ஆதங்கம்!

புது வண்டியில்
முதல் விபத்து
எலுமிச்சை
**

பால் அபிஷேகம்
பட்டினியில் அழுதது
பச்சிளங்குழந்தை
**

உடையாமல் இருக்க
உடைத்தார்கள்
பூசனிக்காய்
**

நீ தூங்கினாலும்
சிணுங்கி எழுப்பியது
கொலுசு
**

மழையில் நனையாத
பூ
முழுநிலா
**

மழையில் நனையாமல் இருக்க
நான் நனைந்தேன்
குடை
**

உபசரித்து விரித்தது
முடிந்த பின்
எச்சில் இலை
**

காலி பணப்பை
வெதும்பும் திருடன்
கடன் அட்டை
**

உச்சரிப்பு சிதைவு
இந்திப் பாடகர்
பிரபலமானது தமிழ்பாட்டு
**

நூறுநாள் ஓட்டம்
தமிழ்படம்
ஆங்கிலத்தில் தலைப்பு
**

13 மறுமொழிகள்

சொன்னது...

///
பால் அபிஷேகம்
பட்டினியில் அழுதது
பச்சிளங்குழந்தை
///

இதை என்றுதான் உணரப் போகிறார்களே மனிதர்கள்...

சொன்னது...

//உடையாமல் இருக்க
உடைத்தார்கள்
பூசனிக்காய்//

அதை உடைப்பதால், சாலையில் செல்லும் பலருடைய வாகனங்களும், கைகால்களும் உடைகிறது.

சொன்னது...

//புது வண்டியில்
முதல் விபத்து
எலுமிச்சை//

இது நல்லாயிருக்கு. ஆனா ரொம்ப ரிவர்ஸ் மெடபரோட போராடறீங்க!

சொன்னது...

குமரன் நீங்கள் உணர்ந்திருக்கிறீங்கல அது போது. நாளடைவில் மற்றவர்களும் திருந்துவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

ராஜ வைராக்கண்ணு, ரொம்ப சரியா சொன்னீங்க.

நன்றி பெனாத்தல் சுரேஷ். அது என்ன மெடபரோட? பிழையா அல்லது எனக்கு புரியவில்லையா?

சொன்னது...

\\மழையில் நனையாத
பூ
முழுநிலா\\

நிலவை மலராக்கியது ஓர் உயர்ந்த கற்பனை, வாழ்க!

சொன்னது...

very excelent

சொன்னது...

ஜெஸி,
வணக்கம்.

//பால் அபிஷேகம்
பட்டினியில் அழுதது
பச்சிளங்குழந்தை

உச்சரிப்பு சிதைவு
இந்திப் பாடகர்
பிரபலமானது தமிழ்பாட்டு

நூறுநாள் ஓட்டம்
தமிழ்படம்
ஆங்கிலத்தில் தலைப்பு //

நான் படித்து இரசித்தவை. அழகாக இன்றைய தமிழ்ச் சமூகத்தின் அலங்கோலங்களை வெளிச்சம் போட்டுக்காட்டும் வரிகள்.

சொன்னது...

நன்றி அழகு.

ஷொக்கன். பெயரே புதுவிதமாக இருக்கிறது. நீங்களும் புதிய சிந்தனைக் கொண்டவராகதான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழ் எழுத்துரு இல்லையா? அனுப்பிதரட்டுமா?

வெற்றி வாழ்த்தியமைக்கு நன்றி. ஜெஸி என்று என் வீட்டு பெயரில் அழைத்தது பிரம்மிப்பாக இருக்கிறது. :-) நன்றி.

சொன்னது...

//புது வண்டியில்
முதல் விபத்து
எலுமிச்சை//
இது மிக நல்லா வாந்திருக்கு ஜெசிலா

சொன்னது...

நன்றி கோவி.க. நல்ல வந்திருக்குன்னா எப்படி? என்னென்னவோ போட்டு சமைச்சேன் நல்ல வந்திருக்கு என்ற மாதிரி ;-)

சொன்னது...

//ஜெஸிலா சொன்னது...
நன்றி கோவி.க. நல்ல வந்திருக்குன்னா எப்படி? என்னென்னவோ போட்டு சமைச்சேன் நல்ல வந்திருக்கு என்ற மாதிரி ;-) //

கூட்டுதான்... நல்லா வந்திருக்கு... சொல் கூட்டு, பொருள் கூட்டு

சொன்னது...

ஜெஸிலா,

சமூக அவலங்களை படம் பிடிக்கும் முயற்சிகளுக்கிடையே நெருடும் முந்திரிப் பருப்புகளாய் 4, 5, 6 கோபம் தவிர்த்தக் கருத்துகள். நன்றாக உள்ளன.

அன்புடன்,

மா சிவகுமார்

சொன்னது...

மிக்க நன்றி சிவகுமார்.

Blog Widget by LinkWithin