அய்கூ வடிவம்

தொண்டையில் மேகம் கூடி
கண்களில் மழை வந்தது
தேங்கி நின்றது பிரிவு.
**

இரு கைகளுக்கு நடுவே
நகர்கிறது நாட்கள்
குயவன்.
**

சூரியனுக்கு கீழ்
எல்லாம் வெளிச்சம்
கடற்கரை குளியல்
**

மயங்க வைத்ததும் அதுதான்
காயப்படுத்தியதும் அதுதான்
சுழறும் நாக்கு.
**

3 மறுமொழிகள்

சொன்னது...

//சூரியனுக்கு கீழ்
எல்லாம் வெளிச்சம்
கடற்கரை குளியல்//
ஹைக்கூ அருமை அருமை ... நான் கூட இதே பொருளில் ஒன்று எழுதினேன் அது...

திரை ?

திரை அரங்கில் எல்லாம்
வெளிச்சம் போட்டுக்
காட்டப்படுகிறது

சொன்னது...

ஹைக்கூ பக்கமும் கலக்கறிங்களே!!

""என் ஜன்னல் வழி பார்வை
கலிலியோவின் உலகை
சதுரமாக்கியது""

இது நான் எழுதலிங்க உலக நாயகன்
எழுதினது.

நல்லா இருந்ததால போட்டேன் தப்பா எடுத்துக்க வேணாம்

அன்புடன்
தம்பி

சொன்னது...

கோவி. கண்ணன் நிஜமாகவே எல்லாம் வெளிச்சம் போட்டுத்தான் காட்டுறாங்க.

உமா கதிர் பாராட்டுக்கு நன்றி. தப்பா எடுத்துக்க என்ன இருக்கு?

Blog Widget by LinkWithin