிக்கு
மற்றுமொரு கிறுக்கி.
நல்லா இருக்குங்க, ஜெஸிலா!
நல்லா இருக்குங்க.
உங்க ஹைக்கூ கிறுக்கல்கள் நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்
ஜெஸிலா,
அருமையான கவிதைகள் !
//
வானத்தின் ஜன்னலில்
எட்டிப்பார்க்கும் சூரியன்
நட்சத்திரம்
//
நட்சத்திர ஜன்னலில்
வானம் எட்டிப் பாக்குது
மு.மேத்தாவின் திரைப்பாடல்.
ஒத்த கற்பனைகள் இருவருக்குத் தோன்றுவதில் தவறில்லை.
பல வரிகளை கவிதை என்னும் கட்டுக்குள் கொணர முயற்சித்தேன், முடியவில்லை.
கவிதை எழுதவேண்டும் என முடிவு செய்துவிட்டால் - நிறையப் படியுங்கள்.
இப்படிக்கு
கவிக்கு அவ்வளவு பகைவனில்லை
நன்றி முத்துலெட்சுமி, ரொம்ப தன்னடக்கமா கிறுக்கின்னு சொல்லியிருக்கீங்க ;-)
நன்றி, தென்றல், கதிர், யாழினி அத்தன், கோவி. கண்ணன். யாழினி, இது ஹைக்கூ வகைனு சொன்னா யாராவது அடிக்க வரப்போறாங்க ;-)
//
வானத்தின் ஜன்னலில்
எட்டிப்பார்க்கும் சூரியன்
நட்சத்திரம்
// நட்சத்திர ஜன்னலில்
வானம் எட்டிப் பாக்குது
மு.மேத்தாவின் திரைப்பாடல்.
ஒத்த கற்பனைகள் இருவருக்குத் தோன்றுவதில் தவறில்லை.//
அது வேறு பொருள் இது வேறு பொருள். வானத்து ஜன்னலில் எட்டி பார்க்கும் சூரியன் தான் நமக்கு நட்சத்திரமாக தெரிகிறது என்பது என் கற்பனை. மேத்தா எழுதியது நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பாக்குது என்று அது வேறு விதமில்லையா?
//பல வரிகளை கவிதை என்னும் கட்டுக்குள் கொணர முயற்சித்தேன், முடியவில்லை.// ;-) கிறுக்கல் என்பதுதான் சரி, நீங்க ஏன் வீணாக முயற்சித்தீர்கள் ?
//கவிதை எழுதவேண்டும் என முடிவு செய்துவிட்டால் - நிறையப் படியுங்கள்.// ம்ம் ஒரு நாள் 24 மணி நேரம் என்பதை நீட்டித்து 48 மணி என்று ஆக்கினால் அது முடியும் என்று நினைக்கிறேன். ;-) நேரமின்மைங்க, மற்றப்படி நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகமும் கையுமாகத்தான். நன்றி கவிக்கு அவ்வளவு பகைவனில்லாதவரே ;-)
//மர நிழலில் ஒதுங்கினேன்
மர அசைவில்
நேற்று சேகரித்ததிலிருந்து
எனக்கு மட்டும் மழை//
கவிதை
//வானத்தின் ஜன்னலில்
எட்டிப்பார்க்கும் சூரியன்
நட்சத்திரம்//
அறிவியல் பாடம்
//ஒட்டக நிழலில்
தொழுகை
பாலைவனம்//
வாழ்க்கை
//நாய்களுடன் போட்டி
எச்சில் இலைக்கு
மனிதன்//
மனிதம்
அன்புடன்,
மா சிவகுமார்
நன்றி சிவகுமார் அண்ணா.
//என்னையே தொடர்ந்தாலும்
நெருங்கி வர முடியாத
நிழல்
//
அட்டகாசம்! எளிய வரிகள். எப்படிவேண்டும் என்றாலும் உருவகித்துக்கொள்ளலாம். பழைய நினைவுகள்: நிழல்கள்.
அருமை ஜெஸிலா.. வலைப்பூவோடு நின்று விடாதீர்கள். இவற்றையெல்லாம் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வாருங்கள்.. கவிதையுலகில் உங்களுக்கு ஒரு ஒளிமயம் காத்திருக்கிறது. இப்போதெல்லாம் இது என்னவென்று யோசிக்க வைப்பதைப் போலத்தான் அதாவது விடுகதை போலத்தான் கவிதை எழுதுகிறார்கள். அது மக்களுக்குப் புரிகிறதா அல்லது புரிய வேண்டுமா என்பதிலெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை. அதனால் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் எழுதித் தள்ளுகிறார்கள். உங்களுடைய கவிதைகள் அப்படியல்ல.. ஹைக்கூ மாதிரி என்றோ அல்லது ஹைக்கூ என்றோ நேரடியாகவே சொல்லிவிடலாம். அவ்வளவு விஷயங்கள் உள்ளன. தயவு செய்து வலை உலகத்திலிருந்து நிஜ உலகத்திற்கு தாவுங்கள்.. அல்லது பறந்து செல்லுங்கள்.. சீக்கிரமாக..
நன்றி எம்.எஸ்.வி. முத்து & உண்மை தமிழன். //தயவு செய்து வலை உலகத்திலிருந்து நிஜ உலகத்திற்கு தாவுங்கள்.. அல்லது பறந்து செல்லுங்கள்.. சீக்கிரமாக..
// அப்போ வலை உலகம் பொய்யா? ;-)
வலையுலகம் பொய்யல்ல.. அதன் இடம் குறுகியது.. கணிணி பயன்படுத்துபவர்கள் மட்டுமே படிக்கக் கூடிய அளவிற்குள் சுருங்கிவிடும் உங்களது கவிதையுலகம். இதைத் தாண்டிச் செல்லுங்கள் என்றுதான் சொன்னேன்.. நாளைய உலகில் தமிழ் மொழிக் கவிஞர்கள் பட்டியலில் ஜெஸிலாவின் பெயரும் இடம் பெற வேண்டும் என்பது என்னுடைய அவா. அதைத்தான் நான் அப்படி குறிப்பிட்டேன். தாவுங்கள்.. சீக்கிரமாக என்று சொன்னதற்குக் காரணம்.. காலம் முன்னைவிட மிகவும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனூடேயே உங்களை மாதிரி கவிஞர்களும் பின் தொடர வேண்டும். அப்படி சென்றால்தான் படைப்பாளிகளுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுக்கும் வெற்றி நிச்சயம்.. புறப்படுங்கள்..
no words to make a word for you...
by
Peer Mohamed.N.M.
please refer my kavidhai
how i can send
reply me in my e-mail ID.
peer_n_mohamed@yahoo.com
வாழ்த்துக்கள் ஜெசீலா....
வார்த்தைகள் புதிது,
சிலரின்
வாழ்க்கையைப்போல்...
கவிதை என்பது
சிலையை வடிக்கும்
சிற்பியை பொறுத்தது...
என்றும் பிரியமுடன்..
N.M.PEER MOHAMED
உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி பீர்.
நான் ஓரு கவிஞன் என்று என்னை சொல்லிக்லொள்வதில்லை.
ஆனால் நான் கொஞ்சமா எழுதுவேன்.
நான் எழுதிய கவிதைகளில் சிலதை உங்களுக்கு அனுப்ப நினைக்கிறேன்.
படித்து பாருங்களேன்..
please refer my poet, and comant my knowledge.
and what u think abt me?
r u feel i am a poet r not?
வானம்
வசப்படுமாம்-
நம்பிக்கை இல்லை,
நம் மீதல்ல
வானத்தின் மீது...
வாழ்த்துக்கள்
வாழவும் வைக்கும்
வாழாமலும் போகும்....
so take care and go ahead...
entrum priyamudan
COLACHEL N.M.PEER MOHAMED...
K.S.A
//உங்களுக்கு அனுப்ப நினைக்கிறேன்.
படித்து பாருங்களேன்..// நானும் பெரிய கவிஞரெல்லாம் இல்லீங்க ஏதோ என் புத்திக்குப்பட்டதை கிறுக்கிக்கிட்டு இருக்கேன் அவ்வளவுதான். நீங்க கவிஞனா இல்லையான்னு நான் எப்படி சான்றிதழ் தர முடியும்? :-)
நன்றி பீர் உங்கள் வாழ்த்துக்கு. வானத்தின் கீழ்தான் நாம் வாழ்கிறோம் என்பதை நம்பினால் சரி :-)
வாவ்... கலக்குங்க!
அஸ்ஸலாமு அலைக்கும் வ றஹ்ம.
ஹாய் ஜெஸீலா,
இந்த வார ஆனந்த விகடனில் உங்கள் வலைத்தளத்திற்கான அறிமுகம் கண்டேன், மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. ஏனெனில் 2 தினங்களுக்கு முன்னர்தான் எதேச்சையாய் உங்கள் வலைத்தளத்தில் கை பதித்தேன். உங்கள் விமர்சனங்களையும்,சிறுகதைகளையும்,கவிதைகளையும் பற்றி
பாராட்டி எழுதியிருந்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..
வாழ்த்துக்கள்...
தொடர்ந்து இறைவன் அருள் புரியட்டும்..
என்றும் பிரியமுடன்,
“குளச்சல்” பீர் முகம்மது. என்.எம்.
தம்மாம்.
G1WC1w Hello! Great blog you have! My greetings!
Post a Comment