Wednesday, July 26, 2006

லேசா லேசா...

பூக்களின்
வேர்வை
பனித்துளிகள்
**

அலை அடித்து
கலைந்த கற்பனை
மணல் வீடு
**

விலைப்போகாத
வேதனைக்குரிய விளைச்சல்
முதிர்க்கன்னி
**

காக்கை பயந்ததோ இல்லையோ
குழந்தையின் வயிறு நிறைந்தது
சோலைக்காட்டு பொம்மை
**

என் பெயர்
கரைந்தது
அவள் நாக்கில்
**

இந்த அனாதையுடன்
விளையாட வந்துவிடு
தாயில்லா பறவையே!
**

குஞ்சு பறவையே
பறந்து போய்விடு
பூனை வரும் நேரம்
**

உயரத்திலிருந்து விழும்
உனக்கு வலிக்கவில்லையோ
அருவி
**

16 comments:

சிவகுமார் சுப்புராமன் said...

மிக மிக நன்றாக உள்ளது. மேலும் நல்ல கருத்துக்கள்..

ப்ரியன் said...

எல்லாமே அருமையான ஹைக்கூக்கள் ஜெஸிலா ஆனாலும் இவை எனக்கு மிகப் பிடித்திருக்கின்றன

/*
பூக்களின்
வேர்வை
பனித்துளிகள்
*/

/*
அலை அடித்து
கலைந்த கற்பனை
மணல் வீடு
*/

/*
காக்கை பயந்ததோ இல்லையோ
குழந்தையின் வயிறு நிறைந்தது
சோலைக்காட்டு பொம்மை
*/

/*
என் பெயர்
கரைந்தது
அவள் நாக்கில்
*/

- இது கிளாசிக் :)

/*
இந்த அனாதையுடன்
விளையாட வந்துவிடு
தாயில்லா பறவையே!
*/

நன்றி

- யெஸ்.பாலபாரதி said...

//என் பெயர்
கரைந்தது
அவள் நாக்கில்//
இந்த ஹைக்கூவை பெண் மொழியில் (அவளுக்கு பதில் அவன்)பதிவு செய்து இருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்பது என் எண்ணம்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
//என் பெயர்
கரைந்தது
அவள் நாக்கில்//
இந்த ஹைக்கூவை பெண் மொழியில் (அவளுக்கு பதில் அவன்)பதிவு செய்து இருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்பது என் எண்ணம்.
///

இல்லீங்க பெண்ணிடம் இருந்து வந்தாலும் ஆணின் பார்வைதான் யதார்த்தமாக இருக்கிறது இந்த கற்பனைக்கு

- யெஸ்.பாலபாரதி said...

//இல்லீங்க பெண்ணிடம் இருந்து வந்தாலும் ஆணின் பார்வைதான் யதார்த்தமாக இருக்கிறது இந்த கற்பனைக்கு//

இல்லீங்க குமரன்..
பெண் மொழியில் ரசித்துப் பாருங்கள் அந்த சுகமும் அழகாய்த் தான் இருக்கிறது.

பாலச்சந்திரன் said...

தலைப்பு தான் லேசா லேசா
ஆனால் வரிகளோ ___________

வாழ்வில் வளம் வாழ்த்துக்கள்...

ஏ.எம்.ரஹ்மான் said...

//விலைப்போகாத
வேதனைக்குரிய விளைச்சல்
முதிர்க்கன்னி//

இவர்களைப் போல் எத்தனை பேர் மனக்கண்ணீரில் மூல்கியுள்ளநர்

ஜெஸிலாவின் சிந்தனைகள் தொடற வாழ்த்துக்கள்

Jazeela said...

மிக மிக நன்றி சிவகுமார்.

ப்ரியன் மொத்தத்தில் ஒரு சிலதை தவிர எல்லாம் பிடிச்சிருக்குன்னு சொல்றீங்க, நன்றி.

பாலசந்திரன், வரிகளோன்னு கோடிட்டீங்க. இடத்தை நானே நிரப்பிக்கிடட்டுமா?

குமரன் மற்றும் பாலபாரதி, அதுக்கென்னப் போச்சு யாருக்கு எப்படி பிடிச்சிருக்கோ அப்படியே வச்சிக்கோங்க ;-)

Unknown said...

உங்கள் வலைப்பூவில், எனது முதல் பார்வை.

முதல் பார்வையிலேயே மனதைக் கவர்ந்துவிட்டது லேசா லேசா (ஆனால் மிகவும் அழுத்தமாக).

Unknown said...

//உயரத்திலிருந்து விழும்
உனக்கு வலிக்கவில்லையோ
அருவி//

அருமை, ஜெஸிலா!

வெற்றி said...

ஜெஸி,

//விலைப்போகாத
வேதனைக்குரிய விளைச்சல்
முதிர்க்கன்னி //

உண்மை. வரதட்சனை எனும் கொடுமையால் எத்தனையோ ஏழைப்பெண்களின் வாழ்வு நாசமாகிப் போகிறது. சாதிப்பிரிவினைகள் போல எமது தமிழ்ச்சமுதாயத்தில் இருக்கும் இன்னுமொரு அநீதி இந்த சீதனக் கொடுமை. எமது சமூகத்தின் அவலத்தை அழகாக வெளிச்சம் போட்டுக் காட்டும் வரிகள் இவை. பாராட்டுக்கள்.

Jazeela said...

நன்றி ஏ.எம்.ரஹ்மான். துபாய்வாசி முதல் பார்வையோடு நிறுத்திவிடாதீங்க. நன்றி. வென்கட்.

Anonymous said...

ஜெஸி, அருமையான உங்கள் எழுத்துக்கள் தொடர என் வாழ்த்துக்கள்.

Anu said...

மிக மிக நன்றாக எழுதி இருக்கிங்க

பழனி said...

எல்லாமே அருமையான வரிகள் ... இருந்தும் நான் மிகவும் ரசித்த வரிகள் ...

/*என் பெயர்
கரைந்தது
அவள் நாக்கில்

இந்த அனாதையுடன்
விளையாட வந்துவிடு
தாயில்லா பறவையே */

நிலாரசிகன் said...

//இந்த அனாதையுடன்
விளையாட வந்துவிடு
தாயில்லா பறவையே! //

அருமையான கவிதை!...

//அலை அடித்து
கலைந்த கற்பனை
மணல் வீடு
//

இது பலகோணங்களில் சிந்திக்க
தூண்டுகிற கவிதை! அருமை!!

நன்றி..
நிலாரசிகன்.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி